வியாழன், டிசம்பர் 27, 2012

கலியுகத்தில் உன் நேரடி தண்டனை தேவை; இதுவே எனது இன்றைய பிரார்த்தனை.


செய்திகளும்  மக்களும்

தில்லி கலவரத்தில் காவலர் மரணம்.
உசிலம்பட்டி  காவல்துறை ஆய்வாளர் மரணம்.
கற்பழிப்புகள்;4வயது சிறுமி பலாத்காரம்.

தில்லி காவலர் மரணம் குறித்து
காவல்துறை அறிக்கை ,பொதுமக்கள் கூற்று,
எது உண்மை ?
மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தியால்தான்
உண்மை அறிய முடியும்.
மக்களுக்குப் பாதுகாப்புத்தரும்
அரசியல்வாதிகள்,பணம் படைத்தோர்,பணத்திற்கு மயங்கும்
அதிகாரிகள்,இரத்த பந்தத்தால்
இந்தவித குற்றங்களை ஆதரிப்போர்,கம்சன்,
இராமாயண ,மஹா பாரத காலத்தில் இருந்து
நடக்கும் அவலம்.
மாற்றான் மனைவியின்மீது ஆசை கடத்தல்,
இன்றா நேற்றா,
இராவணன்,இந்திரன் ,கம்சன் ,திரௌபதி துகில் உரித்தல்,
அதிகாரபலம்,சூதாட்டம்,வரலாறு காட்டும் உண்மைகள்.
அவரவர்கள் பாதுகாப்பு அவரவர்கள் சக்தியால்,
அறிவுத் திறனால்.
மக்களுக்கு எச்சரிக்கை தேவை.
தங்களைத்தாங்களே பாதுகாக்கும் ஆற்றல்,
ஊழல் அரசியல்வாதிகள்,அதிகாரிகள்,
ஊழலை ஆதரிக்கும் பொதுமக்கள்,
தன்னலம் இதுவே இன்றைய சூழல்.
ஒரு தெய்வீக சக்தி,மனித  சக்திக்கு அப்பாற்பட்ட
சக்தி ஒவ்வொரு தனிமனிதனுக்கும்
கிடைத்து,சட்டத்தை,புலனடக்கத்தை,
நீதி,சத்தியம்,தர்மம்,நேர்மை மதிக்கும் பண்பு ,
பெற  இறைவணக்கம்  ஒன்றே வழி .
திரைப்படம்,சுயநல எழுத்தாளர்கள் ,
வணிக நோக்க விளம்பரதாரர்கள்
அரசியல் தலைவர்கள் ,
காமத்துடன் கலந்த காதலுக்கு
முக்கியத்துவம் அளிப்பதால்வரும்
கொடூரங்கள்;
துர்க்கை! நீ நேர்மையாளர்களுக்கு ஆற்றல் கொடு;
ஆணவ அநியாயங்களை ஒழிக்க அவதாரமெடு;
இன்றைய என் பிரார்த்தனை இதுவே.
ஆலயங்களும் வணிக நோக்கம்;
அரசியலும் வணிக நோக்கம்;
கல்வியும் மனித வனிகநோக்கம்;
கலவியிலும்  மனிதநூகாம்;
காளி  தேவியே!
கலியுகத்தில் உன் நேரடி தண்டனை தேவை;
இதுவே எனது இன்றைய பிரார்த்தனை.