வியாழன், நவம்பர் 01, 2012

விரும்பியவளின் நினைவு


விரும்பியவளின்  நினைவு 
அது  விரும்பியவள்  விரும்பாவிட்டால்.
சீ"சீ " இந்தப்பழம் புளிக்கும் என்பதே 
சிறுவயதில் நான் படித்த கதை.
நினைவலைகள் ஆழ்  கடலாக
மன அலைகள் அமைதியாக,
ஓரக் காற்றை ஓரங்கட்ட .
ஒரே வழி  கடமையாகும்.
அதற்கென்றே ஆழ் நிலை தியானம்.
ஆன்மீக வழி ,பிராணாயாமம் .
ஐந்துநிமிட மூச்சு உள்மூச்சு ,வெளிமூச்சு.
நீ  மனிதன் . நினைவலைகள் வாட்டும் போது 
நிராசை அடையாதே.
நானிலத்திற்கு 
பணியாற்றும்  நற்செயலில் மனம் செழுத்து.
விரும்பியவள் விரும்பாவிட்டால்.
அது நட்பா,சதைப்பற்றா  நினைத்துப்பார்.
எதுவுமே  அழுகும் நிலை.
இதை சமுதாயம் இயம்பமறுப்பதால் ,
இளைஞர்கள்  நிலை,
புத்தரை நினை.
உலகம் மாறுகிறது .
உள்ளம் மாறும்.
நினைக்கத் தெரிந்த மனமே மறக்கத் தெரியாதா 
என்பது  உலகியல்.
மறக்க முடியும் என்பது அற  இயல்.
அறம்  நிலையானது.
அவளின் நினைவு அகவை கூடக்கூட 
அழியக்கூடியது.
நீ ஆறு  அறிவு  படைத்த மனிதன்.
நினைவலைகளை  இப்பக்கம் 
திருப்பும் ஆற்றல் மனிதனுக்கே உண்டு;
ஆகையால் தான் 
நன்றிக்கு நாய்.
நாய் போல் நாறாதே; அலையாதே 
என்ற வசவுகள்.

சில பெற்றோர்களால் பாதிப்படையும் பல மாணவர்கள்.பாரதம் ஒன்றே பாரினில் தனக்கு உவமை இல்லாத ஒப்பில்லாதநாடு.

சில  பெற்றோர்களால் பாதிப்படையும் பல மாணவர்கள்.


எனது ஆசிரியர் தொழில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒருவிதமான மனக்கட்டுப்பாடற்ற பாலியலில் ஈடுபடும் மாணவர்கள்  இதனால் பலரின் பாதிப்பு.தனியார் பள்ளிகளில் ஒருவிதமானபாதிப்பு 
அனைத்திற்கும் பெற்றோர்களும் சமுதாயமும் பணத்தாசைபிடித்த வியாபாரிகளும் தான் காரணம்.

எனது ஆசிரியர் தொழிலில் முதல் அதிர்ச்சி.

நான் ஒரு  ஐ.சி.எஸ்.சி   அங்கிகாரம் பெற  முயற்சித்த ஒரு பேரூரில் தான் ஆசிரியர் பணியில் சேர்ந்தேன்.அப்பள்ளியில் ஒருநாள்  யு.கே.ஜி .வகுப்பில்படிக்கும் ஒரு பெண் குழந்தையும் ஆண் குழந்தையும் வகுப்பில் காண வில்லை. வகுப்பறையின் பின்னால் இருந்த சிறு சந்தில் இருந்தனர்.
அவர்கள் இருந்த நிலையில் ஆசிரியை கோபத்தால் திட்டி அழைத்துவந்தார்.
அந்நிலைக்கு அவர்கள் பெற்றோர்தான் காரணம் .பெற்றோர் உறவில் ஈடுபட்டதை  கண்ட குழந்தைகள் அதே நிலையில்  பள்ளியின் பின்புறத்தை 
பள்ளி அறையாக பயன்படுத்த முயன்ற பிஞ்சுகள்.
இது பெற்றோர்கலால்பாதிப்பு.இளம் தளிராக இருக்கும்போதே.
இது பல பிஞ்சுகளில் நஞ்சு சேரக்காரணம்.

