கிருஷ்ணன் பிறந்த பூமி .,
மகா பாரதப்போர் கண்ட பூமி.,
கிருஷ்ணனிடம் ஒரு வினா.!!!
தீயவர் களைப் படைத்து .
தீயவர் களை
அழிக்க
ஏன் அவதரித்தாய்.???
கள்ளக்கண்ணன்
சிரிக்கிறான்.
அதில்
ஆயிரம் எண்ணங்கள் !!!
நான் படைத்த படைப்பில்
மானிடம்
மென்மையானது.
மேன்மையானது.
மேன்மை மறந்து ,
எண்ணங்கள் சிதறி
உள்ளம் குறுகி
உண்மை உணரா
மானுடனை
அவன்
செய்தது அறிய
தீமைகள் ஒழிய,
நான் ,
அவதரித்தேன்.
மீண்டும்
அவனை அறவழியில்
அழைத்துச்செல்லவே ,
என் அவதாரம்.
நான்
தவறுணர்ந்து ,
அவன் பாதம்
அருள் வேண்டி
பற்றுகிறேன்.
பற்றுகிறேன் ,
அவன் நாமம்
ஜபித்திடவே .
வேண்டுகிறேன்.
மீண்டும்
அவதரிக்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக