௧. தொலைக்கா நட்பே நட்பென்க-
நட்பல்ல
௨ .சொல் என்பது சொல்லும் விதத்தில் சொல்க, அதுவல்லது
வகை யற்ற சொல் பகை வளர்ப்பதாகிவிடும்.
௪.எல்லோரும் இன் சொல்லால் இன்புற்றிருப்போம்,
வன்சொல்லால் வளருமே பகை.
5. சொல்லுக செயலாக்கச் சொற்களை --நிற்க
செயற்றத்திற்கே.
௬.அன்பற்ற சுடுசொல் நிலைப்பகையே ,அது
பண்பற்ற செயலே தரும் .
௭. அவையறிந்து சொல்க சொற்களை , இல்லையென்றால்
தன் மானம் தானே கெடும்.
௮. சொல்லில் உயர்சொல் சொல்லுக , அதுவன்றி
தாழ் சொல் தாழ்வே தரும்.
௯. வாழ்த்தும் சொற்களே வாழ்வுதரும் , பிறரைத்
தாழ்த்தும் சொற்கள் தாழ்வு தரும் காண்.
௧௦. போற்றும் சொற்களே புகழ் தரும் , தூற்றும்
சொற்கள் உன்னை தூளாக்கும் .
எல்லோரும் இன் சொல்லால் இன்புற்றிருப்போம், வன்சொல்லால் வளருமே பகை.