ஆமா!ஒய்வு பெற்ற பின்
என்ன செய்றீங்க?
தேடுகிறேன் !தேடுகிறேன்!
என்ன தேடுறீங்களா?
ஆமாங்க.தேடுகிறேன்.
அதில்லேங்க! பொழுது எப்படி போகுது?
அதுதான் தேடுறேனே ?
பொழுது போறதா!
பத்தலேன்னே.நேரம் .
அப்படி என்னேனே,
நேரம் பத்தாமே!
அறிந்தததே தேடுறே,
புரிந்ததே தேடுறே
தெரிந்ததே தேடுறே
தெரியாததா தேடுறே .
பொருளைத் தேடுறே
பொருள்விளக்கம் தேடுறே.
அறிவியல் தேடுறே;
பழைய தமிழ் இலக்கியம் தேடுறேன்.
புதிய தகவல்
தெரிஞ்சுக்க தேடுறே
செய்திதித்தாள தேடுறே.
என்னப்பா புரியலே.
என் மனச் சுமை கொட்ட தேடுறேன்.
புரியலப்பா!
ஒய்வு பெற்றதும் தப்பா தெரியுது,
ஒண்ணுமே தெரியாம வயசாயிடுச்சுன்னு;
பேரனுக்குத் தெரியறது எனக்குத் தெரியலே;
உலகம்பெருசு.
நம்மநாடு வளம்பெருசு.
முன்னேற்றம் பெருசு.
ஊழல் பெருசு .
பலது தெரிஞ்சாலும்.
என்ன தேடினாலும்
ஒன்னு புரியல,
ஊழல் ந ல்லதா ;கேட்டதா;
மக்கள் விரும்புராங்களா/
விரும்பலையா?
ஊழல்ல தோத்தவங்க ஜெயிக்கிறாங்க.
ஜெயிச்சவங்க தோக்குறாங்க.
பதவியிலரேந்து விலக்குறாங்க.
பிறகு பதவி தர்றாங்க .
தனிக்கட்சி ஆரம்பிக்கிறாங்க .
கூட்டணி சேர்றாங்க.
ஐயோ! ஆள விடப்பா !
எனக்கு என் ஜோலி இருக்கு.
எம்.எல்.ஏ பாக்கணும்;
எதோ கவனிச்சு ஒரு லைசென்சுவாங்கி
பிசினஸ் டேவேலோப்பு பண்ணலாம்.
நீ என்னமோ தேடு. வேலை இல்லே.
பென்சன் வருது.
ஆமா.ஒன்னு கேக்கிறேன்.
வீட்டுலே ஒக்காந்து என்ன தேடுறே.?
எங்கே தேடுறே.
கூகிள்லே தேடுறேன். யாகூலே தேடுறே.பேஸ் புக்கள தேடுறேன்.
கம்புட்டரா.
எங்கவீட்ல இருக்கு.
பையன் நேட்டுவரல நெட்டுவரல நு
சொல்லிக்கிட்டு இருக்கா.
அதுதான் , என்ன. விலையில்லா மடிகணினி.
ஆ, சும்மா போட்டுவச்சுருக்கான் .
கரண்டு வேணுமே. கரண்டு.
நெட்டு வேலைசெய்ரப்ப சார்ஜ் போகுதாம்.
சார்ஜ் பண்ணின நெட்டு வேலை செய்யலையாம்.
பையன்புலம்பிக்கிட்டுருக்கான்.
அதுக்குவேறே மாசம் ஆயிரம்கேக் குரான்.
பொழப் பில்லே .
இந்த விலைவாசி வேறே.
அடே !நானும் அதுதான் செய்றேன்.
இப்படியே பொழுது போகுது.
நீ புலம்பிக்கிட்டே இரு.
நான் போறேன்.