சனி, செப்டம்பர் 15, 2012

சிந்தனை தா!1 இறைவா! இறைவன் அருள் யாருக்கு?





இறைவன்  அருள்  யாருக்கு?

ஆஷ்ரமம் என்ற குடிலில் கானகத்தில் 
வாழ்ந்த முனிகள்.
பஞ்சத்தில் அடிபட்டவர்கள் போல் ,
முற்றிலும் அறிந்தும் மௌனியாய் 

இருக்கும் சித்தர்கள்.
உலக நமைக்காக நவ பாஷாணம் சிலை 
அமைத்த போகர்.
வேதங்கள் ,உபநிஷத்கள் ,
பைபிள் ,குரான் ஆகிய 
நன்னெறி காட்டிய இறை நூல் எழுதும்,

இறை தூதர்கள் .

மாயை,சைத்தான், சாத்தான் 
என்றும் 

உலகவாழ்க்கை  போராட்டம் என்றும் 
வாழும் வரை மற்றவர்களுக்காக வாழ வேண்டும் 
வாழு ,வாழவிடு என்ற ஜைனதத்துவம்.
ஆசையை மற  அன்பு காட்டு 
என்ற புத்த தத்துவம்.
எவ்வளவு சேர்த்தாலும் எட்டடி நிலமோ 
அல்லது 
ஒருபிடி சாம்பலோ மிச்சம் 
என பட்டினத்தார் ,ப்ருத்ருஹரி ,
சித்தர் வாக்கு.
அருணகிரிநாதர் வாழ்க்கை ,
கோவலன் கதை,
அனைத்தும் 
இருந்தாலும் 
பக்தி என்ற பெயரில் 
பலகோடி செல்வம் புதைத்து வைத்து ,
தானும் அனுபவிக்காமல்,
நாட்டிற்கும்  பயன்படாமல்
கோடிக்கணக்கில் 
சேர்த்துவைக்கும் 
முதலாளிகள்.
அரசியல்வாதிகள்.
அதை இருக்கும்போதே பலருக்கும் 
பயன் படுத்தலாம்.
விநாயகர் ஊர்வலம் என்ற அண்மைக்கால வழிபாடு.
அந்தக்  கோடிக் கணக்கு விரயம் 
ஒவ்வொரு  தெருவையும் 
சுவர்கமாக்க தூய்மை படுத்த,

கழிவுநீர் தடம் அமைக்க ,
ஏழைகளின் மருத்துவ சிலவு 
என பயன் படுத்தலாம்.
இறைவா!!
மக்களுக்கு நல்வழி  காட்டு.
உன் பெயரால் உன்னை அழகுபடுத்தி, 
அலைகடலில் அழிக்கும் 
அறியாமை பக்தியைப்போக்கு.
புதிய பக்தி முறை, 
நீ படைத்த 
நொடிகள்,
குருடர்கள்,
அனாதைகள்,
நோயாளிகள்,
பசிப் பிணி  உள்ளவர்கள்.
கழிவு நீர் ஓடும் 
மேடுபள்ள புது நகர்கள் 
அனைத்தும் 
பயன் பெற 
கருணைகாட்டு.
நீ விரும்பும் பக்தி 
வால்மீகி,
துளசி,
துருவன்,
வள்ளுவர் 
அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் 
நபி ,
ஏசு,
ஜைனர் 
புத்தர் 
என்றால் 
இந்த மாயை பக்தி 
உன் அழகு சிலை 
சிதைக்கும் பக்தி 
அரசியலும் சுயநலமும் கலந்த பக்தி.
இதை மாற்றும் 
சிந்தனை  தா!1
இறைவா!
விநாயகா!





ஏன் இந்த கடவுள் அவமானம்?இன்றைய செய்தி.



இன்றைய செய்தி.

வெளிநாட்டில் வாழும் இந்திய மாணவர்கள் 
கட்-அவுட் வைக்கும் சிலவிற்கு 
ஒரு கிராமத்தைத்  தத்து எடுக்கலாம் 
என்று கூறி உள்ளனர்.
இந்த செய்திக்கு பிரான்சு நாட்டு 
இந்தியர் தன்  கருத்தாக 
போனமா பார்த்தமா என்று வாருங்கள்.
இல்லை என்றால் பத்திரமாக திரும்ப முடியாது 
என்று தன் அனுபவ உண்மையாக கூறி உள்ளார்.
இது ஒரு ஜனநாயக நாட்டில் எவ்வளவு  பெரிய  அபாயம்.

