செவ்வாய், பிப்ரவரி 07, 2012

thaippoosam

தைப்பூசம்
எனது சொந்த ஊர் பழனி என்பதால்  தைப்பூசம்  பற்றி நான் அறிந்ததை ஆறுமுகன் அருளால் கூற விரும்புகிறேன்.
தைப்பூசம் என்பது மிகப்பெரும் திருவிழா.இங்கு  பாத  யாத்திரை மிகவும்  பிரசித்தம்.சென்னையிலிருந்தும் ,
காரைக்குடியிலிருந்தும் பாத யாத்திரை பரம்பரை பரம்பரையாக  வருவர்.நெற்குப்பையிளிரிந்து என்தாத்தவிடம் படித்த சிங்காரம்
  செட்டியார் ,ராமநாதன் செட்டியார் போன்றவர்கள்  வருவர்.எங்கள் பழைய ஓட்டு வீட்டில் பக்திப்பரவசமாக வந்து செல்வது என் தாயார் கூறி
கேள்விப்பட்டுள்ளேன்.பக்கத்துத் தெரு ஆவணிமூலவீதியில்  நகரத்தூசெத்தியார் பன்னிரெண்டாம் செட்டியார் madam  உள்ளது .அங்கு வேல் மிக சக்திவாய்ந்தது என கேள்விப்பட்டுள்ளேன்u.அவ்வாறே செட்டி பஞ்சாமிர்தமும் நன்றாக இருக்குமாம்.
அவர்கள் நடந்து வந்த களைப்பே அறியாமல் பக்தி
பரவசத்தில்  தன்னை மறந்து லயிப்பதை காண
பக்தி இல்லாதவரும் பக்திக்கடலில் மூழ்குவர்.
அவ்வாறே சென்னை போர்டர் தோட்டம் 24 
 மனை தெலுங்கு செட்டியார்களும்
முருகப்பெருமானை  தன் ப்ரத்யக்ஷ தெய்வமாக வழிபடுவர்.
கொழுமம் அய்யர்வாள் சத்திரத்தில் அன்னதானம் மிக தெய்வீக மனத்துடன் நடைபெறும்.அங்கு எழும்
முருகா,அன்னதானப் பிரபுவே  என்ற  முழக்கம்,வெள்வேல் வெற்றிவேல்  என்ற பக்தி கோஷங்கள் மெய்மறக்கச்செய்யும்.பல ஏழை பிராமணக் குடும்பங்கள் அங்கேயே தங்கி வயிறார
உணவருந்தி முருகனருளால் ஓய்வெடுப்பதும் ஆனந்தமே.
அரஹரா  என்ற  இறை முழக்கம் காவடி எடுத்துவரும் கூட்டம்,முருகனுக்கு ஆரோஹரா,
வெற்றிவேல் முருகனுக்கு,ஞானவேல் முருகனுக்கு ,சக்தி வேல் முருகனுக்கு, ஆரோஹரா
என்ற கோஷம் ,காவடிகள் தான் எத்தனை வகை.பால்   காவடி,பன்னீர்க்காவடி,மச்சக்காவடி,
சர்ப்பக்காவடி,சேவல் காவடி,என எத்தனை காவடிகள்.வழித்துணைப் பாடல்கள்  என்று முருகனையே அவர்கள் அழைத்து வந்து பழனியில்
எழுந்தருளச்  செய்யும் காட்சி.
பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து நான்கு ரத வீதியிலும் தேர் உலா.அதில் அமர்ந்து காட்சியளிக்கும் முருகன்,வெள்ளித்தேர் என அனைத்தும் ஆன்மீகத்தின் அருமை பெருமைகள் 
நேரில் காண கண்கள் கோடி வேண்டும்.லக்ஷோபலக்ஷம்   மக்கள்   தரிசனம் செய்ய திரு முருகன்  அருள் பாலிக்கிறார்.
அங்கு பல சித்தர்கள் .அதில் தற்போது   பிரசித்தம்    சாமியார்.ALUKKU.
ESWARABHATTA,சது ஸ்வாமிகள்,பாலயாஹ் சுவாமிகள்,KANNU சுவாமிகள்,
தங்கவேல் சுவாமிகள்,ர.த.தேவர். போன்றவர்கள் பிரசித்தம்.
SITHTHA வைத்தியத்தில் ஆர்.எம்.கே,ஓம் சிவசுப்ரமணியம்.யாழ்ப்பானசாமி ,தண்டபாணி முதலிய வைத்திய சாலைகள் பிரசித்தம்.
INRU தென்னகத்தில் மாமன்  மாலவனுக்கு அடுத்து  பக்தர்களின் 
காணிக்கை  சிரத்தையோடு போடுவது பழனி உண்டியலில் தான்.
பழனி யில் மற்றொரு புராதனக் கோயில் பெரியஆடையார் கோயில்.
பால சமுத்திரம் பெருமாள் கோயில்.,கீழரத  வீதி  மாரியம்மன் கோயில் மாசிமாதம் அம்மன் திருவிழா தீச்செட்டி  எடுத்தல் மிகவும்
பிரபலம். மேலரத வீதியில் பெருமாள் கோயில்,வைரவன்  கோயில் ,
பல  இனத்தார்களின்   மடாலயங்கள்,பட்டத்துவினாயகர் கோயில் வேணுகோபால் சாமி  கோயில்,  சௌடாம்பிகை கோயில் திருவிழா பிரபலம்
தேவான்கர்கள் மடாலயம்.
தைப்பூசம் அனைத்து இன மடாலயங்களிலும் வரும் கூட்டம் முருகன்
அருளுக்கும்,கருணைக்கும் சான்று.ஆண்டு முழுவதும் விழாக் கொண்டாட்டம்