திங்கள், நவம்பர் 28, 2011

sanaathana dharmam

சனாதன தர்மம்

அனைத்து  வெல்ல முடியா இயற்கை  சக்திகளுக்கும்  இறைவடிவம் கொடுத்த சனாதன தர்மம்  இயற்கையாகவே மனிதனுக்கு  உடல் நலம் பேணும் மன அமைதி தரும் மன இயலையும் கற்பித்தது.ஆனால் நமது இயல்பான  அமைதி,பொறுமை,எல்லாம் இறைவன் செயல் என்ற எண்ணங்கள்  நமது நாட்டின் இயற்கை வளம் அனைத்தும் அயல் நாட்டினரை கவர்ந்து காந்தம் போல் இழுத்தது.உலகிலேயே பல அமைதி ஒப்பந்தங்கள்,வணிகத்தொடர்புகள் ,ஆன்மீக சிந்தனைகள்,சகிப்புத்தன்மைகள் கொண்ட பாரதம் வேதகாலத்திலும் சரி,முகலாய ஆட்சியிலும் சரி,ஆங்கிலேய ஆட்சியிலும் சரி,இராமாயண மகா பாரதத்திலும் சரி  நாட்டின்  நலமே பெரிது என்று ஓரணியில் நம்மக்கள் இருந்தது இல்லை.இதுவே நம் நாட்டின் முன்னேற்றத்தில் தடைக்கற்களாக இருந்துள்ளது.

நமது நாட்டில் போர்கள் ராமாயணத்தில் சீதையின் காரணமாகவும்,மகா பாரதத்தில் பீஷ்மர் போரிட்டதும்,மூன்று அரசகுமாரிகளை கவர்ந்ததும் சுயநல  பங்காளிகள் போராட்டம் தான். அந்நூல்களில் உயர்ந்த கருத்துக்கள் இருக்கலாம். மாத்ரு பக்தி,பித்ரு பக்தி ,பிராத்ரு பக்தி,உயர்ந்த கீழ் ஜாதி சமத்துவம்,அரசனின் குணங்கள்,கடமை உணர்வு,அனைத்தும் அறிவுறுத்தப்பட்டாலும்  போர்கள் பாரதநாட்டின் நலம் கருதி நடக்கவில்லை.
உயர்ந்த எண்ணங்கள்,சித்தாந்தங்கள்,தெய்வீக அம்சங்கள் ஆனவத்திற்காகவும்,குறிகிய கோட்பாட்டிற்காகவும் என்ற முறையில் அமைக்கப்பட்டு எதிர் சிந்தனைகள் தூண்டுவதாகவே அமைந்தன.

ஒரே கடவுள்,அதை வழிநடத்த பல குருமார்கள்,பல மடாலயங்கள்,சிவ வழிபாடு,சக்தி வழிபாடு,சங்கரர் மார்க்கம்,ராமானுஜ மார்க்கம்,மத்வ மார்க்கம்,
க்ருஷ்ண மார்க்கம்,ராம மார்க்கம்,அவைகளின் மூலம் மனிதர்களிடம் வெறுப்புணர்ச்சி ,ஜாதி உணர்வுகள்.இவைகளுக்கும் மீறி நாட்டுப்பற்று.பாரதத்தின் பிரமிக்கத்தக்க  வளர்ச்சி கருத்து ஒற்றுமை.

இதற்கெல்லாம் மூலமாக நமது சனாதன தர்மம் ஆழமான  அருவ உருவ தெய்வாம்சங்களை  ஏற்றதுதான்.நமது மக்கள் அனைத்து மதங்களையும் சகோதர மாதங்களாக ஏற்றனர்.


.

sheer

sanaathana dharmam

சனாதன தர்மம்

மனிதன்  ஆரம்ப காலத்தில் இருந்தே இயற்கையை வெல்ல முடியாமல்  இயற்கையை  அதீத சக்தி உள்ள ஆண்டவனாக வழிபட ஆரம்பித்தான்.நவ கோள்களையும் ஆண்டவனாக உருவகப்படுத்தினான்.பூதேவி  என்று பூமியை மட்டும்  எதையும் தாங்கும் பெண்ணாக உருவகப்படுத்தினான்.மனிதனைக் கருவில் சுமந்து பெறுபவள் பெண்.பூமி தாவரங்களின் விதைகளைச் சுமந்து தனைப் பிளந்து  வளர்க்கிறாள். பொன்,வைரம்,வைடூரியம்,நிலக்கரி போன்ற அனைத்தையும்  தோற்றுவிக்கிறாள்.இறந்தபின் மனிதனின் சடலத்தையும் தனதாக்கு கிறாள்.மனிதன் வாழ நீர் நிலத்தின் மூலமாக.பெட்ரோல் நிலத்தின் மூலமாக. வாழும் மனிதனின் அஸ்திவாரமாக நிலமங்கை.