நான் எழுதுகிறேன் 

6500 பிள்ளையார் சிலைகள் .(சென்னையில் மட்டும்)
குறைந்தது ஒன்று ஆயிரம் என்றால் 
6500 X 1000=6500000.
ஆறு லக்ஷத்து  ஐம்பதாயிரம்.
அலைகட்லிலோ ஆற்றிலோ எரிய 
காவல்துறை பாதுகாப்பு ,போக்குவரத்து பராமரிப்பு 
என  கோடிக்கணக்கில் பணம் 
விநாயகரை சிதைக்க.
இந்த தொகையை நாட்டு நலம்,
சாலை சீரமைப்பு போன்றவற்றிற்கு 
பயன்படுத்தினால் 
விநாயகர்  அருள் கிட்டும்.
இது சென்னையில் மட்டும்.
பகுத்தறிவுத் தந்தை 
கடவுள் இல்லை என்கிறார்.
கடவுள் இருக்கிறார் 
என்பவர்கள் மனத்தில் 
ஏன் 
இந்த கடவுள் அவமானம்.

இன்றைய நாகரிகமும் அறிவியல் வளர்ச்சியும



இன்றைய நாகரிகமும் அறிவியல் வளர்ச்சியும்.

பாரத நாட்டில் அறிவியலும் ஆன்மீகமும் 
இணைந்தே கற்பிக்கப் பட்டன.
ஆண்பெண் ஈர்ப்பிற்கு மனக்கட்டுப்பாடு 
தேவை எனவும் அதைக்கட்டுப்படுத்த 
பூஜை விரதங்களுக்கு முக்கியத்துவம்
கொடுக்கப்பட்டன.
சித்த வைத்தியத்திலும் 
"ஒன்ரைவிடேல் ,இரண்டை அடைக்கேல் "
என்று கூறப்பட்டது.
ஆனால் இன்றைய அறிவியல் வளர்ச்சியில் 
பல முன்னேற்றங்கள் இருந்தாலும் 
மனிதன்  குறிப்பாக 
இளைஞர்கள் இளைஞிகள் 

காதல் ,காதல் என்று 
கைபேசியுடன்  அழைகின்றனர் .
இதனால் பாதிக்கப்படுபவர்கள் இளைஞர்களே.
கட்டுப்பாடு இல்லாமல் சுற்றுவதுடன் 
காதல் கைகூடாவிடில் 
கொலை தற்கொலைவரை சென்றுவிடுகின்றனர்.
அதைவிட கொடுமையான செய்தி 
ஹிந்தி நாளிதழில் 
படித்து  எதிர்கால பாரதம் எப்படி இருக்கும்?
என்ற வேதனை பெற்றோர்களுக்கு  வரும்.
பதிமூன்று முதல் 20 வயது வரை உள்ளவர்கள் 
75% no problem ,no commitment,  என்று 
காண்டமும் கருத்தடை மாத்திரையுடன் 
அலைவதாக சேதி.
சென்னை பிராட்வே கொலை தற்கொலைக்கு காரணம் 
காண்டம்.
காதலனின் பாக்கெட்டில் காண்டம் கண்ட காதலி 
காதலை மருத்துள்ளாள் .
காண்டமே அவள் உயிருக்கு   எமகண்டமாகி உள்ளது.
அறிவியல்  வளர்ச்சி பகுத்தறிவு அவசியம் தான்.
ஆனால் மனரீதியான நோய்  தீர 
ஆன்மிகம் அவசியம்.
ஆனால் அது.

திரைப்படங்கள் கொலைவெறி ;
பாடல்களுக்கும் சென்சார் தேவை.
காதலிக்க மறுக்கும் பெண்ணை அவன் நண்பர்கள் 
அடிடா  அவளை;உதைடா  அவளை ;வெட்டுடா அவளை;
விளைவு 
பிராட்வே  கொலை.