வெள்ளி, மார்ச் 02, 2012

kabeer eeradi dheiveeka uravu

நல்ல மனிதர்கள் ,உயர்ந்த மனிதர்கள் இந்த உலகில் உள்ள தீயவைகளை அகற்றி நல்ல குணங்களை மட்டும் ஏற்பர்.வித விதமான  மலரின் மணம் அறியும் வண்டு அதன் மதுவை உறிஞ்சுவதைப்போல் ,உயர்ந்த மனிதன் ஒவ்வொரு மனதிலும் இருக்கும் பகவானை அறிந்து கொள்ளுவான்.
औगुन को तो ना गहै,गुनही को लै बीन. घट घट  महंके   मधुप ज्यों ,परमातम लै चीन.


६.
அன்னப் பறவை  பாலும் தண்ணீரும் கலந்து வைத்தால்  பாலை மட்டும்  அருந்தும். நீரை விட்டு விடும்.அவ்வாறே இறைவனை இதயத்தில்  வைத்துள்ள  
இறையன்பன்  அந்த ஆன்மீக தத்துவத்தை மட்டும் ஏற்றுக்கொண்டு ,மற்ற
உலகியல் தீயவைகளை விட்டு விடுவான்
हंसा पय को काढी ले ,छीर नीर निर्वार.ऐसे गहै जो सार को,सो जन उतरे पार.
७.
छीर रूप सतनाम है, नीर रूप व्यवहार. हंस रूप कोई साध है,तत का छाननहार.

இறைவனின்   நாமம்  பால் போன்று தத்துவம் நிறைந்தது.உலகியல் விவகாரங்கள்  தண்ணீர் போன்று சார மற்றது.இவ்வாறே அன்னம் போன்று
சாது -மகான்கள் சாரம்- சாரமற்ற தன்மை அறிந்து  இறைவனையே சரணடைகின்றனர்.
8 .
समदृष्टि  सतगुरु  किया,दीया अविचल ज्ञान.जहँ देखौ तहँ एक ही ,दूजा नाहीं आन.

எனக்கு குருவானவர்  அசையாத திட மான அறிவை தயக்கமில்லா அறிவை 
கொடுத்துள்ளார். சம நோக்கைக் கொடுத்துள்ளார்.ஆகையால் நான் எங்கு
நோக்கினும் அந்த ஒரே தத்துவமான இறைவனை பார்க்கிறேன்.வேறு ஏதும்
எனக்கு எண்ணங்கள் (உலகவியல்)ஏற்படவில்லை.
௯.
சமநோக்கு என்பது அமைதி ,எல்லா மதங்களையும் சமமாக பாவிப்பது.
எல்லா பிராணிகளின் ஆன்மாக்களையும் ஒன்றாகக் கருதுவது.சமமாக நோக்குவது.
समदृष्टि  तब जानिये,सीतल समता होय.सब जीवन की आत्मा ,लखै एक सी सोय.


 







r

divine experience--kabeer in tamil-eeswaraanu bhooti

                                                                                        १.



கபீர்  தாசர்  ஆத்மா ஞானம் பற்றி கூறும் போது  அது விளக்கமளிக்க முடியாத


ஒரு தெய்வீக உணர்வு என்கிறார்.
ஒரு வாய் பேச முடியாத ஊமை வெல்லம் சாப்பிட்ட இனிமையை உணர்வது போல் தான் நாம் உணர முடியுமே தவிர அதை கூறி விளக்க முடியாது.
आतम अनुभव ज्ञान की,जो कोई  पूछे बात. सो गूंगा गुड खाइकै,कहै कौन मुख स्वाद.

२.
ஊமையின்  சங்கேத மொழியை ஒரு ஊமையால் தான்  புரிந்து கொள்ள முடியும்.அவ்வாறே ஆன்ம ஞானத்தின் முழு ஆனந்த உணர்வை ஒரு ஆன்ம
ஞானியால் தான் உணரமுடியும்.
ज्यों गूंगे के सैन को ,गूंगा ही पहचान.
त्यों ज्ञानी के सुक्ख को ज्ञानी होय सो जान.

३.

कागद लिखे सो कागदी,की ब्योहारी  जीव.
आतम दृष्टी कहां लिखै,जित देखी तित पीव.

நாம் அறிவு என்று காகிதத்தில் எழுதும்  அறிவு  ulakil nadai  murai  அறிவு.
aanaal ullunarvin paarvaiyaal கிடைத்த ஞானம் தெய்வீகமானது .அந்த  ஞானம் கிடைத்த  பின்  அங்கிங்கெனாதபடி  எல்லா  இடங்களிலும்  இறைவனே  தென்  படுகிறான் .
4.
ஆத்மாவின்   உள் நோக்கால்  கிடைக்கும்    ஆன்ம   உணர்வு ஈஸ்வரானுபூதி  .அது பார்த்து  உணரும்  அறிவு.ஆத்மா உணர்வு ஏற்பட்ட   பின் ஜீவாத்மா   பரமாத்மா  ஈரரக்   கலந்து   ஒன்றறக் கலந்து விடுகிறது..அந்த உயர்ந்த  நிலையில்,       உலகப்  பற்று  ஏற்படுத்தும்  பஞ்ச 
 தத்துவங்களும் வறண்டுவிடும்
लिखी-लिखी  की है नहीं, देखा-देखी बात ;दुल्हदुल्हीं मिलगये,फीकी पड़ी बरात.
५.
भरो होय सो रीती,रीतो होय भराय; रीतो भरो न पाईये,अनुभव सोए कहाय;
அறிவு  நிறைந்தவன் ஆன்ம ஞானம் பெற்ற பின் முழுமையான ஞானம் பெற்றும் வெறுமையை உணர்கிறான்.அறியாமையால் நிறைந்தவன் ஆன்ம ஞானம் பெற்று முழுமையான ஞானம் பெற்ற அனுபவம் பெறுகிறான்.உண்மையான உணர்வு பரிபூர்ண  ஞான நிலை.அந்நிலையில்
வெறுமையும் முழுமையும்  சமமாகிறது.
ஆணவத்தில் மூழ்கும் அறிவாளி வெறுமை அடைகிறான் பணிவின் காரணமாக  வெறுமை உணர்பவன் முழுமை பெற்ற ஞானி ஆகிறான்.
.