செவ்வாய், நவம்பர் 06, 2012

ஹிந்தியில் ராமசரிதமானஸ் எழுதிய துளசிதாசர்


ஹிந்தியில்  ராமசரிதமானஸ்   எழுதிய  துளசிதாசர்    மனைவிதாசனாக    சுற்றி -சுற்றிவந்தவர். ஓர்நாள் கொட்டும் மழையில்  மனைவியைத்தேடி 

துளசிதாசர்  மாமனார்  வீட்டிற்குச் சென்றார்.அவர் மனைவிக்கு  கணவரின் செயல்  அவமானமாக இருந்தது.கோபத்தில் அவர் மனைவி பத்ர காளி  ஆனாள் .
கணவனை நோக்கி --எழும்பும் சதையும் கொழுப்பும் இருக்கும் அழியும் மாறும்  இந்த உடலின் மேல் உள்ள பற்றை  இறைவன் மேல் பற்றுக என்றாள் .அவரின் இந்த கோபமும் வெறுப்பும் நிறைந்த  வார்த்தைகள் அவரை  ராம பக்தராக மாற்றியது. அவர் இறைவனை வழிபட்டு ராமரின் அனுக்ரஹத்தால்  ராமசரித மானசை  எழுதினார்.
 சம்ஸ்க்ருதத்தில்  இருந்து மாறி மக்கள் புரியும் மொழியில் எழுதப்பட்ட ராமாயணம்  இன்று ஒவ்வொரு வீட்டிலும் வட இந்தியாவில்
  சிரத்தையுடன் பாராயணம்  செய்யப்படுகிறது.
1.
அவரின் பிரார்த்தனை:--
இறைவனே!  நீ ஏழை பங்காளன் ,ஏழை மேல் தயை காட்டுபவன் என்றால்,நான் ஏழை.
நீ வள்ளல் என்றால்,நான் பிச்சைக்காரன்.
நான் பெரும் பாவி  என்றால்,நீ பாவங்களைபோக்குபவன்.
நீ அநாதை என்றால்,என்னைப்போன்ற அநாதை யாரும் இல்லை.
நான்வேதனையில் மூழ்கிஇருக்கிறேன்.
 என் துன்பத்தைத்  தீர்க்க எவரும் இல்லை.
நீ  பிரம்மம்;நான் ஜீவன்.நீ எஜமானன்;நான் உன்  சேவகன்.
நீ என்னுடைய தாய்; என் தந்தை;குரு;நண்பன்;
எல்லா விதத்திலும் எனக்கு நன்மை செய்யக்கூடியவன்.
உனக்கும் எனக்கும் அநேக வித சம்பந்தம் இருக்கிறது.
உனக்கு எவ்வித உறவு ,ப்ரியமானதோ,
 அவ்வுறவில் நீ என்னை ஏற்றுக்கொள்.
எந்த உறவிலாவது, உன் பாதார விந்தங்களை
 சரணடைவது தான்  என் ஒரே விருப்பம் ;என் ஆசை.
நீ என்னை ஏற்றுக்கொள்.
எனக்குவேறு எவ்வித விருப்பமும் கிடையாது.
         2.
  ஹிந்து மதத்தில் முதற்கடவுள்   விநாயகர்.
அவரைத்துதித்து விட்டுதான்,  மற்ற கடவுளை வணங்குவர்.
அம்முறைப்படி  விநாயகரை துளசிதாஸ் தொழுதுவிட்டு,
அவர் வேண்டுகோளாக  வைப்பது,
ராமரின் மனதில் இடம் பிடிப்பது தான்.

உலகம் வணங்கிப் போற்றி வணங்கும் 
கணங்களின் அதிபதி  விநாயகரின் 
புகழ் பாடுங்கள்.
சங்கரரின்  மைந்தன்;பவானியின் புத்திரன்.
சித்தி அளிப்பவன்; யானை முகத்தோன்;
விக்னங்களை  போக்குபவன்;
கிருபைக் கடல்;மோதகப் பிரியர்;
அவர்  ஆனந்தம் அளிப்பவர்.
மங்கலத்தை அளிப்பவர்;
கல்விக் கடல்; அவர் புத்தியின் பிரம்மம்;
இப்படி  மங்கள  வடிவான ,
விநாயகப் பெருமானை---நான் 
கை கூப்பி வணங்கி வேண்டுகிறேன்;
சீதாராமர்  என்  மனம்  என்ற கோவிலில்  எழுந்தருளட்டும்.