ஞாயிறு, ஏப்ரல் 01, 2012

poruthamillaa uravu.

மனிதனின் கற்பனை வளம்
 புதியவற்றை கண்டுபிடித்துக்கொண்டே
 இருக்கிறது.
 ஆனால் அவன்  மனம்  நிறைவு  பெறவில்லை
.அதனால் தான் அவன்
 முதுமை அடைந்த பெற்றோர்களையும்
புது வித மயக்கத்தால் மறந்துவிடுகிறான்
. அல்லது மாதம் ஒரு பெரும் துகை கொடுத்தல் தான்
 கடமை என்று நினைக்கிறான்.
புதிய எண்ணங்கள்.மாற்றங்கள்
 அவன் படித்த மொழி
 அவனை இயந்திரமாக்கிவிட்டது.
 காரணம் அவன் ஒரு இயந்திரத்தோடு
 ஐக்கியமாகிவிட்டான்
.ஒரு புதுக்கவிதை
 பணம் உள்ளது
.வேலை உள்ளது
.மன மகிழ்ச்சி உள்ளது
.ஆனால் மன நிறைவுதான் இல்லை
.விவாகம் ஜாதகப் பொருத்தம் பார்த்தாலும்
 ,காதலித்து மணந்தாலும்
 விவாகரத்தில் முடிகிறது.
ஆண்களின் சிற்றின்ப ஆசைகள்
 ஏக்கத்தில் முடிகின்றன
. பெண்களின் ஆசைகள்
 அவர்கள் மனம் வைத்ததால்
 செயலில் முடிகின்றன.
விளைவு 37   வயது ஆசிரியை 25  வயது ஆசிரியை
  17 ,15  வயது மாணவனை கடத்துவது
,46  வயது அன்னை தன் மகனின் 26  வயது நண்பனுடன்
 தொடர்பு கொண்டு அடுத்த ஜன்மத்தில்
 சேர இருவரும் தற்கொலை செய்து கொள்வது
இதெல்லாம் அவன் அறிவியல்
 வளர்ச்சியால் ஏற்பட்ட காமக் கிளர்ச்சிகள்.


நம் முன்னோர்கள் ஆன்மிகம் கலந்த
அறிவியலுக்கு முக்கியத்துவம் அளித்ததால்
  மனக்கட்டுப்பாடு,பிரமச்சரியம் ,கற்பு 
,என ஒருவித ஆன்மிக பயம் காட்டப்பட்டது.
ஆனால் இன்று அறிவியலுக்கு  முக்கியத்துவம்.
 புலன் அடக்கம்,காமக்கட்டுப்பாடு என்பது உடல் நலனுக்கு கேடு என்றும்,காப்பி அல்லது  தேநீர் அருந்துவதுபோல் என்றும் கூறப்படுகிறது.
எனவே தான் சமுதாயத்தில் அமைதியின்மை.
முறையற்ற உறவுகள்,தொடர்புகள்.கொலைகள்,தற்கொலைகள்.