திங்கள், அக்டோபர் 29, 2012

மனசாட்சி உண்டா? நாட்டில் உள்ள பிரச்சனைகளும் ஜாதி பெயரால் அரசியலும்.

நாட்டில்  உள்ள  பிரச்சனைகளும் 
ஜாதி  பெயரால் அரசியலும்.

நாட்டில் கிராமங்கள் காலி ஆகின்றன.

விவசாய  விளை  நிலங்கள் விலை போகின்றன.

விளை  நிலங்கள் குடி இருப்புகளாகின்றன.

விவசாயிகள்  நாட்டின்   முதுகு எலும்புகள்.
அவர்கள் பஞ்சத்திலும் பட்டினியிலும்.

அவர்களுக்கு எவ்வித வசதிகளும் இல்லை.

சாலை வசதிகள் இல்லை.

குடிநீர் வசதிகள் இல்லை.

மின்சார வசதிகள் இல்லை.

சுகாதார வசதி இல்லை.

மருத்துவ வசதிகள் இல்லை.

கழிப்பறை வசதிகளில்லை.

இந்த வசதிகளைப்பற்றிய சிந்தனைகள் இல்லை.

புறம்போக்கு  நிலங்கள் பட்டா நிலங்களாகின்றன.

பட்டிதொட்டி எல்லாம்  ஆங்கிலமயம்.
தமிழ் வழியில் படித்தால் 
ஏளனப்பார்வை.
திராவிடக்கட்சிகள்  42 ஆண்டுகளாக ஆட்சி நடத்துகின்றன.

இதற்கெல்லாம் போராட ஆட்கள் இல்லை.

சினேகா செருப்புப் போட்டு கிரிவலம் வந்தால் போராட்டம்.

ஒரு நடிகையின் பேச்சுக்குப்போராட்டம்.

கொடும்பாவி எரிப்பு.

 சட்ட மன்ற உறுப்பினர் எதிர்க்கட்சி  உறுப்பினர்கள் 

முதல்வரை சந்தித்தல் போராட்டம்.

ஒரு குறிப்பிட்ட ஜாதியை வெறுத்துப்போராட்டம்.

தங்கள் நிலை உயர்த்தப் போராடும் நாள் எது?

ஜாதிகள் இல்லையடி பாப்பா  பாரதி பாடிய பாட்டு.

 உயர் குலம் தாழ்த்தி  சொல்வது பாவம்.

ஆனால் இன்றும் 67ஆண்டுகளுக்குப் பின்னும் 
 ஜாதிவாரி கணக்கெடுப்பு.
ஜாதிகள் வளர்ப்பவர்கள் 
போடும் வெளிவேஷமே ஜாதி ஒழிப்பு.
ஜாதிக்கட்சிகள்.
ஜாதி சங்கங்கள்.
ஒருகுறிப்பிட்ட  உணவுவிடுதிக்கு  மட்டும் பெயர்  எதிர்ப்பு.

மனசாட்சி உண்டா?