தனிமனிதன் தான் தான் கோடிக்கணக்கான மக்களின் நன்மைக்கான பணிகளை செய்து முடித்துள்ளான்
.பீஷ்மர் முதல் பொறியாளராக கங்கை பிரவகிக்க செய்தது. சுயநலமில்லா பணிகள்.
பல கண்டுபிடிப்புகள் தனி நபர்களின் அரசாங்க ஒத்துழைப்பு இல்லாமல் நடந்தவையே.
சமுதாயத்தை அன்பு வழியில்,நேர்வழியில் ஆன்மீக வழியில் அறவழியில்
அழைத்து சென்றவர்கள்,அடைந்த துன்பங்கள் அவனி அறிந்ததே.
எட்டாம் வகுப்பு ஹிந்தி புத்தகக் கதை அனைவரும் அறிய வேண்டியதே.
தசரத் மாஞ்சி பீகாரில் பிறந்தவர்.சாதாரண கூலிக் குடும்பம்.கேலூர் என்ற குக்கிராமத்தில் பிறந்தவர்.அவர் செய்த சாதனை கண்டு ,ஒரு ஆங்கில பத்திரிகையாளர் எழுதியது;---ஏழையின் தாஜ்மஹால்.
சர்வேஷ்வர் சக்சேனா என்ற ஹிந்தி கவிஞர் --உன் மனதை துன்பம் முறிக்குமா.
நீ துன்பத்தை முறித்துவிடு .நீ உன் கண்களை மற்றவர்களின் கனவுகளுடன்
இணைத்துக்கொள்.
தசரத் மாஞ்சி சிற்றூர்லிருந்து வஜீரகஞ் என்ற ஊர் எண்பது கிலோமீட்டர்
தூரத்தில் இருக்கிறது.அங்குதான் கிராமத்தில் உள்ளவர்களுக்கு மருத்துவ மனை. இந்த மருத்துவ மனைக்கு 13 கி.மீ.தொலைவில் பாதை அமைக்க முடியும். ஆனால் யாரும் அதை செய்ய முன்வரவில்லை.
தசரத் மான்ஜியின் மனைவி பாகுனி தேவி நோய் வாய்ப்பட்டாள். என்பது கிலோமீட்டர் சுற்றுப்பாதையில் சென்றதால் மருத்துவமனை செல்ல தாமதமாகியது.இந்த தாமதம் அவரின் அன்பு மனைவி உயிர் பிரியா காரணமாகியது.
வேதனையுடன் ஊர் திரும்பிய மாஞ்சி கையில் உளி எடுத்து 360 அடி .உயரம்
முப்பது அடி அகல உள்ள மலையை அடிக்க ஆரம்பித்தார்.அவரின் செய்கை கண்டு வழிப்போக்கர்களும் ,ஊர் மக்களும் பைத்தியக்காரன் என்று பரிகசித்தனர்.
ஆறு ஆண்டுக்கள் தனியாக அவர் மலை உடைத்ததும் தான் மக்களுக்கு அவரின் அரிய பணி அறிய முடிந்தது.அனைவரும் உழைப்பாலும் பொருளாலும்,உதவி செய்தனர்
தனிமனிதனின் உழைப்பால் மக்களின் கனவு நினைவானது.
மலையை உடைத்து எண்பது கிலோ மீட்டர் தூரம் பதின் மூன்று கிலோமீட்டர் ஆனது.
அன்பு மனைவிக்காக அமைத்த ஏழையின் தாஜ்மஹால் இதுதான்.