செவ்வாய், டிசம்பர் 13, 2011

 போதி மரத்தில் அவன் பெற்ற ஞானம்,
ஆசையைத்  துறந்து அஹிம்சை,
அன்பு ,வாய்மை,தொண்டு  என்று
அவரை ஆசிய ஜ்யோதி ஆக்கியது.
இன்றைய அரசியல் வாதிகள்,
அவர்கள் சேர்க்கும் சொத்துக்கள்,
அவர்களின் ஊழல்கள் ,
நீதித்துறை,காவல் துறை
அனைவரின் அமைதி
நீதியின் தீர்ப்பில் தாமதம்,
இது புத்தர் பிறந்த நாடா?
அவர் சீடரான அசோகர்
மனம் திருந்திய நாடா,
நாட்டின் பணம் ,
கருப்புப்பணம்,
ஊழல் பணம்,
வெளி நாட்டு வங்கிகளில்,
நாட்டுக்கு துரோகம்,
தீமை ,
இந்த துரோகிகள் ,
நிரந்தரமாக,
இருப்பவர்களா//?
இதற்கு சட்டம் கொண்டுவராமல்,
இவர்கள் பட்டியலை
வெளியிடாமல்,
ஆதரவளிப்பவர்கள்,
ஆத்மா சோதனை செய்யாமல்,
மனசாட்சி இல்லாமல் உள்ளனரே.
ஆண்டவன் உள்ளானா?
அவன் லீலை.கர்மவினை என்ற
ஆன்மீக வாதிகள் சப்பைக்கட்டுகள்,
அராஜகம் வளர்க்குமே தவிர
தர்ம வான்கள்  உள்ளம் குமிரிக்கொண்டே இருக்கும்.

soordhass prayer

சூர்தாஸ் ஹிந்தி பக்தி கால இலக்கியத்தின் சூரியன் என்று போற்றப்படுபவர்

பகவான் ஸ்ரீ கிருஷ்ண பக்தரான இவர்  மனம் வேறு எந்த இறைவனையும்

விரும்பவில்லை.

 அவர் பகவான் ஹரியை வணங்கு வதற்கான காரணங்களாக

ஒரு பஜனைப்பாடல் இயற்றி உள்ளார்.

1.
நான் ஹரியின் தாமரைப் பாதங்களை  வணங்குகிறேன்.

அவரின் கிருபையால், கால் ஊனமுற்றவனால் ,

மலைமேல் ஏறி இறங்க முடியும்.

கண்தெரியாதவனால்

 எல்லாவற்றையும் பார்க்க முடியும்.

காது கேட்காதவனால்

 கேட்க முடியும்.

ஊமையால்

 பேசமுடியும்.

ஏழையால்

  மன்னனாக முடியும்.

உலகில்  ஹரியின்  அருளால்

இயலாது  என்பதெல்லாம்

இயல்பாக  இயங்கும்.



                                    2.

சூர்தாஸ்  நந்தனின் புத்திரனிடம் வேண்டுகிறார் :-

பிறந்தது   முதல் ,நான் ஆடாத ஆட்டமில்லை.

காமம் ,குரோதம் என்ற ஆடை அணிந்து ஆடினேன்.

 இவ்வுலக இன்பங்களின் மாலையாக

கழுத்தில்  அணிந்து  ஆடினேன்.

காலில் மோகம் என்ற சலங்கை அணிந்து ஆடினேன்.

இவ்வுலகை  உண்மை என்றும்  ,

நிலையானது  என்றும்  நினைத்து,

  மாயையில்  மனம் என்ற மிருதங்கம்

வாசித்துக்கொண்டே இருந்ததது.

கெட்டவர்களின் சகவாசம் என்னை

  மாற்றி-மாற்றி ஆடவைத்தது.

மாயை என்ற ஆடை  இடையில்  கண்களை  மறைக்க


பேராசையை என்ற திலகத்தை நெற்றியில்  இட்டு

ஆடாத ஆட்டங்கள் ஆடினேன்.-என்

ஆட்டங்கள் அறியாமையால் தான்.

அறியாமல் முட்டாள்தனமான என் ஆட்டங்களுக்கு

வடிகாலாக   உன்னைக்  கருதி  உன்னை

சரணடைகிறேன்.

.நந்தகோபால!சூர்தாஸின்

 வேண்டுகோள்  இதுதான்--

எனக்கு  முக்தி கொடு.
what is the price of one k.g. potato.==oru kilo urulaikkilangu vilai  evvalavu? or vilai enna.=ஒரு கிலோ உருளைக்கிழங்கு விலை எவ்வளவு/ /விலை என்ன?

एक किलो आलू का दाम. कितने रूपये हैं.? ek kilo aalu kaa dam kitne rupye hain  ?

wine shop+temple

மதுக்கடையும் கோவிலும்

அமிதாப் பச்சன் தந்தை ஹரிவம்சராய் பச்சன்.
அவர் ஹிந்தியில்  புகழ் பெற்ற  கவிஞர்.
மகன் பெயரால் இன்று ஹிந்தி படிக்காத
தமிழர்களுக்கு அறிமுகம்.

