சனி, செப்டம்பர் 01, 2012

மக்களும் உடந்தை

அரசியல் 

அரசியல்  
என்பது 
என்றுமே 
ஆளப் பார்க்கும்.
தமிழக அரசியல் 
மனசாட்சி 
அற்ற 
அரசியல்'
உறுதியற்ற 
கொள்கைகள்.
இறைவழிபாடு 
வேண்டாம் 
என்று 
மறைமுகமாக 
வழிபடும் 
தன்மை.
ஹிந்தி வேண்டாம் 
என்று 
தலைவர்கள் 
மட்டும் 
படி க்கும் எண்ணம்.
ஜாதி வெறியால் 
பாரதியை 
பாராட்டாமல் 
பாரதிதாசனை 
உயர்த்தும் 
அரசியல்'
கண்ணதாசனை 
ஓரம் கட்டும் 
ஓரவஞ்சனை.
அரசியலுக்கு 
அப்பாற்பட்ட 
கலை,இலக்கியம்,
அதிலும் 
அரசியல்.
இவர்களின் 
சுயநலத்தால் 
தமிழ் 
அழியும் நிலை.
தமிழ் தமிழ் 
என்று 
அதை 
காதலியாக 
அன்னையாக 
கொஞ்சி 
ஆங்கிலத்தை 
மிஞ்ச  வைத்த 
அரசியல்.
லாபமே 
என்பதற்காக 
கொள்கை 
மாற்றும் 
அரசியல்.
சிலைவைத்தாலும்,
கலைவளர்த்தாலும்,
மலையைத் தூளாக்கினாலும் 
தனக்கு  கோடி 
கிடைத்தால் போதும் 
என 
நேர்மையை ஓரங்கட்டி 
கோடித்துணி தான் 
மிச்சம்  என்பது 
உணராமல் 
கோலோச்சும் 
விந்தை.
இதற்கு 
மக்களும் 
உடந்தை.
அமுதவன் 
புலம்பல் 
ஆயிரமாயிரம் 
நெஞ்சங்களில்.
ஆனால் கோடிக்கு முன் 
அனைத்தும் 
ஊர்க்கோடியில்.