திங்கள், டிசம்பர் 19, 2011

iraippatru.love towards God

இறைப்பற்று

அனந்த ஆதிஅந்தம்  இல்லா,  ,
ஆண்டவன் மேல் அன்பு,
அவனியில் இருந்தால்,
புறக்கவலைகள்
 நீங்கி,
அக மகிழ்ச்சி
உண்டாகும்.
அவன் செயல்,
அவன் லீலை,-என்றால்
அவனியில்
 அமைதி உண்டாம்.
முயற்சியில்
முழு மனிதனாகவும் ,
முக்கால ஞானம் பெறவும்,
முழு முதற்கடவுளின்,
நற் கருணை ஒன்றே வசியம்.
ஆண்டவன் அருள் பெற்றோர்,
அவனியில் ஆண்டவனே.
அறிஞர்கள்,
அறிவியல்
 ஆன்றோர்,
ஆட்சி பீடத்தில்
ஆட்சி செய்தோர் என,
அவனியில்,
பல்லாயிரம் பேர்.
காலத்தின்
 மாற்றத்தால்,
அவர்கள்
சிந்தனைக்
கொள்கைகள்,
கண்டுபிடிப்புகள்,
மாற்றமே ஆகி,
அவர்கள் அடிக்கல்
ஆகின்றனர்.--ஆனால்
ஆன்மீகப்பெரியார்கள்,
உயர்ந்த சிகரத்திலே ,
உயர்ந்து
போற்றப்படுகிறார்கள்.
அவர்களின்,
சத்தியம்,
நேர்மை,
 பரோபகாரம்
,தொண்டுள்ளம்,
தியாகம்,மனிதநேயம்,
அவனியில் ஆணிவேராகி,
அழியும் அவனியிலும்,
ஆணிவேராக
ஆலாக,
வளர்ந்து,
அன்பே வுருவாகி,
பண்பே பதிவாகி,
அமைதி! அமைதி ! அமைதி!
ऊं शांती !शांती! शान्ति: !





கருத்துகள் இல்லை: