ஞாயிறு, நவம்பர் 20, 2022

இயற்கையின் அதிசயங்கள்

 S. Anandakrishnan।

சே.அனந்தகிருஷ்ணன்.

தலைப்பு ---இயற்கையின் அதிசயம்.


முன்னுரை --உலகில் இயற்கையின் அதிசயம் மனிதனின் கற்பனைக்கு ஆதாரங்கள்.

ஒவ்வொரு நிகழ்விலும் ஆலம் விதையின் பெரும் மரம். தென்னை மர இளநீர் தண்ணீர்.

உப்புக்கடல்  கரையில்  குடிநீர் ஊற்று.

பாலைவனத்தில் சோலை வனம்.

வடதுருவ தென்துருவப் பனியில் வாழும் பனிமனிதன். பனிக்கரடி. அதிசயங்கள் .

பொருளடக்கம்

   இயற்கை அதிசயங்களில் ஒன்று வண்ண மலர்கள்.  அதில் வீசும் மணம். மூலிகைகளின் மருத்துவக் குணங்கள்.  முறிந்த எலும்புகளை ஒட்ட வைக்கும்  அதிசயம்.

 விலங்குகளில் பெரிய யானையின் சைவ உணவு.

 புலி சிங்கம்  போன்ற வலிமை மிக்க அசைவ மிருகங்கள். மான்,முயல் போன்ற சாதுவான மிருகங்கள். 

 தேள் பாம்பு நட்டுவாக்காலி போன்ற விடப்பூச்சிகள்.

தேனீயின்‍ சுவைமிக்கத் தேன். 

  பறவைகளின் நிறங்கள் ஓசைகள் கூடுகள்.  தூக்கணாங்

குருவியின் கூடுகள்.

  கரையான் புற்று. அதில் வாழும் பாம்புகள். எறும்புப் புற்று. அதில் சேமித்து வைக்கும் உணவுப் பொருட்கள். 

கொசுக்கள் கூட்டம்.

அந்த சிறிய கொசுவிற்குப் பயப்படும் ஆறறிவு பெற்ற மனிதர்கள்.

  வயிற்றில் வளரும் நாடாப் புழுக்கள். 

 வாயில் போடும் மணம் மிக்க உணவு அதிக நாற்றமாக வெளி வருதல். 

 இரத்த ஓட்டம்

 இரத்த வகைகள்.

கண்ணுக்குத் தெரியாத விந்து மூலம் கரு உருவாகி கண் காது மூக்கு மூளை அறிவுள்ள அறிவற்ற மனிதர்கள்.

 பிறவிக்கு ருது பிறவி அங்ககீனர் கள்    இளம்பிள்ளை வாதம்  முதுமை இளமை மரணம் ஒவ்வொன்றும் இயற்கையின் விந்தையே.

 பிஞ்சில் துவர்ப்பு காயில் புளிப்பு பழத்தின்   இனிப்பு.

பழத்திலும் புளிப்பு.

 ஊறும் நத்தைகள் அது சுமந்து வரும் பாதுகாப்புக் கூடு. 

பறக்கும் பறவை.

 மிக உயரமாக பறக்கும் கருடன்.கழுகு.

 நீர்வாழ்வன. நீரிலும் நிலத்திலும் வாழ்வன.


உறுதி வாய்ந்த தேக்கு மரம். தொட்டால் முறியும் முருங்கை. 

  

    பூச்சிகளைத் தின்னும் செடிகள்.

மண் வகைகள்.

 மண்வளத்திற்கேற்ப  மரம் செடி கொடிகள்.

     குளிர் காற்று புயல் சூறாவளிஆழிப் பேரலை  நில நடுக்கம்.இப்படி  இயற்கையின் அதிசயங்கள் எண்ணில் அடங்காதவை.

 முடிவுரை  :- இயற்கையின் சூரிய சந்திர விண்மீன்கள் ஒளியும்   அதிசயம். மினுக்கட்டான் பூச்சியின் ஒளி.

 குளிர் நீர் வெந்நீர் ஊற்றுகள்   என்று  இயற்கையின் அதிசயங்கள்   அமானுஷ்யமானவை.