மனிதர்களின் பாவங்களும் மனோ பாவங்களும்.
நமது பாரத நாட்டில் அறம் வளர்ந்தன.தர்மம் செழித்தன.ஆலயங்கள் கலைநயமிக்கதாக கட்டப்பட்டன.பாவங்களுக்கான தண்டனைகளும் பறைசாட்டப்பட்டன. கருட புராணம் எழுதப்பட்டது.
ஆலயங்களில் ஆயுதங்களுடன் கூடிய பயங்கரமான காளிசிலைகள்
அமைக்கப்பட்டன .நரசிம்மாவதார அச்சுறுத்தும் கதைகள் கூறப்பட்டன.
ஆனால்
இன்று பக்திக்கான கோயில்க ள் கோடிக்கணக்காக புதிய முறையில்
கட்டப்படுகின்றன.ஆனால் எங்குமே கழிப்பிடம் இல்லை.
ஆலயத்தின் மதில் சுவரோரமே கழிப்பிடம்.
தர்ம சிந்தனையாளர்கள் பல ஏக்கர் நிலம்,நகை,வீடுகள் என்று அறக்கட்டளைகள் விட்டுச் சென்ற புராதனக் கோயில்கள்
பராமரிக்கப்படவில்லை.
ஆனால் கோயில் நிலங்கள் தனியார் சொத்தாக மாறிவருகின்றன.
சிதிலமடைந்த அருங்கலைப் பொக்கிஷமான கோயில்கள்
கவனிப்பாரற்று,அதன் கல்வெட்டுகள் மறைந்து வருகின்றன.
பாவ-புண்ணியம் பேசும் மத வாதிகள் அரசியல் வாதிகளுக்கும் ,ஆக்கிரமப்பாளர்களுக்கும் பயந்தோ,சுயநலத்தாலோ மௌனமாக உள்ளனர்.
ஆலயம் என்ற பெயரில் கொள்ளை அடிப்பது,வசூலிப்பது என்ற ஒரு கூட்டம் உள்ளது.
இன்று நாம் இந்த பாவிகளின் மனோபாவம் மாற
புராதனக் கோவில்களின் இறைவன் மீண்டும் எழ
இறைவன் சொத்தை தன் சொத்தாகக் கருதும்
பாவ நிலை மாற மனோபாவங்கள் புனிதமடைய
பிரார்த்திப்போம்.
ராமநவமி அறம் செழிக்க,நால்லோர் வாழ
பாவங்கள் கடும் தண்டனை பெற பிரார்த்திப்போம்.