வியாழன், நவம்பர் 17, 2011

soolnilaikketra manitha gunam

சூழ்நிலை : மனித குணமும் மாற்றமும்.


மனிதன் ஆறறிவு பெற்றிருந்தாலும் அவனின் சூழ்நிலை நட்பு மிருகமாகவோ தெய்வமாகவோ மாற்றுகிறது. மனிதனைத் தனிமைப்படுத்தினால் அவனால் பேச முடியுமா? என்ற ஆய்வில் பேரரசர் அக்பர்   .தனியாக     தனி மனிதனை சிறையில் அடைத்து வைத்தார்.அவன் பேசமுடியாத நிலையில் தள்ளப்பட்டான்.ஆனால் ரொட்டி என்ற சொல்லை மட்டும்  அவன் பேசினான். காரணம் உணவு கொண்டு சென்றவன் அந்த ஒரே சொல்லைப் பயன் படுத்தி உள்ளான்.மனிதன் பேச்சா ஆற்றல்  பெற   பேசும் சூழல் அவசியம் என நிரூபணம் ஆகியது.
        மனிதன் தன் முயற்சியால் பூனையையும் கிளியையும் பேசவும் பாடவும் வைத்துள்ளான்.மண்டன மிஸ்ரர் ஆஷ்ரமத்துக்கிளிகள் வேதங்கள் வோதின .
திருடன் வளர்த்த கிளி வசை பாடியது.சத்சங்கம் இல்லை என்றால் மனித எண்ணங்கள் விகாரமடையும்.அவன் ஆறாம் அறிவு நல்ல சூழலில் நல்லவனாகவும் தீய சூழலில் தீயவனாகவும் மாற்றுகிறது.அவனது அறிவாற்றல் சில நேரங்களில் அவனுக்கு நிகர் அவனே என்ற ஆணவத்தை ஏற்படுத்து கிறது. பல வெற்றிக்கனியை குவிக்கும் அவனுக்குஅவன் மமதையை அடக்க அவனுக்கு மேலான சக்தி  அவனை அழித்துவிடுகிறது.அவனது அறிவு  பயனற்றதாக நிரூபிக்க அவனால் வெல்ல முடியாத இயற்கை ,அவனது ஆற்றலை செயலற்றதாக்குகிறது.
 தமிழகத்தில் நிலங்களை நான்காக பிரித்து அந்நிலை அமைப்பின் காரணமாக அந்நில மக்களின் பண்புகளையும் வகுத்துள்ளனர்.
   குறிஞ்சி நில மக்கள்   தேன் எடுத்து ,கிழங்கு தோண்டி வாழ்ந்தனர். முல்லை நில மக்கள் பசுக்கூட்டங்களை மேய்த்து வாழ்ந்தனர்.மருத நில மக்கள் நாகரிகம் பெற்று  விவசாயம்  செய்து வாழ்ந்தனர். நெய்தல் நில மக்கள் கடலில் படகு செலுத்தி மீன் பிடித்து உப்பு காய்ச்சி வாழ்ந்தனர்.நிலமற்ற பாலை நில மக்கள் ,கொலை ,கொள்ளை போன்ற செயல்களைச்  செய்து வாழ்ந்தனர்.அவர்  அவர்  சார்ந்த நிலங்களுக்கேற்ற  குணநலன்களோடு வாழ்ந்தனர்.



(tamil)education for human excellence

மனிதன் சிறப்பிற்கு கல்வி.

 "மனிதன்" என்ற சொல்  மற்ற விலங்குகளுக்கு ஒப்பானது."மனிதன்"என்ற சொல் ஆதிவாசி மனிதனையும் குறிக்கும்.கல்வி அறிவற்ற மனிதனையும் குறிக்கும்.கல்வியில் சிறந்தவர்களையும் ,மகான்களையும் ,ஆன்மிகவாதிகளையும்,அவதார புருஷர்களையும்,குறிக்கும்.மண்-மனிதன்,Human  =மனிதனுக்குரிய என்ற சிந்தனையால் தான் "மனிதனை மனிதனாக்கும் கல்வி, என்ற கருத்து உருவானது.அதைப்பற்றி சிந்தனைகள் ,கருத்தரங்கங்கள் ,ஆய்வுக்கட்டுரைகள் ,
எழத்தொடங்கி ஏற்றமடைந்த மனநிறைவின்றி அலைகள் ஓய்வில்லாமல்
ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றன.

