புலம்பல்
மனிதன்
மனம்
எழும் எண்ணங்கள்
ஏற்றமும் தரும்,
ஏமாற்றமும் தரும்.
எண்ணத்திற்கேற்ற
வாழ்க்கை.
உயர்ந்த எண்ணங்கள்
உயர்த்தும்.
தாழ்ந்த எண்ணங்கள்
தாழ்த்தும்.
பேராசைகள்
மைதாஸ் தொட்டது போல்
ஆகும்.
பொறாமைகள்
இறுதிவரை
இன்னல் தரும்.
மன நிறைவு
என்பது
மன நிம்மதி என்பது
முயற்சியில்
கிட்டும்
தோல்வியிலும்
ஏற்பட வேண்டும்.
வெற்றியிலும்
அகங்காரம் கூடாது.
மனதில்
அகந்தை
அழிவைத்தரும்.
ஆத்திரம் அறிவை
ஆற்றதற்றலாக்கும்.
ஆட்டுக்குக் கால் அளந்து வைத்ததுபோல்
அவனவன் கர்மத்திர்கேற்ற
வாழ்வு அமையும்.
அதுதான்
ஆண்டவன் அருள்.
ஆனால் தீயவன்
கொடுமை -அவனின்
ஆடம்பர வாழ்க்கை
நேர்மையாளன்
துன்பவாழ்க்கை
அதுதான்
தீமை வளர்க்கிறது.
அதுதான்
புரியாத புதிராகிறது.
தீமைக்கு நல்ல பலன்.
உண்மை உரைத்தால்
கெடுபலன்.
தீமைக்கு துணை நிற்க பலர் .
சத்தியவான் தனிமை
படுத்தப் படுவான்.
இதுதான்
ஆன்றோர் உரை.
விதி என்பதே
மதியைவிட
வலிமை மிக்கது.
மதியால் வென்றவர் சிலர்.
விதியால் வாழ்பவர் பலர்.
மன எண்ணங்கள்
விதியை மாற்றும்.
விதியை வெல்ல
இறைவனருள் வேண்டும்.
அவனின்றி ஓரணுவும் அசையாது.