வெள்ளி, ஜூலை 25, 2014

அன்பு

அன்பு  எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்கும் 

ஒரே மாதிரி அல்ல.

நம்மை மட்டும் நேசிக்கவேண்டும் 
நாம் சொல்வதைக்கேட்கவேண்டும் 
என்பது ஒரு ரகம்.

நம்மையும் நம்மை சுற்றியிருப்பவரையும் 

மகிழ்விக்க பொருளுதவி செய்தால் தான் 

நம் மீது அன்பு என்பது ஒரு ரகம்.
வில்லையே என்பது ஒரு ரகம்.
 நாம் சொல்வதெல்லாம் கேட்கவில்லையே அதனால் அன்பு இல்லை என்று நினைக்கும் ஒரு ரகம்.
செய்நன்றி காட்டி அன்பு செலுத்தவில்லையே என்று வருந்தும் அன்பர்கள் ஒரு ரகம்.
கொடுத்தால் தான் அன்பு என்பது ஒரு ரகம்.
நாம் செய்த தியாகம் உணர்ந்து அன்பு  செலுத்தவில்லையே என்பது ஒரு ரகம்.

எவ்வளவுதான் அவமானம் செய்தாலும் 

தன் உடன்பிறப்புகளின்  அவமானங்கள் சஹித்து
அவர்களுக்கு உதவ வேண்டும் அப்பொழுதுதான் அன்பு என்று கருதுவது ஒரு ரகம்.

நாம் சம்பாதிக்கிறோம் நாம் இஷ்டப்படி செய்வோம் இதில் பெற்றோர் தலையீடு எதற்கு என்று அன்புகாட்டி உள்ள உணர்வு புரியாத ரகம்  


தான் காட்டுவது தான் அன்பு என்று 
 வெறுப்பாக நடந்து கொள்வது ஒரு ரகம்.
நாம் கேட்பதுபோல் செய்யாமல் தான் செய்வதை விரும்பி சாப்பிடவேண்டும் என்று அன்பு காட்டி 
கேட்பவர்கள் விரும்புவதை செய்யாமல்
தான் காட்டுவதுதான் முழு அன்பு என்பது ஒரு ரகம்.

 சுருங்கச் சொன்னால் அன்பை புரிந்து கொள்ளாமல் 
நொந்து வாழ்வதே அதிகம்.
அகவை கூடக் கூட அன்பில் வெறுப்பும் 
புரியாத புதிர்போல் வாழ்க்கை.
அதுவே இவ்வுலகை விட்டுச்செல்ல பந்தங்களை அறுப்பது.இல்லை எனில் பந்தம் விடாது.