வெள்ளி, டிசம்பர் 09, 2011

theivasankalpam.

அரசியலும்  ஆன்மீகமும்  சேரும்போது  மக்களுக்கு நன்மைகள் நடந்தன.இன்றும் தெய்வநம்பிக்கை உள்ள அரசியல் தலைவர்கள் நல்லன செய்கின்றனர்.
அசோகர் அரசியல் மட்டும் நடத்திய போது மக்களால் வெறுக்கும் அளவிற்கு  கொலைகாரனாக இருந்தான்.
புத்த மதத்தைப்  பின்பற்றிய பின்
அவன் செய்த நன்மைகள் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றன
.மக்கள் விரும்பும் சக்கரவர்த்தியாக மாறியது மட்டுமல்ல
நம் நாட்டு புத்த மதம்  அயல்நாடுகளில் வேருன்றி
அஹிம்சை அன்பு தொண்டு  உண்மை என்ற மனித நேய நெறிகளைப்பரப்பிவருகின்றன

மன்னர்களை தெய்வமாக தெய்வத்தின் பிரதிநிதியாகப்போற்றினர்..

ஆலயங்கள் கலைகள் வளர்க்கும் மையங்களாக இருந்தன.
மக்களிடம் தியாகம் என்ற ஒரே எண்ணத்தையும் கிடைத்ததைக் கொண்டு மகிழ்வுடன் வாழவேண்டும் எதையும்
விதிப்பயன்   பாவிகளின் போக வாழ்க்கையும்
 புண்ணியவான்களின் சோக வாழ்க்கையும்
 பூர்வஜன்ம பாவபுண்ணியம் என்று மக்களை   நம்பவைத்து
 நேர்மை  தியாக  வாழ்க்கை  என்றும்
 தடி எடுத்தவன் தண்டல்காரன் என்றும்
பணம் படைத்தவன் தவறுகளை மன்னிப்பதும் நடக்கிறது.

ஒரு ஏழையின் நிலத்தில் பணக்காரன் பங்களா கட்டினால்
 ஏழை நீதிமன்றம் சென்றாலும் கட்டும் வரை என்னசெய்தாய் என்று
அவன் வழக்குமன்றம் சென்றாலும் தீர்ப்பு அவனுக்கு
சாதகமாக  பல  ஆண்டுகள்  ஆகும்.
.நமது அரசாங்க  சட்டதிட்டங்கள். அப்படி
.நில ஊழல் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு
  கையூட்டு பெறுதல் , படுகொலைகள்  .
அனைத்துமே பூர்வ ஜன்ம புண்ணியங்கள்.
அவர்களுக்கு ஆண்டவன் அளிக்கும் கருணை.

நேர்மை கையூட்டு தரமாட்டேன் என்று
 வாழ்ந்து நேர்மை தவறாமல்
வறுமையில் வாடுபவர்கள்
அவர்கள் செய்த பூஜா பலன்கள்.
அவர்கள் கஷ்டங்கள்
பூர்வ ஜன்ம பாவங்கள்.
ஆகையால் இவை தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இது தெய்வ சங்கல்பம்.

சத்தியவான்கள் அடுத்த பிறவியில்
 அரசியல் தலைவர்களாகவும்.

அரசாங்க அதிகாரிகளாகவும் அலுவலக எழுத்தர்களாகவும் பிறந்து
பூர்வ ஜன்ம புண்ணிய பலன்களை   அனுபவிப்பர் .
இந்த ஜன்ம ஊழல் வாதிகள் சத்யவான் களாக அடுத்த ஜன்மத்தில்  பிறந்து பூர்வ ஜன்ம சத்தியவாதிகளால் தண்டனை பெறுவார். கஷ்டங்களை அனுபவிப்பர்.

இது தான் தெய்வ சங்கல்பம்.பவ புண்யங்கள் தொடரும். தேவ சக்தி அசுரசக்திப்போராட்டம்   இருக்கும். ஆஸ்திக நாத்திக வாதம் நடக்கும்.
வாழ்க ஆ..ன்மீகம்.பூர்வ ஜன்ம பாவபுண்ணியங்கள்.

history of hindi literature think about hindhi. hindhiசிந்திப்பீர். patri sindippom.


ஹிந்தி பற்றி சிந்திப்போம்.

பாரத  நாட்டின்  பல மொழிகளின் இலக்கியங்களின் மையக்கருத்து


ஒன்றோடொன்று  தொடர்பு உடையதாகவே இருக்கும்.

தென் பாரத மொழிகள்

தமிழ் மொழியிலிருந்து தோன்றின.

