வெள்ளி, ஜனவரி 27, 2017

வாழ்த்தி வணங்குவோம்.

வையகம் வாழ்க என்றே
வேதங்கள் முழங்கும்
பாரத ஆன்மிகம்.
பார் போற்றும் பாரத ஆலயங்கள்.
அவனியின் ஆச்சரியத்திற்கு
அறிவியலின் வியப்பிற்கு ஒரு
திருநள்ளாறு,ஒரு தஞ்சை பெரியகோயில்.
சிதம்பர நடராஜர் கோயில் ,
நெல்லையப்பர் கோயில்.

வேற்றுமையில் ஒற்றுமைகாணும்
புவியியல்  பூகோள வேற்றுமைகள் .
மொழிகள் பல,
தெய்வீக வழிபாடுகள் பல
அனைத்திற்கும்  மேலா ஒற்றுமை தரும்
காசி -ராமேஸ்வர தீர்த்த யாத்திரை.
பத்த்ரிநாத்,அமர்நாத்,கேதார்நாத் ,ரிஷிகேஷ்
திரிகம்பேஸ்வரர், சீரடி ,ஐயப்பன் கோயில்
யாத்திரைகள்.
அன்பே சிவம் .
தென்னாடுடைய சிவன் ,
எந்நாட்டிற்கும் இறைவன்.
எளிமையின் காட்சி ,
சுடலை பொடிபூசி
வைத்தியநாதனாக
குருநாதனாக
வையகம் வாழ்விக்க இறைவனவதாரங்கள்.
கிராம  காவல் தெய்வங்கள்.
கருப்பண்ண சாமி, மதுரைவீரன் , மாரியம்மன்
துர்க்கை அம்மன் , துரௌபதி அம்மன்
ஹிந்து மத வழிபாடுகள்
ஆடம்பரங்கள்
எளிய கோயில் ஏழை மாரியம்மன்
இந்த அற்புத ஆன்மிகம்
கல்கத்தாகாளி  தீண்டப்படாத தீண்டும் ஜாதிகளின்
இணைப்பாக ,அந்த ராமகிருஷ்ண பரமஹம்சர்
சுவாமி விவேகானந்தர் , ராமானுஜர்
சிந்திப்பீர் இளைஞர்களே!
பாரதம் பழமை அறிவீர் ,
பாரினில் சிறந்து வாழ்வீர் .
இறைவன் அருள் பெற
  வாழ்த்தி வணங்குவோம்.
ஓம் கணேசா போற்றி
ஓம் கார்த்திகேயா போற்றி.
ஓம் நமச்சிவாய
ஓம்  துர்கயே போற்றி.