திங்கள், டிசம்பர் 19, 2011

DHARMAM

அவனின்றி அசையாது
 உலகத்திலே,-ஆனால்
அநீதிகள் அவனியில் ஏன்?
அதர்மங்கள்
அழிக்கப் படுமுன்,
தர்மங்கள் தவிப்பது ஏன்?
அரிச்சந்திரன் கதை கூறி ,
உண்மையாக இரு  என்றால்,
மாண்டவன் மீண்டு வந்து ,
மகிழ்ச்சிதரும் கூற்று,
அகிலத்தில் சாத்யமா./?
மகாபாரதப்போர் 
அனைத்தும் அழிந்தபின் ,
அமைதி என்றால்,
அதன் பயன்தான் என்ன//?
ராமாயண முடிவு,
சீதை பூமியில் புகுவது தான்.
ராமனின் போர் ,
ராவணனின்   மரணம்
மட்டுமா?
தெயவீகப்போர்களின் ,
வெற்றியும் சூழ்ச்சி,
பொய்,கபடவேடம்,
என்றால் வினா,
தர்மம் வெல்லுமா ,
அகிலத்தில்?
தர்மத்தால்.
விடை,
அவன் லீலை யார் அறிவார்?
தடி எடுத்தவன் தண்டல்காரன்.
அருளில்லதவர்களுக்கு
அவ்வுலகு இல்லை,
பொருளில்லதாவர்களுக்கு
 இவ்வுலகு இல்லை.
இவ்வுலகில் தோன்றியபின்,
 அவ்வுலகு சிந்தனை ,
ஏன்?
ஆகவே,
போலி சாமியார்கள்
,போலி ஆலயங்கள்,
இறைவன் பெயரால் ,
பரிகாரம்,என்ற பெயரால்,
மூடநம்பிக்கை கள்.
பெற்ற தந்தைக்கு
 உணவளிக்காதவன், .
ஊர்பெருமைக்கு
புரோகிதருக்கு
 தானங்கள்.
இவ்வளவிற்கும்
மத்தியில்,
தர்மத்தின்
சத்தியத்தின் மேல் ,
அசையா
நம்பிக்ககைகள்.
நல்லவர்கள்
 சத்தியவான்கள்,
தியாகிகள்,
இருக்கத்தான்
 செய்கிறார்கள்.
அதுதான்,
நல்லார் ஒருவர்
 உளரேல் அவர் பொருட்டு ,
எல்லோருக்கும்
 பெய்யும் மழை.
தர்மம் தலைதூக்கும்.
தர்மம் அமைதி தரும்  தரம்.

.தர்மம் நிறைவு தரும்.தரம்.
தர்மம்  நிரந்தரம்.

கருத்துகள் இல்லை: