வியாழன், நவம்பர் 24, 2011

DIVINE INDIA

பாரத நாடு பாருக்கு வழிகாட்டுகிறது. நம் வாழ்க்கை முறை ,பக்தி நெறி,மேலை நாட்டினருக்கு ஒரு வியப்பையும் மனித சக்திக்கு மேலான ஒரு சக்தி கட்டாயம் இயக்குகிறது என்ற முடிவிற்கு வருகின்றனர்.நான் எங்கேயோ கேட்ட கதை.அது உண்மையா பொய்யா என்பதை விட அதன் உள்ளார்ந்த பொருள் தான் என்னை சிந்திக்க வைத்தது.
ஒரு ரஷ்ய நாட்டு ஆர்வலர் இந்தியாவின் ஊழல் பற்றியும் இன மொழி இயற்கை வேற்றுமை,அரசியல் கட்சிகள் ,பல உட்பிரிவுகள் ,பல வித சம்பிரதாயங்கள்,பல பெயர்களில் உள்ள இறைவன்கள்,,தெய்வ உருவங்கள் ,மனித நேயம் போன்றவற்றை ஆராய வந்தார் என்றும் அவரை ஆச்சரியப்பட வைத்தது பாரத நாட்டின் முன்னேற்றம்.கரணம்:-

.௧.அரசியலில் ஒற்றுமை இல்லை.ஒரே கட்சியில் பல உள் கட்சிகள்.ஒரே தலைவர்.ஒரே கொள்கை.ஆனால் கட்சிகள் பல.
௨.ஒரே மதம். பல கடவுள்கள்.இந்துமதம்.இந்து என்ற பெயர் சிந்து நதியைக்கடந்து வந்த அந்நியநாட்டவர்களால் கொடுக்கப்பட்டது.ஆனால் அதை சனாதன தர்மம் என்று கூறும் பிரிவினர்.
௩.சிவனை வழிபடுபவர்கள்.அதிலும் வீரசைவர்கள்.விஷ்ணுவை வழிபடுபவர்கள்.அவரின் ராமாவதாரத்தை மட்டும் வழிபடும் ராமதாசர்கள்.
கிருஷ்ணா அவதாரத்தை  மட்டும் விரும்பும் கிருஷ்ண தாசர்கள்.
தேவி உபாசகர்கள்.சக்தி உபாசகர்கள்.ஹனுமான் பக்தர் கள்.
௪.அத்வைதம்,த்வைத்வம்,விஷிச்டாத்வைத்வம் ,சங்கரர் ,ராமானுஜர்,மத்வாசாரியார்,
பின்னர் ஷீரடி சாய்பாபா,புட்டபர்த்தி சாய்பாபா,ராகவேந்திரர்,அருட்ப்ரகாச இராமலிங்க அடிகளார்,என்ற வழிபடும் தெய்வங்கள்.
௫.இத்தனை வேறுபாடுகள். வேறுபட்ட கருத்துக்கள்.விரோத  மனப்பான்மைகள்.
ஒருவருக்கு மற்றொருவர் பார்த்தாலே பாவம் என்ற வெறுப்புகள்.வடகலை தென் கலை நாமங்கள், வீபூதிப்பட்டைகள்,அதற்காக
நீதி மன்ற வழக்குகள்.
கலியுக தர்மங்கள் இன்று கலப்புமணத்தை ஆதரிக்கும் சட்டங்கள்.பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வேதங்களில்  எழுதப்பட்ட ..எதிர்கால கணிப்புகள் .

இவ்வளவு மன  வேற்றுமை  களுக்கு நடுவில்  நாட்டின்  முன்னேற்றம் அந்த  ரஷ்ய  ஆர்வலரை அதிசய  மூட்டியது. 
 நாத்திகரான அவர் முதன் முதலில் ஆஸ்திகம் பற்றியும் சிந்தித்து இறைவன்  உள்ளார்  என்று பக்தரான சம்பவம் நடந்துள்ளது.அமைதியைத் தேடி பாரதம் வரும் அயல்நாட்டினரும் அதிகம்.

இறைவனின் பாரதம் காக்கப்படும்.ஒற்றுமை  காக்கப்படும்.
  

