வியாழன், டிசம்பர் 13, 2012

ஆற்றலும் "நான்" என்ற பார்வையில் அழிவையும் தரும்.


இன்றியமையாத  ஒன்று 
இறைவழிபாடு  என்று 
அகிலம் கூறினாலும் ,
அறிவியல் அறிஞர்கள்  கூறினாலும்,
சிலருக்கு சில சமயம் 
உலக  நடப்பினைக் கண்டு '
உலகநாதன் மேல் வெறுப்பு 
ஏற்படுவது உண்டு.
நாம் கடவுளின் மேல் நம்பிக்கை வைத்துள்ளோம்.

நாம் துவக்கும் செயல் தோல்வி கண்டால் 

அச்செயலை மாற்றி விடுவோம்.
அதே செயல் அடுத்தவர்களுக்கு 
வெற்றிக் கனி தருவது கண்டு,
மீண்டும் அதே செயலில் 
ஈடுபடுவோர் உண்டு.
மீண்டும் தோல்வி என்றால் 
விதி என்ற ஓர் கருத்து எழுவது உண்டு.

அதை அதிர்ஷ்டம் என்போரும் உண்டு.
 'அத்ருஷ்ட ' என்றால் பார்க்காத என்ற பொருள்.
பார்வைக்குப் புலப்படாத ஒரு சக்தி 
நமக்கு தரும் ஆற்றல் /தோல்வி 
அதுவே  ஆன்மீக சக்தி.
அமானுஷ்ய சக்தி.
அதுவே இறைவன்.
இறைவனுக்கு முன்
 மதங்கள் 
கிடையாது.
மனிதனின் வினை தான் முக்கியம்.
மனிதனுக்குத்   தீய நோக்கம் ஏன்  வருகிறது 
என்ற வினா  எழுவது உண்டு.

முள், மலர், அம்ருதம் விஷம் 
இதில் நல்லதை ஏற்று அல்லதை 
விடும்  அறிவு/ஞானம் 
மனிதனுக்கு உண்டு.
பூபாரம்  குறைக்கவேண்டும்.
அதற்கு பாவ எண்ணங்கள் .
புண்ணியவான் மரணம் 
பாவி மரணம் 
அனைத்தையும் சிந்தித்தால் 
ஆட்டிப்படைக்கும் ஆண்டவன் ஆற்றல் 
அண்மையில் தெளிவுறும் தென்படும்.
அளவுக்கு மீறி கொடுத்த அறிவும்  
அளவுக்கு மீறி கிடைக்கும் செல்வமும் 
அகங்காரம் அளித்து 
நல்லதைச் செய்தாலும் 
தீமையே அதிகம் செய்யும்.
அளவுக்கு மிஞ்சினால் அமிருதமும் நஞ்சாகும்.
அப்பொழுது ஆண்டவன்  ஆற்றலும்   "நான்"
என்ற பார்வையில் அழிவையும் தரும்.