அன்பு ஆண்டவன் அருள் ,
ஆனந்தம் ஆண்டவன் அருள்
ஆத்ம திருப்தி ஆண்டவன் அருள்
ஆத்மவிஸ் வாசம் ஆண்டவன் அருள்
ஆஸ்தி வருவதும் போவதும் ஆண்டவன் அருள் .
மழலைச் செல்வம் மகேசன் அருள் .
பதவி ,பட்டம் ,கலைகள் ,இனிய குரல் ,
அழகு , ஒவ்வொன்றும் யாருக்கும்
தாங்கள் நினைத்தபடி வருவதில்லை.
புதிய கண்டுபிடிப்புகள் அதில் ஈடுபாடு உள்ள நாட்டினர்களுக்கே .
பாரத நாடு பக்தி.முக்தி. வாழ்க்கைக்கு உணவுவகைகள்,
ஆரோக்யத்திற்கு ஆன்மிகம் கலந்த மருத்துவ இயல்.
வைகறைதுயில் எழு.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று .
ஆலயம் சென்றால் சிலர் நேரே கர்பகிரஹம் மூலவர் தரிசனம்
புண்ணியம் என்றே எண்ணி செயல்பட்டு
சுற்றுலா பேருந்தில் துரித தரிசனம் செய்கின்றனர்.
ஒவ்வொரு ஆலயத்தின் அமைப்பு ,,விஸ்தீர்ணம் ,ஐதீகம் அறிந்து
வழிபட வேண்டும்.
பழனி ,திருவண்ணாமலை கிரிவலமகிமை ,அதை நகரமாக்கமால்
இயற்கை வளம் மாறாமல் வலம் வரவேண்டும்.
பழனியில் கடம்பவனம் அந்த பூவின் மனம் இன்று அதிகம் இல்லை.
கடம்பவன வாசா கந்தா என்றே போற்றும் நிலை மீண்டும் வரவேண்டும்.
அவ்வாறே அந்த அந்த க்ஷேத்ர மரங்கள் வளர்க்கப்பட வேண்டும்.
புனித க்ஷேத்திரங்கள் வணிகமயமாக மாறி பக்தி குறைந்து லௌகீக
பொருள் வாங்கி ஏமாறுவதிலோ கவர்ச்சியிலோ மனம் ஒருநிலைப்படுவது
ஆலயவழிபாட்டின் முக்கியம். ஒரு புனித க்ஷேத்திரத்தில் வாங்கிய தலை கிளிப் ,பாசி ஊசி பற்றியே பேசாமல் அந்த இறைவனின் புகழைப் பேசும் நிலை
மாறிவருகிறது.
ஆலயங்களின் அனைத்துப்பிரகாரங்களும் பிரதக்ஷனம் செய்யவேண்டும்.
இது பக்தி என்பதுடன் உடற்பயிற்சிக்கு நம் முன்னோர் காட்டிய வழி .
விரதம் என்பது உணவுக்கட்டுப்பாடு.மனக் கட்டுப்பாடு .மாயையின் கவர்ச்சிக்
கட்டுப்பாடு. அதை விடுத்து கட்டுப்படில்லா பக்தி மன ஒருமைப்பாட்டிற்கு
வழிவகுக்காது. மற்றொன்று பக்திக்கு மனமே பிரதானமாகும்.
மன சஞ்சலம் கூடாது.
அரசகுமாரர்கள் துறவறம் பூண்டது பாரத புண்ணிய க்ஷேத்திரத்தில்.
உணவு ,ஆரோக்கியம் இரண்டுக்கே நம்முன்னோர்கள் முக்கியத்துவம் கொடுத்தனர். உடை ,உறையுள் மிக எளிமை.
தூக்கம் கட்டாந்தரையில் படுத்தாலும் வரவேண்டும் என்ற நிலை.
இன்று சிலருக்கு குளிர் சாதான அறையில் பட்டுமெத்தையில் தூங்கினாலும் தூக்கம் வராது.
எளிமை ,இனிமை,தியாகம் ,துறத்தல் ,தானம் ,தர்மம் ,யோகா ,பிராணாயாமம் ,
குடிலில் வசித்தல், இயற்கை உணவு ஏற்றல் ,கசப்பான மருந்து உபயோகித்தல் என்ற நிலையே பக்தி நெறி. இதனால் தான் பாரத தேசம் வளர்ந்த உ லக நாடுகளுக்கு அனைத்துத் துறையிலும் வழிகாட்டி உள்ளது.
ஹோமப் புகையின் மஹத்துவம் ரஷ்யர்களால் வியக்கப்படுகிறது.
திருந ள்ளாரின் அமைப்பு அறிவியல் வியப்புக்கு காரணமாகிறது.
சிதம்பரத்தின் புவி ஈர்ப்பு மையம் ,நாடி நரம்பு விகிதாசார அமைப்பு அதிசயிக்கவைக்கிறது.
நாம் மன ஒருமைப்பாடு தியாகம் நிறைந்த வாழ்க்கையை பின்பற்றுவோம்.
தியானம் களையா தியானம் அதில் இவ்வுலக அதாவது லௌகீகம் குறைந்து
அலௌகீகம் அவ்வுலகவாழ்க் கையில் நாட்டம் செலுத்துவோம்.
அதுவே நமக்கு ஆக்கமும் ஊக்கமும் அமைதியும் ஏற்றமும் எளிமையும் உயர்ந்த எண்ணமும் ,பாதுகாப்பும் தரும்.
பல நாகரீகங்கள் அழிந்தாலும் அழியாமல் இருப்பது இந்திய நாகரீகமும் பண்பாடும்..இந்த பண்பாடு அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
மாத,பிதா குரு தெய்வம்.
கூட்டுக்குடும்பம் சகிப்புத்தன்மை தெய்வீகம் வளர்த்து வையகத்தை வாழ வைக்கும்.
जय जगत। वसुदैव कुटुम्बकम। सर्वे जनाम सुखिनोभवन्तु।