மனிதனை மாமனிதனாக ஆக்கவும் ,மெருகூட்டவும்,மேதை ஆக்கவும்,மையலில் காக்கவும்,மொய்ம்புடையவனாக்கவும்,(வலிமை)

மோக்ஷமடையவும்,மௌனமாக இருக்கவும் கல்வி உதவுகிறது.


இத்தகைய கல்வியை எப்படி வழங்குவது?மனிதனை எவ்வாறு மனிதனாக்குவது?மனிதத் தன்மையை,எவ்வாறு முற்றிலுமாக உணரச்செய்வது/?அவனை வீட்டிற்கும் ,நாட்டிற்கும்,சமுதாயத்திற்கும்,மனித இனத்திற்கும் ,பூவுலகிற்கும்,நன்மை தரத் தக்கவனாக,பயனுள்ளவனாக,உருவாக்குவது?என்ற வினாக்கள் இந்த அறிவியல் காலத்திலும் ,கவிஞர்களாலும் ,சித்தர் களாலும்,அனுபவ பூர்வமாகக்
 அறிவுறுத்தப்பட்டு  முடிவின்றி சென்றுகொண்டே இருக்கின்றன.

காரணம் என்ன என்பதை அலசி ஆராய்ந்தால் பல புதிர்களுக்கு விடைகள் புலப்படும்.சமுதாய அமைப்பின் படி ,தட்ப வெப்ப நிலையின் படி ,நாட்டின் இயற்கை  வளங்களுக்கு ஏற்றவாறு முன்னேற்றம் ,பின்னேற்றம் ,அமைதியான எண்ணங்கள் ,அஹிம்சை,உண்மை,ஆன்மிகம் ஆகியன மிளிர்கின்றன.
  "கல்வி" என்பது மனிதனை மனிதனாக்குகிறது.அவன் காட்டிலேயே மற்ற விலங்குகளுடன் வாழ்ந்தால் அவனுக்கும் விலங்குக்கும் வேறுபாடு இருக்காது. அவனுக்கு  மொழி தெரியாது.அவன் தன் மன உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது.இறையாண்மை பற்றிய சிந்தனைகள் வராது.உணவுப்பண்டங்களை பக்குவப்படுத்தி வேகவைத்து உண்ணத் தெரியாது.அவனை நெறிப்படுத்த ,குணசீலனாக்க  நீதிநெறியுடன்  கூடிய உயர்
கல்வி அவசியமாகிறது.

sakala varam tharum Sairaam manthiramசாய் ராம் மந்திரம்



சகலவரம் தரும் சாய் ராம் மந்திரம்
"சாய்ராம்" சாய் ராம்" மந்திரம்,
சகல சந்தோசம் தரும் ,
சாய் ராம் சாய்ராம்

அறத்தை வளர்க்கும் மந்திரம்,
சீரடி சாய் மந்திரம்.
அறிவை வளர்க்கும் மந்திரம்,
அமைதி தரும் மந்திரம்.
ஆன்மிகம் வளர்க்கும் மந்திரம்,
ஆன்றோனாக்கும் மந்திரம்,
ஆற்றல் தரும் மந்திரம்,
இன்னல் தீர்க்கும் மந்திரம்,
இன்பம் தரும் மந்திரம்.

இன்மையில் நன்மை தரும் ,
சாய் ராம் சாய் ராம் மந்திரம்.
ஈஸ்வரன் அருள் தரும்,
மந்திரம்
 சாய் ராம் சாய்ராம் .
ஈகைக் குணம் தரும் ,
எங்கும் ஒலிக்கும் ,
மந்திரம்
 சாய் ராம் சாய்ராம்.
எல்லா நன்மைகளும் தரும் .
எளிய மந்திரம்,
ஏற்றம் தரும் ,
மந்திரம்
சாய்ராம் சாய்ராம் .
சாய்ராம் சாய்ராம் மந்திரம்,
சாஸ்வத சுகமளிக்கும்,
சங்கடங்களைத் தீர்க்கும்
மந்திரம் சாய்ராம் சாய்ராம்.
ஜகத் உத்தாரண,
ஜகாத் ரக்ஷக,
ஜகம் புகழும்
மந்திரம்
சாய் ராம் சாய்ராம்.
அகங்காரம் அழிக்கும்,
ஆரோக்கியம் அளிக்கும்,
ஆத்மா சுகம் அளிக்கும்,
மந்திரம்
சாய்ராம், சாய்ராம்.
சாய் ராம் சாய்ராம்  சாய்ராம்
அகிலம் காக்கும் மந்திரம்.
மனச்
சாந்தி தரும் மந்திரம்.
சாய் ராம் சாய் ராம் சாய்ராம்.
+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*