புதன், ஆகஸ்ட் 07, 2013

ஆகையால் ஆன்மீக விஷயத்தில்.........

ஆன்மிகம்  என்பது மக்களின்  புற ஆசைகளை கட்டுப்படுத்தும்

நெறி. இதில் சுயநலம் மேலோங்கும்  போது அதில் அவநம்பிக்கை

ஏற்படுகிறது.

ஆன்மிகம் ஆஸ்தியைத் தேடும் போது  அந்த சக்தியை இழந்து அவமானம்

நேரிடுகிறது.

ஆன்மீகப் பெரியோர்கள் மக்களிடம் ஒழுக்கத்தைப் பிரதானப் படுத்தினர்.

தனிமனித ஒழுக்கம் அவனை தீய ஆசைகள் ,எண்ணங்கள் ,கோபம் ,ஹிம்சை

பேராசை ஆகியவற்றில் இருந்து வெளியே இழுத்துவந்தனர்.

அவர்கள் செய்யும் நற்காரியங்களுக்காக பணம் சேர்ந்தது.அவர்கள் தானம்,தர்மம் செய்தனர்.மற்றவர்களையும்  நேரடியாக செய்ய வைத்தனர்.

ஒருகுறிப்பிட்ட ஆஷ்ரமம் ,மடாலயம் அந்த தோற்றுவித்தவரின் ஜீவ சமாதிக்குப்பின்  அவப்பெயர்களுக்கு ஆளாகிறது.காரணம் அதன் பின் அவர் வழியில் வந்தவர்களின் சுயநலமே.

அந்த சொத்தை அனுபவிக்க வேண்டும் என்று சண்டை சச்சரவுகள்.வழக்கு.

அநாச்சாரங்கள்.

இதை எல்லாம் சிந்திக்காமல் குருட்டு நம்பிக்கையில் பலர் இருப்பதால்

போலி ஆன்மீகவாதிகள் தோன்றி சொத்துக்கள் சேர்த்து சுகபோகமாக வாழ்கின்றனர்.

பொருள் சேரச் சேர அவர்களின் தெய்வீகத் தேடல் ,ஆன்மீக  நாட்டம்  அலௌகீக கோட்பாடுகளை  லௌகீக சுகத்திற்குப் பயன் படுத்துகின்றனர்.



இது ஹிந்து மதத்தில் அதிகம்.இருப்பினும் இந்த போலிகள் ,போலி ஜோதிடர்கள்  அதிகத்துக்கொண்டே இருக்கின்றனர்.இதில் படித்தவர்,படிக்காதவர்,உயர் பதவியில் உள்ளவர்கள் என்ற வேறுபாடே இல்லை. காரணம் போலிகள் பலரை தன சீடர்களாக அவர் புகழ்பாட வைக்கும் தந்திரம். அனால் அவர்கள் காளான்கள் போல் தோன்றி மறைந்து விடுவர்.

தோன்றி மறைவதற்குள் ஏமாறுபவர்கள் அதிகம்.

ஆகையால் ஆன்மீக விஷயத்தில் மிக்க ஜாக்கிரதை ஆக இருக்கவேண்டும்.

அதற்காக நாம் சத்சங்க  விஷயத்தில் நல்லவை நடக்கின்றன என்பதை
மறக்கக் கூடாது,


வடக்கில் தலை வைத்துப் படுக்கக் கூடாது. அறிவியல் விளக்கம்.


..
FILE

இந்தியா போன்று பூமத்திய ரேகைக்கு மேலே உள்ள நாடுகளில் இருப்பவர்கள் வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது. ஏனெனில் வடக்கே காந்த ஈர்ப்பு இருக்கிறது. வடக்கே தலைவைத்துப் படுத்தால் தேவையில்லாமல் உங்கள் மூளைக்குள் அதிக ரத்தம் பாயும். அப்போது உங்களுக்கு மனப் போராட்டம் போன்றவை ஏற்படலாம். 

மிகவும் வயதானவர் வடக்கே தலைவைத்துப் படுக்கும்போது, ரத்தம் மூளைக்குள் அதிகமாகப் பாய்வதால் அவர் தூக்கத்திலேயே உயிர்விட வாய்ப்பு இருக்கிறது. மூளைக்குச் செல்லும் நரம்புகள் மயிரிழை போன்றவை. எனவே ஒரு சொட்டு ரத்தம் அதிகம் சென்றாலும் மூளை நரம்புகள் வெடிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதனால் பகலானாலும் சரி, இரவானாலும் சரி, வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது.