இறைவன் படைப்பில் ,
மனிதன் உயர்ந்தவன்.
ஔவை சொன்னபடி ,
அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது.
ஆனால் ,மனிதர்கள் மனிதர்களாய் ,
இல்லை என்றால் ,மானிடப்பிறவி
மண்ணுலகில் பயனற்றதாகும்.
மதம் என்ற பெயரில் எத்தனை பிளவுகள்,
மதம் பிடித்த யானை போல் ,
மானிடர்களைத் தாக்கும் மதம்.
மனிதனை மிருகமாக்கும் மதம்.
சிவன் காக்கும் கடவுள் என்றாலும்
அல்லா அருளும் கடவுள் என்றாலும்,
ஏசு இறங்கும் கடவுள் என்றாலும்
இறப்பு என்றால் இறைவனடி சேர்த்தல்
என்பதே பொது தத்துவம்.
மதமும் மரிப்பவனை காப்பதில்லை.
பணம் -பணம் என்றாலும்,
பயனில்லா வாழ்க்கை இது.
ஆவிபோவது நிச்சயம்.
கோடிகள்,கருப்புப்பணம் ,
அதிகாரம்,மருத்துவப்படி,
பாது காப்புப் படை இருந்தாலும்,
பறக்கும் உயிரைப் பிடிக்க முடியாது.
வரும் நோய்களைத் தடுக்க முடியாது.
விபத்துகள் எப்படியும் வரலாம்.
கள்ளப் பணமோ ,நல்ல பணமோ,
கறுப்புப் பணமோ ,அதிகார பலமோ,
காலனிடம் இருந்து காக்காது.
அறிவயல் விந்தைகள் ஆயிரம் காணலாம்.
ஆவிபிரிந்த பின் உயிர் வருவதைக் காணமுடியாது.
இருக்கும் வரை இறைவனை வழிபடுவோம்.
நன்மைகள் செய்வோம்;நேர்வழி நடப்போம்.
சத்தியம் காப்போம் ;அறவழி நடப்போம்.
அன்பு காட்டுவோம்;பண்பாக இருப்போம்.
உதவிகள் செய்வோம்;
விதிவழி செல்வது இயற்கை.
அதை உணர்வோம்;
அவனியில் ஒற்றுமை ,அஹிம்சை
வளர்ப்போம்;