நிலத்தில் நீர். அங்கே அக்னி. அக்னிதேவனை பெரும் சக்தியாக மாற்ற வாயு.
அந்த அக்னி அனைய நீர்.அந்த நீரைப் பொழியும் ஆகாயம். இந்த சக்தி எப்படி எங்கிருந்து உண்டாகிறது என்ற ஆய்வுகள்.சுட்டெரிக்கும் சூர்யன்.குளுமை ஏற்படுத்தும் சந்திரன்.இந்த இயற்கையின் எதிர்மறை சக்திகள்.

இவைகளை கட்டுப்படுத்த அறிவியலா?ஆன்மீகமா? இதுதான் அறிவியல் வளர்ச்சி பெற்ற நாட்டிற்கும் ஆன்மீக சடங்குகள் நடத்தும் நாட்டிற்கும் நடக்கும் போராட்டம்.

சனாதன தர்மத்தை நன்கு ஆராய்ந்து பார்த்தால் அதிலுள்ள அறிவியல் உண்மைகள் வெளிப்படும்.புரியும்.
வனதேவதை என்று வனத்தை தெய்வமாக போற்றுவது சனாதன தர்மம்.
மரங்களை ஆலயங்களின் ஸ்தல வ்ருக்ஷமாக்கி மரங்களின் செடிகளின் மருத்துவ உண்மைகளை எடுத்துக் கூறுவது சனாதன தர்மம்.
மலைகளின் மீத்து ஆலயங்கள் அமைத்து ஆன்மிகம் என்ற பெயரில் பக்தர்களை  அறிவியல் ரீதியில் வரதம்,தவம் மௌனம் ,பிராணாயாமம் ,தோப்புக்கரணம்,கிரிவலம் அங்கப்ப்ரதக்ஷனம் என்று  உடல் ஆரோக்யத்திற்கு ஆன்மீக ரீதியில் அறிவியல் பூர்ண மாக வழிகாட்டுவது சனாதன தர்மம்.

பாரத நாடு அனைத்து வளமும் கொண்டது. அதனால் அமைதியான ஆன்மீக நாடு. வள்ளுவர் கூறியது போல் -நாடென்பது நாட வளத்தன என்ற இலக்கணம் கொண்டது சனாதன தர்ம பாரதம்.
அன்னியர் இங்குவந்து நாலனவைகளை அறிந்து புரிந்து ஏற்று ஏற்றம் அடைகின்றனர்,.வேள்வி அதில் வரும் புகையின் மதிப்பை ஆய்ந்து வெளிநாட்டினர் கூறிப் புகழ்கின்றனர். தொப்பிக்கரணம் ஒரு உடற்பயிற்சிக்கலையாக கர்பிக்கக்கத்தொடங்கியுள்ளனர்.திருநள்ளார் நவகோள்களின் ஈர்ப்பு  பற்றி வியந்துள்ளனர்.
பாரதம் மேற்கத்திய மோகத்தில் இருந்து விடுபட்டு நம் நாட்டின் சிறப்பை அறியச்செய்வதில் முயல்வதும் பிரார்த்தித்து சக்தி பெறுவதும் தான் இன்று அனைவருக்கும் தரும் செய்தியாக உணர்வு பெற்றேன்.

spoken/written tamil

  1 .yesterday you saw me.=netru nee ennai  ppaarththaay.(W) netru nee ennai paththe.
                                      
                                     நேற்று நீ என்னை பார்த்தாய்.  நேற்று நீ என்னை பாத்தே.

   2.  I gave 10 ,000/-rs. to him.=naan avanukku paththaayiram roopaay koduththen.(W)  nan avanukku paththaayiram roopaa koduththe.(s ) நான் அவனுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்தேன்.
நான் அவனுக்கு  பத்தாயிரம் ரூபா கொடுத்தே.

3.SHE   SANG A SONG.=AVAL PAATTUP PAADINAAL.(W)AVA PAATTU PAADINAA.(s)
                                          அவள் பாட்டுப்பாடினாள்.   அவ பாட்டு பாடினா. 

spoken tamil/written tamil

imperative mood=kattalavinai =கட்டளை வினை.

நீ படி.=nee padi.you read. you (respect)=neengal padiyungal.நீங்கள் படியுங்கள்.(written )
spoken  )=நீங்க படிங்க.neenga pad

you speak=nee pesu=neengal pesungal. neenga pesunga.நீ பேசு. நீங்கள்  பேசுங்கள்./  நீங்க பேசுங்க.

you  do  this  work =நீ இந்த வேலையைச் செய்./நீங்கள் இந்த வேலையைச்  செய்யுங்கள் ./நீங்கள் இந்த வேலை செய்ங்க .nee indha velaiyaich chey./neengal indha velaiyaich cheyyungal. nenga intha velai chynga.

you teach me.=nee sollikkodu.neengal sollikkodungal./neenga sollikkodunga.

                       நீ சொல்லிக்கொடு. நீங்கள் சொல்லிக்கொடுங்கள்../நீங்க சொல்லிக்கொடுங்க.
you  learn ,=nee katrukkol.(WRITTEN) nee kaththukka.(SPOKEN}நீ கற்றுக்கொள்.நீ கத்துக்க.
                    நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள். நீங்க கத்துக்கங்க.

                     neengal katrukkollungal (W) neenga kaththukanga.