கும்பகர்ணனின் சொற்பிழை
அவனின் வரம் தூக்க மாக மாறியது.
நரிவலம்போனால் என்ன?
இடம்போனால் என்ன ?
கடிக்காமல் போனால் சரி.
இது பழமொழி.
கண்கள் பேசாது.
பார்க்கும்.
காது கேட்கும்.
பேசாது.
நாக்கு இரண்டுமே செய்யாது .
ஆனால் இஷ்டப்படி பேசும்.
பார்க்காததையும் பேசும்.
கேட்காததையும் பேசும்.
கபீர்தாசர் சொன்னார்:
நாக்கு ஏதாவது பேசும்.
வாயிக்குள் சென்றுவிடும்.
அதன்பலனாக
செருப்படி தலையில் விழும்.
தலை எழுத்தை மாற்றுவது
ஒரு சொல்.
சொல்லின் ஆழம் ,
சொற்பிழை
பல குற்றங்கள்
புரியும்.
ஆகையால் தான்
மகா பாரதப்போரில்
அஷ்வத்தாமா என்ற பெரும் குரல்
யானை என்பதை மறைத்து
குரு துரோணரின் மரணத்திற்கு
காரணமாகியது.
இது ஒரு ராஜ தந்திரம்.
கும்பகர்ணனின் சொற்பிழை
அவனின் வரம் தூக்க மாக மாறியது.
கன்னி என்ற சொல் கனியாக விழுந்ததால்
பாஞ்சாலி ஐவருக்குப்
பத்தினி ஆனாள் என்ற ஒரு கதை.
சொற்பிழை பெரும் தவறாகிறது.
பகலில் பார்த்துப் பேசு;
இரவில் அதுவும் பேசாதே என்பதும் .
பழமொழி.
பொருள் குற்றம்
தூக்கம்
துக்கமாக மாறும்.
துக்கம் தூக்கமாக மாறும்.
சொற்பிழை நல்லது நடக்கவும் உதவும்.
என் என்பதை ஏன்
என்று மாற்றிப்பாருங்கள்.
அண்ணா சொன்னதுபோல்
நான் என்பதை நாம் என்று
சொன்னால் ஓட்டும்.
இந்நிலையில்
பலகட்சிகள் உரு ஆவதை
"என்"கட்சி என்ற நிலைமாறி,
"நம் நாடு " என்ற
எண்ணம் வந்தால்.
நாடு முன்னேறும்.
"நான்" தான் நாட்டைத் திருத்த
முடியுமென்று
காளான் போல் தலைவர்கள் தோன்றுவது,
நாட்டின் நலனுக்கா?
அமைதிக்கா?
நாட்டின் நலம் என்றால்
ஒரே திட்டம்.
ஒரேகொள்கை.
அதனால் தான்
அனைவரும்
காந்திபெயரை,
காமராஜர் பெயரை
அண்ணா பெயரை
சொல்லி கட்சி நடத்துகின்றனர்.
வள்ளுவர் சொல்வதை மீண்டும் மீண்டும் சொல்கிறோம்:
நாடென்பது நாடா வளத்தன; நாடல்ல
நாட வளம்தரும் நாடு.
தீயினர் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே,நாவினால்
சுட்ட வடு.
செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் ,அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.
இனிய உளவாக இன்னாது கூறல் .கனி இருக்க
காய் கவர்ந்தற்றன்று.