வட பாரதத்தில் அபபிரம்சம்,பாலி,சம்ஸ்க்ருதம் ,ப்ராக்ருதம்

  போன்ற  பல மிகப்பழமையான மொழிகள்.

இந்த பல மொழிகளில் சமஸ்கிருதம் அடிப்படையாக  விளங்கியது.

இவைகள் தவிர பேச்சு மொழிகள் எண்ணிக்கையில் அடங்கா.


ஹிந்தி மொழி என்பது கடி  போலி   என்ற  பேச்சு மொழியிலிருந்து

வியக்கத்தக்க வளர்ச்சி  பெற்றது .


 முகலாயர்கள்  வணிகத்தொடர்பு கொண்டபின்னரும் அவர்கள் ஆட்சியிலும்.

சத்தீஷ் கடி,போஜ்புரி,அவதி,மார்வாடி,வ்ரஜபாஷை, மைதிலி,போன்ற


மொழிகளும் குறிப்பிடத்தக்கவை.

இம்முறையில் ஹிந்தி இலக்கிய வரலாறு என்பது 1900  கி.பி.யில் ஆங்கில

 ஆட்சியில் வளர ஆரம்பித்ததுதான்.

துளசிதாசரின் ராமாயணம் ஹிந்தி இலக்கிய வரலாற்றில் இடம் பெற்றாலும்

அது அவதி மொழியில் எழுதப்பட்டது.

சூர்தசரின் சூர் சாகர்  விரஜ பாஷையில் எழுதப்பட்டது.


மீரா பஜனும் கிருஷ்ண பக்திப்பாடலும் இதே மொழியில் தான்.

இம்மொழிகள் இன்றைய ஹிந்தி மொழியின் பாலம்.

1900 கி.பி. பாரதேந்து  ஹரிச்சந்திரன் தான் இன்றைய கடிபோலி அதாவது

இணைப்புமொழி  அல்லது தொடர்பு மொழி என்ற

 சர்ச்சைக்கு ஆளான ஹிந்தி மொழி.

தொடர்பு  மொழி என்பது  பலர்   அறிந்துகொண்டு  புரிந்து

கொண்டு வாணிகம்    தொடர்பு  கொள்ள எளிதாக  இருக்கவேண்டும்.

அதற்காகத்தான் உலகம் போற்றும் உத்தமர்  தேசபிதா  மகாத் மா

  ஹிந்தி மொழியைத்  தேர்ந்து எடுத்தார்.

காரணம் வடமொழி  தொடர்பு மொழியாக   இருந்த போது

ராமாயணம் ,மகாபாரதம் போன்ற காவியங்கள்  பாரத மொழிகளில் 

எழுதப்பட்டன. ராமேஸ்வரம் , காசி,  மதுரா  ,மதுரை,  காஞ்சி போன்ற

புண்ணிய ஸ்தலங்கள்  சமஸ்கிருதம்  தமிழ் இணைந்தன.

உண்மையான இன்றைய ஹிந்தி அல்லது ஹிந்துஸ்தானி

 எழுத்தாளர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான்..

அயோத்யா  சிங்  உபத்யாய,மகாவீர்  பிரசாத் திவிவேதி,மைதிலி சரண்

 குப்தா,ஜெயசங்கர் பிரசாத்,சுமித்திரானந்த் பந்த்,சூர்யா காந்த

 திரிபாடி    நிராலா, மகாதேவி வர்மா, போன்ற கவிஞர்கள்.

பிரேம்சந்த், போன்ற நாவலாசிரியர்கள்.

  இந்த ஹிந்தி இலக்கிய வரலாறு இளம் தலை முறையினர்கள்

சிந்தனைக்காக.

கவிப்பேரரசு கண்ணதாசன் தன் கவிதையில் ஹிந்தி பற்றி குறிப்பிடும் போது,

ஹிந்தி மயிலே ஆடு,

தாயகம் உன்னைத்தாங்கும் என்றார்.

திராவிடக்கட்சிகள் மத்திய அரசு அமைச்சராக பதவி ஏற்ற பின்

 அவர்கள் மொழிக்கொள்கை  சற்றே தளர்ந்திருக்கும்.

வட பாரதத்திலும்   ஆங்கிலமோகம் அதிகரித்து விட்டது.

வட  பாரத  தொழிலாளர்கள் தமிழகம் வரத்தொடங்கி விட்டனர்.


அண்ணாச்சி  கடையில்

 ஹிந்தி  பேசி தமிழர்கள்

காய்கறி சென்னையில் வாங்கு கின்றனர்.

