திங்கள், டிசம்பர் 19, 2011

TIME=KAALAM=KADAVULAI NINAI

காலம்
பரந்த பாரினில்,
பறந்து ஓடுவது காலமே.
காலம் ஓடுவது தெரியாமல்,
காலன் வரும்போது,
கலங்குவதால் யாது பயன்.?
பரந்த உள்ளம் வேண்டும்.
பறந்த உள்ளத்தால்,
பொன்னாசை,
பெண்ணாசை
மண்ணாசை,,
பானங்கள்  மது,
என அலைந்து,
பார் உலகில் வாழ ,
BAARE  பெரிது
 பணமே பெரிது,
என்று பறந்து -திரிந்த காலம்.
தனை மறந்த காலம்.
தள்ளாத வயதில்
தத்தளிப்பது .
பரலோகம் செல்லும் கால
,பறந்த நெஞ்சம்,
பரிதவிப்பதால் ஏது பயன்.
பார் உலகை ,
நினைத்த,
மனம்.,
பாதை தவறி பறந்தது ஏன்?
அருளுலகம் ஒன்று உண்டு,
பொருள் உலகம்    போலி ,என,
உணராமல் போவது ஏன்?
வாழ்க்கை பொருளற்று போனது ஏன்//?
புரண்டு அழுதாலும்
 அழுது புரண்டாலும் ,
பறந்த   காலம்
 பறந்தது தான்.
இது அனுபவ சித்தர்கள்,
உணர்ந்து  காட்டிய  ,
உன்னத வழி.
காலத்தே பயிர் செய்.
காலம் பொன் போன்றது.
காற்று உள்ள போதே தூற்றிக்கொள்.
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்.
பறக்கும் மனதை கட்டுப்படுத்த,
ஓம் , ஓம் , ஓம், என்றே,
ஐந்து நிமிடங்கள்,
ஐயனை அகில நாதனை,
ஒருமையுடன் நினைத்தால்,
காலத்தை பறக்கவிட்டு,
பரந்த பாரில்,
பரிதவிக்க விடாது,,
பச்சை வண்ணனும் ,
நீலகண்டனும்,
யானை முகத்தொனும்,
சேவல் கொடியோனும்,
காப்பர் பார்.
அருவமும் உருவமும்,
அவதாரமும்,
ஆகி  மெய் ஞானிகள்,
காட்டியவழி,
கடமையுடன்
கடவுளை நினை என்பதே.

கருத்துகள் இல்லை: