செவ்வாய், அக்டோபர் 16, 2012

ஊழல் அரசியல் வாதியாகிய நான் ஆயிரம் கோயிலில் சத்தியம் செய்து சொல்கிறேன் .


ஊழல் அரசியல் வாதியாகிய நான் 

ஆயிரம் கோயிலில் சத்தியம் செய்து 
சொல்கிறேன் .
ஊழல்   குற்றச்சாட்டு 
என் மீது சாற்றப்படுகிறது.

உண்மை நிலை இது தான்.
ஊழல் செய்தாலும் 
மீண்டும் நான் பாராளுமன்ற  உறுப்பினன்.
சட்டமன்ற உறுப்பினன்.
முதல் அமைச்சர் .
அமைச்சர்  நான்.
நானா! குற்றவாளி.!
நான் குற்றவாளிகளைக் காப்பாற்றுகிறேன்.
கற்பழிப்பவர்களை 
காப்பாற்றுகிறேன்.
நேர்மையான அதிகாரிகளை 
தண்டிக்கிறேன்.
சதய்வான்களை ஒழித்துவிடுகிறேன்.
கோவில்நிலங்களை 
அபகரிக்கிறேன்.
நிலஊழல் செய்கிறேன்.
கிரைனட் ஊழல் செய்கிறேன்.
நிலக்கரி ஊழல் செய்கிறேன்.
போபார்ஸ் ஊழல்புரிந்தேன்.
தொலைபேசியில் ஊழல்.
கறுப்புப் பணம் வெளி நாட்டு வங்கிகளில் .
இதற்கெல்லாம் என் மேல் மட்டும் 
குற்றம் சாற்றும் 
மிகப்பெரிய குற்றவாளி 
யார்?யார்?
சற்றே 
மனச்சாட்சி !உள்ளோரே !!.!!
நினைத்துப்பாருங்கள் !!
எனக்கு மீண்டும் மீண்டும் வாக்களித்து 
எனக்கு  பதவி சுகம் அளித்து 
நாற்காலியில் அமரவைக்கும் 
வாக்காள  பொது மக்களே!!
நீங்கள் தான்.
இது சத்தியம்! சத்தியம்.
நாங்கள் அரசியல் வாதிகள் 
பாவிகள் அல்ல.
வாக்களிக்கும் நீங்கள்  பாவிகள்.
ஆகையால் தான் 
நாங்கள் சுகமாக இருக்கிறோம்.
நீங்கள்  அல்லல் படுகிறீர்கள்.
எங்களுக்கு மின் தடை இல்லை.
தொலைபேசித் துண்டிப்பு இலை.
விலைவாசியால் எங்களுக்கு 
எவ்வித பணத்தட்டுப்பாடும் இல்லை.
மருத்துவவத்திற்கு எங்களுக்காக 
பல கோடி ரூபாய்கள் சிலவு செய்கிறோம்.
சிகிச்சைக்கு விமானத்தில் செல்கிறோம்.
நாங்கள் செல்லும் சாலைகள் 
குண்டும் குழியுமாக இல்லை.
எங்களுக்கு  எவ்வித  குறை ஒன்றும் இல்லை கண்ணா.
நாங்கள் புண்ணியவான்கள்.
பாவிகள் நீங்கள் தான்.
நீங்கள் அளிக்கும் ஓட்டுக்கள் தான்.
எங்களை நோட்டுகளில் புரளச்செய்கின்றன.
வாழ்க ஜனநாயகம்.
எங்களுக்கு வாக்களித்தவர்கள் 
மீண்டும் வாக்களிப்பார்கள்.
ஆகவே 
பாவிகள் இன்னலுருவர்.
கலியுகம்.
கர்ம வினை கல்லறை வரை விடாது.
இது சத்தியம்.


சுருக்கம்: வேலியே பயிரை மேய்கிறது.

நாடு எங்கே செல்கிறது?

மக்களே!
இன்றைய  தலைவர்களும்
அரசியல் வாதிகளும்

இந்திய ஜனநாயகமும்.

பொருளாதாரவளர்ச்சி  எப்படி?

அது அரசியல் வாதிகளுக்கே?
ஊழல் புரிவோருக்கே.
பெரும் பணக்கார முதலாளிக்கே.
ஊதியம் பெரும்தொழிலாளிக்கல்ல .
நடுத்தர மக்களுக்கு  அல்ல.
தினத்தொழி ளாலர்களுக்கு அல்ல.

அரசியல் வாதிகளுக்கும் ஊழல் வாதிக்குமே.

தினந்தோறும் செய்திகள் ,அதனால் அறிந்த உண்மைகள்.

நாடு முன்னேறுகிறது.

கட்டடங்கள் உயர்கின்றன.
மகிழ்வுந்துகள் பெருகுகின்றன.
ஆனால்,
கொலைகள் ,கற்பழிப்புகள்,கூலிப்படை,
கொள்ளை, சங்கிலி பரிப்பு,
குழு கற்பழிப்பு.

அரசியல் தலையீட்டால் குற்றவாளிகளை 
கைது செய்யமுடியவில்லை.
எழுபதுலக்ஷ ரூபாய் ஊழல் ஊழல்  அல்ல.(உருக்குத்துறை அமைச்சர்)
பாரதத்தில்  கற்பழிப்பு சர்வ சாதாரணம் (சோனியா)
பெண்கள் விரும்பி வருவதால் குழு கற்பழிப்பு (ஹரியானா காங்கிரஸ் தலைவர்)
காவல் அதிகாரி தூண்டுதலால் திருட்டு.
போலி மருத்துவர்கள் எழுபதுபேர் கைது. நூற்று ஐம்பது போலி மருத்துவர்கள் தலைமறைவு

அழகிரிமகன் கைது செய்ய நீதிமன்றம்  ஆணை.

அடிக்கடி தொடர்கொள்ளை .முதல் தெருவில் திருடு.அங்கு காவலர்கள் விசாரிக்கும்  பொழுதே பக்கத்துத்  தெருவில்  மூன்று வீட்டில் கொள்ளை.

மூதாட்டிகளை கொன்று கொள்ளை.

இது அனைத்திற்கும் செய்திகளின் அடிப்படையில் அமைச்சரகள் ,அதிகாரிகள்,

உள்ளூர் ரௌடிகள்,வட்டங்கள் ,மாவட்டங்கள்  உள்ள  அரசியல் சுயநல வாதிகள்  தலை ஈடு.
மின் தடையால் திருட்டு,கற்பழிப்பு ,மாற்றானுடன்  இருட்டில் இரு சக்கரவாஹ்னத்தில் சென்ற  மனைவி.

சோனியாவின் மருமகன் சம்பந்தப்பட்ட  தொழிற் சாலை மூட நடவடிக்கை எடுத்த மாவட்ட அதிகாரிக்கு மிரட்டல்.

சுருக்கம்:   வேலியே   பயிரை  மேய்கிறது.






ஊழல் அற்ற பாரதம் உருவாகுமா?


ஊழல் அற்ற பாரதம் உருவாகுமா?


மக்களே!சிந்திப்பீர்!
ஊழலுடன் இணைந்து இருக்கும் 
கருணை மமதா  மற்றும் கட்சிகள்  பற்றியும் 
சிந்திப்பீர்.
நாடு காக்க ஊழல் ஒழிக்க 
உறுதிமொழி எடுப்பீர்.
ஊழல் என்பதுஒரு ரூபாய் 
லஞ்சம் பெற்றாலும்   ஊழல் தான். 


உருக்குத் துறை அமைச்சர் பெநிப்ரசாத் வர்மாவின் 
ஊழல் பற்றிய கருத்தும் 
இந்திய ஜனநாயகமும்.

நம் நாட்டில் ஊழல் ஒழிய உண்ணாவிரதம் போராட்டம் என்று தினமும் செய்திகள்.
இந்நிலையில்  
ஊழல் என்பது  லக்ஷங்கள் இல்லை/
கோடிகளும்  அல்ல.
பல லக்ஷம் கோடிகள்
  செய்தால் தான் ஊழல் 
நாட்டை ஆளும் அமைச்சர்  உரை.
அரும் பாடுபட்டு,
அல்லல்பட்டு,
செக்கிழுத்து 
சிறையில் சித்தரவதைப்பட்டு,
பிரம்படி பட்டு ,
சொத்து இழந்து .
சுகம் இழந்து 
பெற்ற சுதந்திரம்.
இன்று 
சுதந்திர நாட்டில் 
ஊழல்புரிவதே லட்சியம் .
லக்ஷரூபாய்கள்  ஊழல் என்பது 
ஊழல் அல்ல என்றவர்களின்  
கையில் ஆட்சி.
ஆளும் கட்சியினர் இளைஞர்களுக்கு 
காட்டும்பாதை.
இந்த ஆளும் கட்சிக்கு இன்னும் 
கைகொடுத்து ஊக்குவிக்கும் 
சில்லறைக் கட்சிகள்.
ஒருதுளி ஆனாலும் விஷம் .
ஆயிரம் லஞ்சம் வாங்கினால் 
அரசு அதிகாரிகள் பணி  நீக்கம் .
அமைச்சர்கள் எழுபது லக்ஷம் 
வாங்கினால் ஊழல்அல்ல.
மக்கள் மடையர்கள் 
மீண்டும் வாக்களிப்பார்கள்
என்ற நம்பிக்கை.
வாழ்க  பாரத ஜனநாயகம்.