இவ்வுலகில் இறை சக்தி இருக்கிறதே
இதைப் புரியா மக்கள் மாக்களே ஆவரே. '
இன்னல் களைவதும் ,இன்னல் தருவதும்
இறைசக்தியே; இதை அறிந்தும் ,
நிலை இல்லா செல்வத்திற்காக ,
இறைவன் அளிக்கும் பதவிகளை ,
இப்புவி இன்பத்திற்கு தன் இச்சைப்படி
இத்தரணியில் துஷ்ப்ரயோகம் செய்பவர்கள்
இலக்குமிதேவியின் இன்னருள் பெற்றாலும்
இன்னலே மிஞ்சும் காண்பீர்.
கோடிக்கணக்கில் கொள்ளை அடித்த பணம்,
ஆட்சி ,பதவி,இறைநிந்தை,இறைவழிபாடு,
மாட மாளிகை ,ஆனால் வையகம் அம்மா என்றாலும்
தன் பிள்ளை அம்மா என்று சொல்ல இயலா நிலை.
பிள்ளைகள் பல இருந்தாலும் தூற்றுவோர் தூற்றட்டும் என
தன் பிள்ளை பதவிக்காக முறிந்த உறவை ஒட்டி பலியேற்ற நிலை.
இல்லை இல்லை இல்லை என்ற சிலை முச்சந்தியில் வைத்து
சாந்தி சிரிக்க வன்னத்துண்டும் ,பரிகாரமும் செய்யும் நிலை.
ஐயகோ ! ஆவி பிரியும் வேளை ! தன் பாவம் விடாதன்றோ !
இப்புவியில் வாழ கோடிகள் சேர்த்தாலும் .
இறைவன் தரும் தண்டனை மரணம் அன்றோ.
இதில் தப்ப கோடியில் சேர்த்த கருப்புப் பணம் ,
வெறும் கோடித்துணியில் முடியுமன்றோ.
தவறு செய்யா மனிதன் தரணியில் இல்லை -என்றாலும்
தவறை உணர்ந்து நல்லது செய்தால் ,
இறைவனின் கருணை கிட்டுமன்றோ.