ஞாயிறு, மே 12, 2013

அன்புக்கு தியாகத்திற்கு இணை ஏதும் இல்லை.

 அன்னை  அன்புக்கு,

ஆதரவிற்கு,

இக்கட்டான சூழலில் ,


ஈடில்லா  அன்பு காட்ட;


என்றும் எச்சூழலிலும்


ஏற்றம் அடைய .

எத்துனை துயரம் இருப்பினும்

அத்துனையும் மறந்து

தன் பசி தேவைகள் மறந்து

தன்  சேய்  தேவை அறிந்து

சேவை செய்யும் ஒரே ஆத்மா அன்னை.

ஐக்யமாகி அன்புகாட்டும்


ஒப்பில்லா தெய்வ உருவில்

அன்னை  ஒரு ஆலயம்.

அன்புக்கு தியாகத்திற்கு

இணை ஏதும் இல்லை.



ஆண்டவன் ஒரு குற்றவாளி.

சென்னை  நகரில்  தண்ணீர் மாநகராட்சி  லாரிகளில் விநியோகம்,

தண்ணீருக்காக பதிவு செய்து ஒரு வாரமாகியும் தண்ணீர் இல்லை;

நாவறட்சி  விநியோகம் செய்வோருக்கு மனசாட்சி இல்லை.

மனிதாபிமானம்  வற்றிவிட்டது;

தொலை பேசியில் ஒருவர் மூன்று நாள் என்கிறார் ,
மூன்று நாளைக்குப்பின்  கேட்டால் ஒருவர் நாளை என்கிறார்
ஒரு பெண் குரல் வராது என்கிறது.

இப்படியே ஒருவாரமாகியும் தண்ணீர் வரவில்லை;

இரக்கமற்ற இதயங்களைப் படைத்த இறைவன் ஒரு குற்றவாளி;

எங்களைப்போல் நேர்மை பேசி கஷ்டப்படும் எங்களைப் படைத்த

ஆண்டவன் ஒரு  குற்றவாளி.

எங்கள் குறைகளை ஆண்டவனும் கேட்கவில்லை;

ஆள்வோரும் கேட்கவில்லை;

தண்ணீருக்காக  கண்ணீர் சிந்தும் எங்கள் அடுக்குமாடி குடி இருப்போர்
படும்  வேதனை  ஆண்டவன் இருந்தால் கேட்கட்டும்.
இல்லை எனில் நாங்கள் தண்ணீர்வரி கட்டியும்
எங்கள் அடுக்கத் தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பாரில்லை.
நன்றி மாநகர பொறியாளர் மற்றும் உறுப்பினருக்கு.

உண்மை என்றால் ஊழல் பெருகட்டும்;

அரசின் திட்டங்கள் அரிய -பெரிய
அருமையான  திட்டங்கள் -ஆனால்

அது சாமானிய மக்களை

 சென்றடைவதில் தான்

சிக்கல்கள்.

பட்டா  மாற்றம் ,

மனசாட்சி உள்ள அமைச்சர்கள்.அதிகாரிகள்
ஆண்டவன் மீது சீ-- சீ-- மன சாட்சி மீது கைவைத்துக்

கூறட்டும் கை ஊட்டு இல்லை என்று.

மாநகராட்சி தண்ணீர் இணைப்பு,

சொத்து வாங்கி பெயர் மாற்றம் ,

எல்லாமே கை ஊட்டு.

ஊழலுக்கு பொதுஜனம்  உடைந்தை  ஆகும் காலம் இது.


வாக்களிக்கும் பொது மக்கள்

 வாங்கும் கள்ளப் பணம்,

கறுப்புப் பணம் ,அமைச்சர் கள்

ஆடம்பர  வாழ்க்கை

போதுஜனத்திற்கோ

இருண்ட வாழ்க்கை.

பரிந்துரை இல்லாமல்
பகவான்  தரிசனம்  கூட
எளிதல்ல  நம் நாட்டில்

ஏழைகள் ,கையூட்டு தர முடியாதவர்கள்

நேர்மையாக இருப்போர்கள் ,

நான் கடவுள் முடிவு போல் வாழத் தகுதி அற்றவர்கள்;

கோயில் உண்டியலுக்கு கோடிக்கணக்கில்

தங்கக் கிரீடம் குடம் தரும்

அரசியல் வாதிகள்

மக்கள் வரிப்பணத்தில் இலவசம் அளிக்கும்

தந்திரம், அது ஒருவகையான  கை ஊட்டு

வாக்களிப்பவர்களுக்கு.

ஏழைகள்  இலவசங்களைப்பெற்று

குறைந்த விலைக்கு விற்கும் அவலம்;

கைத்தறி ஆடைகள்  கடனுக்கு அளிக்கும் திட்டம்,

எட்டு மாதத் தவணைகள்;

அந்த துணிகளை வாங்கி உடனடிக் கடன் தேவைக்கு

௨௦% தள்ளுபடியில் விற்கும்  அவலம்;

அதை வாங்கி லாபம் தேடும் ஒருகூட்டம்.

என்று தான் மக்கள் விழிப்புணர்வு பெறுவார்களோ?

அரசும் அமைச்சும் திருந்துமோ?

உண்மை ஜனநாயகம் மலருமோ?

ஆண்டவனுக்கே  வெளிச்சம்;

ஆண்டவன் இருந்தால் உடனடி திருத்தம் .

இல்லை !இல்லை! என்ற பெரியாரின் சொல்

உண்மை என்றால் ஊழல் பெருகட்டும்;

ஊழல் அரசியல் ஆளட்டும்.

ஆண்டவன் பெயரைச்சொல்லி ஆண்டவர்கள்

ஆளுபவர்கள் ஏமாற்றும் காலம் இது.