,

our treasury

நமது பாரத நாட்டில் நல்லறம் வழிகாட்ட வேதங்கள்,உபநிடதங்கள்,போன்ற பாமரர்கள் புரியாதமொழியில் ஆன்மீக அறிவியல் கருத்துக்கள். நம் தமிழ்மொழியில் திரு மந்திரம்  ,திருவாசகம்,சித்தர் பாடல்கள்,மருத்துவ நூல்கள்.எளிய மருத்துவம், பாட்டி வைத்தியம், வீட்டு வைத்தியம் ,நாட்டு வைத்தியம்,மூலிகை வைத்தியம் ,உணவே மருந்து, என உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பல நூல்கள் வெளிவருகின்றன. இதில் தனி மனித ஒழுக்கம் ,அரசியல் என பல வெளிஈடுகள் அறிவுக்களஞ்சியமாக வெளிவருகின்றன. ஆங்கிலத்தில் அறிவு வளரும் ஆங்கில அறிவு இல்லையே என்பவர்கள் இந்நூல்களைபடித்தால்   ஆரோக்யமான  உடல்,தெளிவான ,அறிவு,தெளிவான சிந்தனை, தெளிவான ஞானம், பெற்று உளம் நிறைவுடன்   மன அமைதி பெறலாம்.நாம் அதில் ஈடுபடுவதில்லை. காரணம் ஆங்கில அறிவால் பெரும் உடனடி பொருளாதார பலன்கள்.ஆங்கில மோஹம். நம் நாட்டு மொழிகளில் எதுவும் இல்லை என்ற முடிவு.

சுதந்திரப் போராட்டத்தலைவர்கள் அனைவரும் ஆங்கிலப்புலமை பெற்றவர்கள்.காந்தி அடிகள் தாய் மொழிக்கல்வி  முறையை வலி உறுத்தினாலும்,மற்ற தலைவர்களின் ஆங்கில அறிவு ,ஆற்றல் சமஸ்கிருதம்,
தமிழ் போன்ற செம்மொழி அறிவியல் மருத்துவ ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம்
கொடுக்காததும்,பக்க விளைவு ஏற்படாத கசப்பான ஆயுர்வேத சித்த மருந்துகள் .பத்தியங்கள் போன்றவற்றை பொதுமக்கள் விரும்பாமல் ,  ,இனிப்பு பூசப்பட்ட கேப்சூல் மாத்திரைகள்  ஆங்கில முறையில் வந்ததுதான்.
மேலும் அரசாங்கம் நம்நாட்டுச் சிறப்புகளை பிரபலப்படுத்த முழு ஆர்வம் காட்ட வில்லை என்பதும் காரணமாகும்.
சித்த ஆயர்வேத மருத்துவப்படிப்பிற்கு மாணவர்களும் பொது மக்களும் என் ஆர்வம் காட்டவில்லை   என ஆராய்ந்து அத்துடன் சேர்ந்த ஆர்வ மூட்டாதது யார் குடாரம் அல்லது தவறு.அது மட்டுமல்ல நமது நாடு மருத்துவம் .அறிவியல் யோகக்கலை ,தெய்வீக வழிபாட்டுடன் சேர்ந்த உடற் பயிற்சிகள் எள்ளி நகையாடி ஒழிக்கப்பட்டதற்கு யார் காரணம்.
வள்ளுவர் எழுதிய திருக்குறள்,உலகப்பொதுமறை என்பவர்கள்
 "வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும்
 துணைவலியும் தூகிச்செயல்.''
என்ற குறளை மறந்தது ஏன்?
நமது நாட்டின் சிறப்பை மருத்துவம், ஜோதிடம் ,அறிவியல் விளக்கும் தொன்மை நூல்கள் அதிகமாக விரும்பும் படி செய்யாதது ஏன்//?
அண்ணாவின் வழியில் வந்தவர்கள் ஒரே அணியில் திரண்டு அல்லது காந்தி வலி வந்தவர்கள் ஒரே அணியில் திரண்டு சுநலம் இன்றி ,ஆணவம் இன்றி
சுரண்டல் இன்றி ,ஊழல் இன்றி நாட்டு நலம்எ வீட்டு நலம் என்று கருதி
தன் தலைவர் காட்டிய வழியில் செல்லாமல்  ஒரு தலைவர்  அவரை மையமாகக்கொண்டு பல தலைவர்கள்,பல கொடிகள்  முப்பத்தொன்பது  சதவிகிதம் வாங்குபவர்கள்  ஆளும் கட்சி அவர்களை விரும்பாத அறுபத்தொன்பது  சதா விகிதம் எதிர்க்கட்சி.
நாடு விடுதலை அடைந்து    அரை நூற்றாண்டகியும் இன்னும் கல்விக்கொள்கை
இதுதான் என்று முடிவு செய்வதில் தாமதம் குழப்பம்  சிந்திப்பீர்கள் இளம் தலை முறையினர்களே.



/