திங்கள், ஜூன் 10, 2013

ஒரு யுகாவதர புருஷனைப் புவிக்கு அனுப்பு.

  நாட்டின் சுதந்திரம்
 தன்நல மற்ற தியாகிகளால் 
கிடைத்தது.
தன நல்லுயிர்,
உற்றார் உறவினர் 
மேல் கொண்ட பாசம் 
கட்டிய மனைவியின் மோகம் 
பெற்றெடுத்த குழந்தை 
நேரடியாக கொஞ்ச முடியா நிலை 
அனைத்துயும் துறந்து 
நாடே பெரிதென 
நாட்டுப்பற்று காரணமாக 
தேசபக்திக்காக 
துறவறம் பூண்டு ,
சிறைச்சாலைக் கொடுமைகள் ,
சுதந்திரம் காணாமலே 
உயிர் துறந்த தியாகிகள்.

ஆனால் ,விடுதலைக்குப்பின் 

நாடு முன்னேற்றம் அடைந்தாலும்,

ஏழைகளும் ,நடுத்தர மக்களும் 

சுகம் பெறவில்லை.

வீடுகட்ட அனுமதி,வங்கிக்கடன்,

ஆனால் கட்டிய வீடுகளுக்கு 

செல்ல நல்ல சாலைகள் கிடையாது.

கழிவுநீர் வசதிகள் கிடையாது,

குடிநீர் வசதிகள் கிடையாது.

சமாதிகள் புதுப்பிக்க,
சிலைகள் எடுக்க ,
வளைவுகள் இடிக்க,மீண்டும் தாங்கி வைக்க 

என பல கோடி ரூபாய்கள்.
இன்று ஒரு சிலைக்கு ௧௦௦ கோடி ரூபாய்.

கட்டிய வீட்டிற்குச் செல்ல சாலைகள் இல்லை.
சாக்கடை நீர் செல்ல வசதி இல்லை.
குடிநீர் வசதி இல்லை.

ஆனால் இது அனைத்திற்கும் வரி மட்டும் வசூல் .

அப்பணம் ஆட்சியாளர் ,ஆளும் கட்சி மகிழ்ச்சிக்கே.

விரிவாக்கம் செய்யப்பட்ட புது நகர்ப் பகுதிக்கு 

அடிப்படை வசதி செய்யா அரசுகள்,

நிரந்தர  முதல்வர்/பிரதமர்  என்ற கனவுகள் 

பலித்தால் ஆண்டவன்
 இருப்பது அகிலத்தில் உண்மையா?
கோடிக்கணக்கில் ஊழல் செய்து ,
சுகபோக வாழ்க்கை.
இறைவா! நீ இருப்பதை நிரூபிக்க 

ஊழல் வாதிகளுக்கு ஒரு முடிவைக் கொடு.

ஒரு யுகாவதர புருஷனைப் புவிக்கு அனுப்பு.