அவரின் கவிதை மது சாலா

அதன் மையப்பொருள் கொண்டு தமிழில் அறிமுகம்.

 ஹிந்து தனித்திருந்தான் ஆலயத்தில்.

முஸ்லிம் தனித்திருந்தான்  மசூதியில்.

கிறிஸ்தவன்  தனித்திருந்தான் சர்ச்சில்.

மூவரும் சந்தித்து ஒற்றுமையாய்  ஒரே கோப்பையில்.
மகிழ்ச்சியாக  ஆனந்தமாய் மன நிறைவாய்
சகோதரப்பாசத்துடன் இணைத்த இடம்
ஆலயங்கள் அல்ல.
அவை அவர்களைப் பிரித்தன,

மனிதர்களை இணைத்த இடம்
மதுசாலை.

புரோஹிதர்கள்,பண்டிதர்கள்,
மௌலவிகள்,பாதரியார்கள்,
பிரித்த உறவுகளை 
மீண்டும் இணைக்க
அழைக்கிறது  எனது மதுக்கடை
அதாவது என் கவிதைகள்.
சண்டைகள் உருவாக்கும் தேவாலயங்கள்,
எனது கவிதை என்ற மதுக்கடை
 மதங்களை
இணைக்கும்
.மனங்களை
  இணைக்கும்,
மனிதநேயம் வளர்க்கும்,
 எனது மதுசாலை  கவிதைகள்.




Bharath peak of the wold.bharatham baarin sikaram

பாரதம் 
பாருக்குள்ளே நல்ல நாடு பாரதம்,
சாரேன் ஜஹான் சே அச்சா,
ஹிந்துஸ்தான்  ஹமாரா ஹமாரா.

நீர் அதன்  புதல்வர் இந்நினைவு அகற்றாதீர் ..
என்றான்  பாரதி. அவன் தீர்க்க தர்ஷி.
அதாவது தொலைநோக்குப்பார்வை .
               பாரத
 வரலாறு அறிந்தவன்.
அவனுக்கு அம்பியையும் தெரியும்.
ஆம்பியையும் புருசோத்தமனையும்
தெரியும்.எட்டப்பனையும் தெரியும்.
ஏமாற்றுக்காரர்களையும் தெரியும்.-அதனால்
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்றன்.
இன்றும் ஜாதி அலை ஓயவில்லை.
தேர்தல் என்றாலே ஜாதி தான் முதலிடம்.
அனைத்து விண்ணப்பங்களும் ஜாதி
கேட்டு தான் அச்சடிக்கப்படுகின்றன.
காரணம்?
அவை இருந்தால் தான் அரசியல் நடத்தமுடியும்.
மக்களை ஏமாற்றமுடியும்.
அக்ரகாரங்கள்  ஆங்கிலம் படிக்கின்றன.
காயத்த்ரி மந்திரம் சந்தியா வந்தனம்
எங்கே பிராமணன் தொடரில் புரிந்தன,

பொருள் தேடும் உலகு தான்.
அருள் தேடும் உலகு  பொருள் இருந்தால் தானே.?
பாரில் பாரதம் சிகரம் என்று போய் ,
baril தான் நாட்டு நல திட்ட வருமானம் என்ற நிலை.
பார்  பார் baaril  வருமானம் பார்.
bottle    பெற்றுவோட்டு போட்டுப்பார்.
மயக்கத்திலே மதி மயக்கத்திலே
baarukkuppo  நாட்டு நலத்திட்ட வருமானம் கொடு.
வீட்டு நலம் குடும்ப நலம் மற
சுய நல அரசியலால்  சரக்கை ஏற்றி,
பொது சொத்தை நாசமாக்கு,
அது நம் வரிப்பணம் என்பதை மறந்து விடு.
சாலைகளில் பள்ளம் தோண்டு,
தண்டவாளத்தைத் தகர்த்து விடு.
அரசுப்  பேருந்தை கலவரம் என்று   எரித்துவிடு.
குண்டர்களை கூலிப்படைகளை,
அரசும் நீதித்துறையும் காவல் துறையும்
கண்டு கொள்ளாது.
அப்பாவி  பொதுஜனங்களை  அப்  பாவி
அரசு   கொன்று குவிக்கும்.
தேர்தல் வந்தால் கறுப்புப் பணம்.
பெற்று  நல்லவர்களுக்கு வாக்களிக்காதே.

இவை எல்லாம் தெரிந்தே முண்டாசுக்கவி
மீசை முறுக்கிக் கூவினான்,
பாரத நாடு பாருக்கெல்லாம் ,திலகம்
இன்னினைவை  அகற்றாதீர்  என்று.
அவனுக்குத்தெரியாது,
பார்.  இன்றைய பாரதம்  bar  ஆகும் என்று.   ,



   
um