குஜராத் தேர்தல் மாநில அளவில் நடந்தாலும் பாரத நாட்டின் எதிர்கால அரசியலை நிர்ணயம் செய்யும் தேர்தல்.
இதில் நாட்டு மக்கள் சுயநலத்தை மறந்து ஓட்டுப் போட வேண்டும்
,.ஜாதி,மதம்,இனம் என்று மக்கள் மனதில் விஷ விதைகள் தூவும் அரசியல் தலைவர்கள் ,சுயநல அரசியல் வாதிகள்
ஒழிக்கப்படவேண்டும்.
கருப்புப்பணத்திற்கு முக்கியத்துவம் அளித்து வெளிநாட்டு முதலீட்டிற்கு கை ஊட்டுப்பெறும் சோனியா காங்கிரெஸ் முற்றிலும்
ஒதுக்கப்படவேண்டும். பல ஊழல் புகார்கள் மேல் எவ்வித உறுதியான நடவடிக்கை இன்றுவரை எடுக்கப்படவில்லை. அப்படிப்பட்ட அரசியல்
கட்சிகளும் ,ஊழலுக்குத் துணை போகும் மாநிலக்கட்சிகளும் மாறி மாறி கூட்டணிவைத்து நாட்டின் பொருளாதாரம் ஏழைகளுக்குப் பயன்படாமல்
பணமுள்ளவர்களே கல்வி பெறமுடியும் என்ற அரசியல் ஒழி க்கும் சக்தி மக்களிடம் தான் உள்ளது. இந்திய மக்களின் விழிப்புணர்வு எப்படிப்பட்டது
என்பதை நிர்ணயிக்கும் தேர்தல். பாரத நாட்டைக் காக்கும் ஒரு தெய்வீக சக்தி மக்கள் மனதில் நேர்மை உணர்வைத் தரவேண்டும்.