அம்மாவின் நினைவு அலைகள்-9
பழனியில் அம்மா மூன்று இடங்களில் பள்ளி நடத்தினார்.இதில் திடீரென்று காஞ்சிப்பெரியவரின் ஜனகல்யாண் பெயரைச்சொல்லி சுப்ரமணியன் என்பவர் தலையிட்டு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தினார். இதனால்சண்முகபுரம் கிளை மூடப்பட்டது. இது குறித்து காஞ்சி மடம் பெரியவருக்கு எழுதிய கடிதத்திற்குப் பதில் இல்லை. ஜனகல்யாண் பெயரில் பல ஏமாற்றங்கள் நடந்துள்ளது.
இப்படி பல சோதனைகள்.பலர் அம்மாவிடம் நேரடியாக பள்ளியை ஏற்று நடத்த கோரிக்கைவைத்தனர்.
அவர் தன் போக்கில் மன தைரியத்தால் குறைந்த கட்டணத்தில் பள்ளிகளை நடத்திவந்தார்.ஆசிரிகைகளும் குறைந்த ஊதியத்தில் திறம்பட உழைத்தனர். நான் அரசு உதவி பெரும் பள்ளியில் வேலை கிடைத்து சென்னைக்கு வந்துவிட்டேன். என் பெரி யமாமாவிற்கு ஏழு குழந்தைகள்.
மூத்த மகள் கோமதிக்கும் எனக்கும் திருமணம் நடந்தது.அத்தைக்கு சிறிதும் இஷ்டமில்லை.அம்மா எனக்குத்தெரிந்து அண்ணன் வீட்டிற்கு சென்று எவ்வித உதவியும் பெற்றதில்லை.அவரும் உதவி செய்யும் நிலையில் இல்லை. அண்ணனின் கஷ்டத்திற்கு அம்மா உதவி செய்துள்ளார். என் மனைவி கோமதி அமைதி;பொறுமை திறமை அன்பு அடக்கம் உழைப்பு மரியாதை குணக்குன்று என்று சொல்லலாம்.திருமணம் ஆன பின் இரண்டு குழந்தை பெற்ற பின் தான் எனக்கு சென்னையில் வேலை கிடைத்தது.அம்மாவிற்கு ஒரு பயம். மகன் பிரிந்து தனியாக சென்ருவிடுவானோ என்று. என் மாமாவிற்கு திருமணமான பின் மாமா என் பாட்டிக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை. அதற்கு அத்தை ஒரு காரணம் என்று பாட்டி சொன்னதால் சொல்லிக்கொண்டே இருந்ததால் அடிக்கடி எனக்கும் அம்மாவிற்கும் சண்டை வரும்.எனது பேச்சு,நடைமுறை அனைத்தும் மாறிவிட்டத சண்டை போடுவார். ஒருநாள் கூட என் மனைவி என் தாயாரிடம் கோபமாக பேசியோ சண்டபோட்டதோ கிடையாது.எனக்குத்தான் கோபம் வரும். இருப்பினும் வேலை கிடைத்து 10 ஆண்டுகள் காலாண்டு,அரையாண்டு,முழுஆண்டு விடுமுறை என சென்னையில் இருந்து பழனி சென்று வருவோம்.ஊதியம் தவிர வேறு வருமானம் கிடையாது. சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லை.என் மனைவியும் இது பற்றி பேசியதும் இல்லை. 525 ரூபாய் ஊதியம். வீட்டுவாடகை 100/-எப்படி சமாளித்தாளோ ?நான் M.A;B.Ed;MEd; படித்து முடிக்கும் வரை எதிலும் ஈடுபடவில்லை.வேலை;படிப்பு; தேர்வு;B.Ed; சார்ட்,படம்,கற்பிக்கும் உபகரணங்கள் எல்லாம் மனைவியே.எல்லாம் முடிந்து முதுகலைப்பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்று ஹிந்து மேல் நிலைப்பள்ளியில் பணியில் சேர்ந்தேன்.நான்கு ஆண்டுகள் கழிந்தன. நிம்மதி என்ற நிலையில்
நடைபாதையில் சென்ற என் மீது புது கார் வாங்கியர் மோதினார்.படுத்த படுக்கை.55 நாட்கள்.
இதற்கு மேலும் நடந்த சோதனைகள். தங்கையின் திருமணம். அம்மா பட்ட மனவேதனை. அப்பாவின் மரணம். மாப்பிளையின் மரணம் என்பவை பெரும் கதைகள்.
தொடரும்.