பிள்ளையாரிடம் ஒரு பிரார்த்தனை.
ஆற்றங்கரையில் பிள்ளையார்,
அவர் முன் தோப்புக்கரணம்.
அரசரடி பிள்ளையார்,
கம்மாக்கரை பிள்ளையார்,
கல்வி தரும் பிள்ளையார்,
கலக்கம் தீர்க்கும் பிள்ளையார்.
பிணி தீர்க்கும் பிள்ளையார்.
தடை தீர்க்கும் பிள்ளையார்.
மகிழ்ச்சிதரும் பிள்ளையார்.
சர்வ சக்திதரும் பிள்ளையார்.
உன்னிடம் ஒரு வேண்டுகோள்.
கடற்கரை ஓரம் காலையில் ,
நடந்தேன்.
உன் பாதிமுகம் கடல் அலைகளால் ,
அங்கும் இங்கும் அலைபாயக்கண்டேன்.
அகம் நொந்து அங்கிருந்து
ஈரடி எடுத்துவைத்தேன் .
ஒரு செவியும் பாதி தொந்தியும் ,
ஒதுங்கி இருக்கக்கண்டேன்.
அதனருகில் மலம் கழிக்கும் ,
மனிதனைக்கண்டேன்.
அங்கங்கு உன் சிதறிய உடல் கண்டு ,
கலங்கினேன்.
உன் சிலையை இப்படி,
கடலில் கரைக்கிறேன் என்று ,
பக்தி என்றும் பூஜை என்றும் ,
கொண்டு சென்ற அழகான காட்சி ,
கண்முன்னே தோன்றியது.
அச்சம் போக்கும் அருள்பொழியும் ,
உனது சிலைக்கு காவலர்கள்
காவல் வேண்டப்பட்டது.
அருகில் சில ஏழைக்குழந்தைகள்.
உன் சிலை பத்து இருபது ஆயிரம்
ஆனால்
அக்குழந்தைகள் கண்களில் ஏக்கம்.
உனது சிலை ஊர்வலத்தில்.
பயம்-பயம்-பயம்
உன் சிலைத் தேரில் ,
வாலிபர்கள் .
பக்திக்கா
கலக்கம் உண்டாக்கவா,
புரியவில்லை.
அவர்கள் கைகளில் ,
பருத்த தடிகள்.
எத்தனை உன் சிலைகளோ ,
அத்தனை காவலர்கள்,
பதட்டத்துடன்,
என்ன நடக்குமோ எது நிகழுமோ
௨௦௦ உன் அழகு உருவங்கள்,
சராசரியாக ௨௦௦ நான்காயிரங்கள்.
உப்புக்கடலில் தூக்கிஎரிய ,
உதிரி பாகங்களாக
கரையில் ஒதுங்கி
அசிங்கப்பட.
பிள்ளையாரப்பா!!பிள்ளையாரப்பா!!
மக்களுக்கு ,
அறிவைக்கோடு.
ஞானம் கொடு.
பக்தி என்பது
உன் உருவத்தை கரைக்கவோ,
சின்னா பின்னமாக்கவோ
இல்லை என்பதை ,
உன் பக்தர்களை,
பக்தி என்னும் பெயரில்,
உன்னை சின்னா -பின்னப்படுதி,
உன்னை
கஜமுகா சூரனாக
சிதைக்கும்
பகதர்களை,
நெறிப்படுத்தி ,
ஒரு தெளிவைக்கோடு.
புத்தர் சிலை உடைத்தவர்களுக்கும்,,
உன்சிலை அழகாய் கடலில்,
தூக்கி எரிவோருக்கும்
என்ன வேறுபாடு/?
உருவக்கலைப்பு,
கருக்கலைப்பு ஆகாதா?
கலங்கும் பக்தனுக்கு,
அருள் புரிந்து,
உன்னைத் துதித்து ,
கடலில் எரிவோரின்
எண்ணம் சிந்தனைகளை மாற்று.
பக்தியின் பண்பை அருள் வந்து கூறு.