ஞாயிறு, மே 05, 2013

தேசப்பற்று மிக்கோர்கள் கண்ணீர் சிந்தும் காலமிது.

சுதந்திரம் கிடைத்தும் அரசியல்வாதிகள்

 இன்னும் ஆங்கில ஆட்சியின் போராட்டங்களையே.

பொது சொத்துக்களை  அழிப்பது ,எரிப்பது,

  தொடர்வது நாட்டுப்பற்று  உள்ளவர்களுக்கு வேதனை தருகிறது.

வன்முறையால்  பொதுமக்களுக்கு  இடையூறு

ஏற்படுத்துவதால்  கட்சி வளருமா?

மக்களுக்கு பயம் வருமே ?

எத்தனை பயணிகள்?

 எவ்வளவு இடையூறுகள்.

அவசரப்பயணம்-  அது

 சிகிச்சைக்காக  இருக்கலாம்.

சுப காரியங்களுக்குச் செல்ல ,

இதுவே அபசகுனம் என்று தடையாகலாம்.


வேலைக்கு நேர்காணல் செல்வோருக்கு

வேலைவாய்ப்பு  இழக்கும் சூழல்.

பேருந்து  ௨௦௦க்க்கு மேல் என்றால்

அது மக்களின் சொத்து அல்லவா?

மக்களின் வரிப்பணம் அல்லவா?

நடு இரவில் இறங்கி கண்ணீர் விடும் பயணிகள் .

பெண்கள் ,குழந்தைகள் படும் இன்னல்கள்,

இரக்கமில்லா அரசியல் போராட்டம்.

இவர்களின் அதரவு பெற்று தேர்தலில் வெற்றி பெற

வன்முறையில் ஈடுபடுவோருக்கு அதரவு  குரல் எழுப்பும்

பெருந்தலைகள். நெஞ்சு பொறுக்கவில்லை

வேதனை!!   ஏன் சுதந்திரம் பெற்றோம்!!! என்று.

ஊழல் ,சட்டங்களை மதிக்கா அரசியல் தலைவர்கள்.

அவர்களுக்கு சலாம் போட்டால் பதவி உயர்வு என

அராஜகத்திற்கும் ,கொடுமைகளுக்கும் உடன் செல்லும்

அதிகாரிகள்;  அவர்களைவிட  ஊழல் அரசியல் வாதிகளுக்கு

வாக்களிக்கும் கூட்டம்;  தேர்தல் சாவடி வன்முறைகள்;

கள்ள  ஓட்டுக்கள்;  ஓட்டுச் சாவடி சென்றால்

  வாக்களர் பட்டியலில்  பெயர் இல்லை;

அல்லது வாக்களிக்கப்பட்டது  என்ற நிலை;

பணம் தான் என்று மனசாட்சி  இல்லா

 வாக்காளர்கள்,

இலவசம் என்ற பெயரில் மக்கள்  வரிப்பணத்தில்

கொடுக்கும் பொருள்கள் ,
தங்கள் கட்சி அளிப்பதாகக் கூறி

ஏமாற்றும் அரசியலுக்குத்

தாளம் போடும் அறியாத மக்கள்.

மின்சாரம்  இல்லா ஊரில்

மின்விசிறி,மாவரைக்கும் இயந்திரம் இலவசம்.
வலைதள வசதியில்லாமல் மடிகணினி;

அடிப்படை வசதி செய்யா இலவசம்;
கோடிக்கணக்கில் பணம்; விரயம்;

குருடனை ராஜா பார்வை பார் என்பது போல்;

பயன்படுத்த முடியா இலவசங்கள்;

ஊழல் விரும்பிகள்,கைஊட்டளித்து  கையூட்டு பெற்று வாழும்

பொதுமக்கள் ; அதிகாரிகள்;கட்டைபஞ்சாயத்து;

இதைவிட  வரிப்பணம் கட்டிய ரசீதை காட்டவேண்டுமாம்

இல்லை எனில்  வரி கட்டவில்லை என்றே  கருத்தாம்.

அரசுப்பதிவேடுகள் என்ன ?

  இரக்கமற்ற இள நிலை உதவியாளர்கள்;

அவர்களுக்கு ஆதரவாக  இருக்கும் அதிகாரிகள்;

என்னே ஜனநாயகம்!!!

இது பண நாயகம்???!!!

அரசியல் வாதிகளின் அராஜகம்;

பணம் பெற்று வாக்களிக்கும்

நாட்டுப்பற்று,நியாயம்,நேர்மை விரும்பா

சுயநல  வாக்காளர்கள் நாயகம்!!!.

இப்பொழுது பாரதியின் பாடல் தான் நினைவுக்கு

வருகிறது----

நெஞ்சு பொறுக்க   வில்லையே இந்த

நிலைகெட்ட  மானிடரை  நினைத்து  விட்டால் ...

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்ணீர் சிந்தும் குடியாட்சி!!

ஊழல் ஒழிக்க வழியில்லை என்று

நீதிபதிகள்  கண்ணீர் சிந்தும் காட்சி!!!

தேர்தல் ஆணையர் தேர்தல்

 நேர கள்ளப்பணம் கண்டு

விடுக்கும்  அறிக்கைகள் ;

ஒழுங்குநிலை படுத்த முடியவில்லை என்ற ஒப்பாரி.

பொதுச்சொத்து நாசப்படுத்துவோர்களுக்கு

கடும் தண்டனை அளிக்கும் வரை

இத்தகைய அரசியலை    பொது ஜனம்  வெறுக்கும் வரை ,

ஒதுக்கும் வரை, நேர்மை காண முடியாது;

தேசப்பற்று மிக்கோர்கள்  கண்ணீர்  சிந்தும் காலமிது.