சென்னை மாநகரில் அரசு உதவிபெறும் பள்ளியில் சேர்ந்த பொழுது பல மாணவர்கள்  சாவிக்கொத்து பரிமாற்றம்.அவர்களுக்குள் பேச்சு.அதுவும் ரகசிய முறையில்.பின்னர் தெரிந்தது சாவிக்கொத்தில்பலானா படங்கள்.அதுவும்  பள்ளி அருகில்  உள்ள நடைபாதை வியாபாரிகளால் .பள்ளியின் தேர்ச்சி விகிதம் 25-40%
பின்னர் அறிவியல் வளர்ச்சி .பெருமைபெறும் அளவில் .
படங்கள்.குறுந்தகடுகள். அதிலுள்ளபாலியல்காட்சிகள்.
என்னைபோன்று நகரத்திற்கு பணியில்வரும் ஆசிரியர்களுக்கு  அதிர்ச்சியும் ஆவலும்  இதனால்பல ஆசிரியர்களுக்கும் பாதிப்பு.
இதில் அதிகம் பாதிக்கப் படுவோர்கள் மாநகர  பள்ளி,அரசு உதவிபெரும்   பள்ளி மாணவர்கள்.
பலபள்ளிகளில்  மாணவர்கள் எண்ணிக்கை குறைத்துவிட்டது.
காரணம் 
ஆசிரியர்கள்கடுமையாக தண்டிப்பதை  பெற்றோர்கள்,மாணவர்கள்,சில ஆசிரியர்கள்,அரசு யாரும்விரும்பவில்லை.
மனோதத்துவ முறையில் திருத்த பள்ளிகளில் வசதிகள் இல்லை.
ஆசிரியர்களும் அவர்களை கண்டிக்க முடியவில்லை.அறிவுரையால் தான் திருத்த  முயல்கின்றனர். ஆனால் நகரத்தில் சிறு வீட்டில் ஒரே அறையில் வாழு ம்பெற்றோர்கள்.
அந்த 16--19 வயதில் உள்ள மாணவர்கள் பெண்கள் பின்னால் சென்று தவறுகள் 
செய்கின்றனர்.
அவர்களுக்கு சரியான வழிகாட்டிகள்,ஒழுக்கம்,புலனடக்கம் 
கற்றுக்கொடுக்க சரியான கல்வி முறை,பெற்றோர்கள்,திரைப்படங்கள்,திரைப்பட பாடல்கள் 
பெரியவர்கள்   சூழல் அமையவில்லை.
அன்பழகன் இயக்கத்தில் வெளியான "சாட்டை"கல்வித்துறைக்கு 
ஒரு சாட்டை அடி.
அதுதான் நீயா,நானா  நிகழ்ச்சியில் வெளிப்படையாக பேசாமல் 
வயதுக்கோளாறு என்று கூறப்பட்டது.
மேல்நாட்டு கலாசாரம் நம் நாட்டில் நுழைந்து வளர்வதும் 
இந்த  கணினிப்  பயன்பாடு.

இந்த சூழ்நிலையில் யோகா,ஆன்மிகம் கலந்த ஒரு பாட திட்டம் அவசியம்.
அமெரிக்கத் தேர்தலில் ஒட்டு போடுவோர்களுக்கு இலவச யோகா வகுப்பு விளம்பரம்.
அது நம் நாட்டு உயர்கலை. 
இங்கு மறக்க ,மறைக்கப்பட்டு 
நல்லதை உடனடியாக ஏற்கும் அமெரிக்க நாட்டில் வளம் பெறுகிறது. 
ஜாதி,இனம் ,மதம் பார்க்காமல் நல்லதை ஏற்றால் நாடு நலம் பெரும்.
நம் நாட்டில் தான் சுயநலம் ஜாதி,மத,இனம்  என்ற பெயரால் 
தடைக்கற்களாக பயன் படுத்தப்படுகின்றனவே.

நாட்டின் முன்னேற்றம் என்ற செயல்பாடு 
சுயநலமற்ற முறையில் இன மத,ஜாதி,மொழி  வேறு பாடு 
கருதாமல்  நடந்தால் 
பாரதம்  ஒன்றே பாரினில் தனக்கு உவமை இல்லாத 
ஒப்பில்லாதநாடு.


பாலியல் குற்றங்களுக்கு யார் காரணம்/?

பாலியல் குற்றங்களுக்கு யார் காரணம்/?

நான் 16 வயதிலிருந்து ஆசிரியர். அதுவும் ஹிந்தி ஆசிரியர்.என்னிடம் ஹிந்தி பயில வந்தவர்கள் 
6 வயது முதல் 70 வயதுவரை.
பல வித பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள்.
பல்வேறு துறைகளில் பணியாற்றுபவர்கள்.
கிட்டத்தட்ட 48 ஆண்டுகள் ஆசிரியராக 
மெட்ரிக் பள்ளி,மத்திய அரசுப்பள்ளி,அரசு உதவிபெறும் பள்ளி,ஹிந்தி பிரசார் சபை என்று பலவித மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு.

மாணவர்கள் அனைவரும்  நல்லவர்கள்.
சனாதன தர்மத்தில் பிரமச்சரிய  விரதத்திற்கு முக்கியத்துவம் அளித்தனர்.
புலனடக்கம் பற்றி பேசினர் .
வள்ளுவரும் 
ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் 
ஏமாப்பு உடைத்து என்றார்.
ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம் 
உயிரினும் ஓம்பப்படும் -என்றார்.
இது வெறும் ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாது என்று  யாரும் கடைபிடிக்கவில்லை.
கோயிலில் ஆன்மீகம்  கலந்த பாலியல் கல்வி 
அளித்தனர்.
ஆனால் கடவுள் இல்லை என்ற பகுத்தறிவு வாதம்.
அறிவியல் முன்னேற்றம்.  சமுதாயத்தை 
சீரழிக்கிறது.
விந்து சிந்தினால் நொந்துசாவான்  -என்ற 
சித்தர் வாக்கியம் சிரிப்புக்காளாகி ,
ஆங்கில டாக்டர் சொன்ன 
தேநீர் அருந்துவதுபோல் உடலின்பமும் 
ஹஸ்த மைத்துனமும் சாதரண மாகியது.
பேராசிரியர் முதல் தமிழருவி வரை 
காதலிக்கும் வயது அப்படி இப்படித்தான் 
காளை  வயதில்.
அழகுதேவதைகள் நடமாடும்கல்லூரிகளை 
நாடும் வயது  அது என்றனர்.
அறிவுரை கூறுபவர்கள்  இக்காலத்தில் 
மனக்கட்டுப்பாடு என்று  கூறாமல் ,
மனம்போன போக்கில் பெண்கள் பின்னால் சுற்றுவது தான் ஆண்மை  என்ற 
இளைஞர்களை திசை திருப்பும் 
திரைப்படங்கள்,பாடல்கள்.
அதே எண்ணங்கள் இன்று  பெண்கள் மனதிலும்.
தண்டச்சோறுன்னு அப்பன் சொன்னா 
டேக் இட் ஈசி  பாலிசி.
ஆங்கிலத்தால் வந்த வினை.
வேண்டாதவர்கள் பேசினால் எதிர்ப்பு.
கல்யாணம் ஓடிப்போய் கட்டிக்கலாமா?
பிள்ளை குட்டி பெத்துகிட்டு கட்டிக்கலாமா?
இது ரசனை.
காதல் கலாட்டா ,
ஒருபெண் நாய் முன் பல ஆண்நாய்கள் சுற்றுவதுபோல் 
 சுற்றினால் காதல் என்று 
இளைஞர்களை கெடுப்பது யார்?
ருஷ்ய ஸிங்கர்  என்ற ஒருவரை அவர் தகப்பனார் 
பெண் வாசனை இன்றி வளர்த்தார்.
அதிலிருந்து 
காதல் கட்டுப்பாடு மனிதன் தன்  மனக்கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளக் கூடியது.
அதை தூண்டிவிடும் நூல்கள்,படங்கள் 
இளைஞர்களை  பலகீனப்படுத்துகிறது.
பலன் 
காதலை மறுத்தால் ஆசிட் வீச்சு,கொலை,
காதலித்து ஏமாற்றி குழுவாக கற்பழிப்பு என 
இரக்க  மற்ற உணர்வுகள்.
காளையர்கள் மனக்கட்டுப்பாடு இல்லை என்ற நிலை 
அதன் பலன் கள்ளக் காதல்.
கணவன் கொலை.
மனைவி கொலை.
கள்ளக்காதல்பார்த்த குழந்தை கொலை.
நல்லதை பரப்புவர்கள் குறைந்துவிட்ட காலம்.
ஆன்மிகம் பாலியல் குற்றத்தை தவிர்க்கும்.
சமுதாயம் 
நம் சித்தர்கள் காட்டும் வழியில் செல்லவேண்டும்.
ஆனால் அது வயதானவர்களுக்கு என்று 
ஒதுக்கி வைத்துவிட்டு 
வயதுக்கு வந்தவர்களுக்கு மட்டும் என்ற 
திரைப்படத்திற்கு 
முக்கியத்துவம் அளிக்கிறது.
அனுபவத்தின் மூலம் எதிர்கால
 இளைஞர்கள்  வாழ்க்கை வளம் பட 
கூறுவது 
ஏளனம் செய்யப்படுவதால்  தான் 
விவாகரத்துக்கள் நீதிமன்றங்களில் 
அதிகமாகிறது.