சிந்திப்பீர். செயல்படுவீர்.




modern society.

இன்றைய சமுதாயத்தில் உறவுகள் முறிவது ஏன்?
என்ற வினா எனக்குள் எழுந்து கொண்டே இருக்கும்.
படிப்பறிவில்லா சமுதாயத்தில் இருக்கும் கூட்டுக்குடும்பம்
படித்த குடும்பங்களில் காணப்படவில்லை.
  1. குடும்ப உறவினர்களிடம் பொறுமை இல்லை  .சஹிப்புத்தன்மை இல்லை.அன்றைய காலகட்டத்தில் ஒருவர் வருமானத்தில் பலர் அமர்ந்து உண்டு ஆனந்தமாக இருந்தனர்.
  2. இன்று கணவன்  மனைவி  இருவரும்  வேலைக்கு செல்கின்றனர்.வருமானம் வருகிறது என்ற மகிழ்ச்சி.
  3. வேலை கிடைத்ததுமே கடன் அட்டை வழங்க வங்கிகள் போட்டி
  4. .கடன் அட்டை கிடைத்ததும் பொருட்கள் வாங்கி குவித்தல்.
  5. வீட்டுக்கடன் வீடு வாங்கிய மகிழ்ச்சி.
  6. தன்   குழந்தையை நல்லபள்ளியில் சேர்க்க  குழந்தை பராமரிப்பு இல்லத்தில்  சேர்க்க  என பிரி கே  ,ஜி கிக்கு வருடம் மூன்று லகரங்கள் .
  7. இருவருமே பணியாற்றி களைப்புடன் வீடு திரும்பியதும் குழந்தைகளை அல்லது குழந்தையை பல்வேறு  தனி வகுப்புகளுக்கு கல்விசேரா கல்விச்செயல்முறை  என அலைதல்.
  8. இன்றைய இளைஞர்கள் முகத்தில் மகிழ்ச்சி என்பது ஆழ்மனத்தில் உள்ள  கவலையுடன் காணப்படுகிறது.
  9. இன்றைய  சமுதாயப் பிரச்சனையாக இருப்பது
  10.  மணமுறிவு.மற்றொன்று கணவனை குழந்தை பெற்ற தாய் அக்குழந்தையை அனாதையாக விட்டுவிட்டு புதிய கணவனுடன் சென்றுவிடுவது.
  11. கள்ளக்காதலனுடன்  சேர்ந்து கணவனையும் குழந்தைகளையும் கொலைசெய்வது.
  12. குடும்ப அமைதியில்லா குடும்ப வாழ்க்கை. 
  13.  இன்றைய அறிவு வளர்ச்சிக்கேற்ற அறிவு பெற்றோர்களிடம் இல்லாமை;
  14. இன்றைய கணினி அறிவு  தாத்தா பாட்டிக்கு  தெரியாததால் அவர்களை அறிவுள்ள பேரப்பிள்ளைகள் ஒதுக்குவது.
  15. அக்காலத்திய கதைகள் அவர்கள் அறிந்திருப்பது.
  16. அறிவு வளர்ச்சி தனிமையை நாடுகிறது.இன்றைய குழந்தைகள்  தாத்தா பாட்டி  வசாயிடுச்சு .அவர்கள்  டெத்  ஆயிடுவாங்க. நமக்கும் வயச்சகிவிடும் என்று
  17.  மரணைத்தை விளையாட்டாக விளையாடும் மழலைகள்.
  18. அறிவு வளர்ச்சி மகிழ்ச்சியுடன்  இருக்கும் .
  19. பொருளாதாரம்   உயர்ந்தாலும் அறிவு வளர்ந்தாலும்  ஒரு வகையான மனச்சுமைஉடனே இன்றைய இளம் சமுதாயம் காணப்படுகிறது.
  20. விவாக ரத்து வழக்குகள் .
  21. வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் நாட்டுபற்றை அதிகப்படுத்துகிறது.
  22. அங்கு வாழும் இளைஞர்கள் ஒரு மிகப்பெரிய தியாக வாழ்க்கை வாழ்கின்றனர்.
  23. பழைய நண்பர்கள் உற்றார் உறவினர்கள் நாட்டுப் பழக்க வழக்கங்கள் என அனைவற்றையும் துறந்த உன்னதமான தியாக வாழ்க்கை.
  24. ஆனால் நாட்டில் உள்ளவர்கள் அவனுக்கென வெளிநாட்டு சம்பாத்தியம் என அவர்களிடம் அதிகம் பிடுங்க நினைப்பது மனிதாபிமான  மற்ற செயலாகிறது.