வியாழன், டிசம்பர் 29, 2011

கபீர் ஈரடி

हम तुम्हारो सुमिरन करैं ,तुम मोहिं चितवो नहीं,  सुमिरन मन की प्रीती है,सो मन तुम्हीं माहीं ११

கபீர் இறைவனிடம் சொல்கிறார் --இறைவா!நான் உன்னை பிரார்த்தனை செய்கிறேன்.ஆனால் நீ என்னை பார்ப்பதில்லை.உன் மனதில் நான் உள்ளேனா,
என்பது என் கவலை இல்லை.என் மனதின் அன்பால் உன்னை வேண்டுகிறேன்.என் மனம் உன்னிடத்திலேயே நிலைத்துள்ளது.
இறைவனை நாம் உள்ளன்போடு தியானம் செய்யவேண்டும்.அவன் நம்மை அருள்பார்வையோடு பார்க்கிறான இல்லையா என்ற கவலை நமக்கு ஏற்படக்கூடாது.

हंसा बगुला एकसा ,मानसरोवर माहिं 1   बगा ढून्दूरे    माछरी,हंसा मोती खाहिं 11
கபீர் கூறுகிறார்,
அன்னப்பறவையும் கொக்கும் ஒரே மானசரோவர் ஏரியில் வசிக்கின்றன.
ஆனால் கொக்கு மீனைத் தேடி அலையும்.அன்னப்பறவை சிப்பியில் உள்ள முத்தைத்தேடி அலையும்.ஏனென்றால் இரண்டின் உணவும் வேறுபட்டது.
மனிதர்கள் ஒருவரைப்போல் ஒருவர் இருக்க ஆசைப்பட்டாலும் இறைவன் கொடுத்த இயல்பு வேறு பட்டது.குணமும்  குற்றமும் இயற்கையில் ஏற்படுவது..அதற்கேற்றவாறு மனிதனின் செயல் அமையும்.
************************************************************************************
माला   फेरत    जुग     भया  , फिरा    न  मन का  फेर  , कर    का  मनका   डाली दें  ,मन  का  मनका   फेर./

ஒரு பக்தன் பல யுகங்களாக  ஜபமாலை கொண்டு ஜபித்துக்கொண்டுள்ளான்.
ஆனால் அவன் மனம் பலவிதத்திலும்  சஞ்சலம்  அடைந்து கொண்டிருக்கிறது.
இறைவனருள் எப்படி கிடைக்கும்சுழலும்உண்மை நிலை புரிந்து கையிலுள்ள ஜபமாளையைக் கீழே போட்டுவிட்டு மனம் என்ற மாலையில் சுழலும் மன விகாரங்களை சுழலாமல் நிறுத்து.அதன் பின்  ஜப தபங்களில் மனம் செழுத்து.
அப்பொழுதுதான் ஆண்டவன் பேரருள் கிடைக்கும்.