வெள்ளி, அக்டோபர் 11, 2013

அதனால் தான் இல்லறம் நல்லறம். இது எனக்கு இறைவனளித்த பெரும் வரம்.

தூக்கம் வரவில்லை
,துக்கத்திநாலா?
துன்பத்திநாலா?
வறுமையினாலா?
எதுவுமே இல்லை .?
இளமையா?பிரிவா?
எதுவுமே இல்லை.
அகவை கூடியதால்
அழைப்புமணி பயமா?
அதுவும் இல்லை.
எதுவுமே இல்லை
ஆனால் ,தூக்கந்தான்
வரவில்லை.
பழைய நினைவுகள்,\.
இருபத்தேழு ஆண்டுகள்
அன்னை-தந்தை கண்காணிப்பில்,
முப்பத்தாறு ஆண்டுகள் மனைவியின் அரவணைப்பில்
இன்றும் அவள் பாதுகாப்பில்.
அகவை எனக்கு இருபத்தைந்து.
அவளுக்கோ இருபது.
மாமன் மகள் தான் ,
அம்மாவிற்கு அண்ணன் மகள்தான்.
வந்தவளின் மனதில் வளர்த்த ஆசைகள்
 என்ன என்னவோ;!!??
எண்ணாமலேயே என்னவளை
என்னடிமை ஆக்கி வைத்தேன்.
இன்றுவரை எதுவும் அவள் கேட்டதில்லை.
கேட்காமல் எல்லாம் கிடைத்துவிட்டதென்பாள்.
அன்பிற்குப்பரிசாய் முத்துக்கள் ,வைரங்கள்,தங்கங்கள்
அனைத்தும் சேர்ந்த விலைமதிக்கமுடியா
வாரிசுகள் மூன்று.
தாயைப்போல பிள்ளைகள்,அதிர்ந்து பேசா அன்புகள்.
நான் என் குழந்தைகள் இப்படித்தான் ஆகவேண்டும் என்ற
திட்டங்கள் தீட்டவில்லை;
வளர்ந்தனர்.வளர்த்தாள் அவள்.
என் சக்திக்கு என்பதைவிட திட்டமில்லா உழைப்பு.
இறை நம்பிக்கை.
மும்முறை இறந்து உயிர்பெற்று வாழ்கிறேன்.
எம்முறையும் என்னிடம் அவள் கலங்கியதும் இல்லை;
மும்முறையும் அவள் பட்ட வேதனைகள்  எதுவும்
பேசியதும் இல்லை;எந்திர கதியில் இயக்கம்;
அதிலே பிறந்த ஊக்கம்;
வளம்பெற வாழ்கிறேன்.


அகவை கூடினாலும் அவளது அரவணைப்பும்
அன்பும் இன்றும் கூடிக் கொண்டிருப்பதால்;
இல்லறம் இல்லத்தரசியின் இனிய இசைவில்.
அதனால் தான் இல்லறம் நல்லறம்.
இது எனக்கு இறைவனளித்த பெரும் வரம்.




புதன், அக்டோபர் 09, 2013

தரம் தாழ்ந்து விட்டது.

ஆதார் அட்டை ,அலைந்தது தான் மிச்சம்.
வலைகளில் தேடினேன்.
அங்கு இங்கு என்று விசாரித்தேன்.
காந்தி ரோடு அரசுப் பள்ளியில் அளிப்பதாகக்
கூறினார்கள்.புனித அந்தோனியார் பள்ளியில்.(வேளச்சேரி)
இரத்த அழுத்தம் அதிகமானாலும்
வாழ்க்கையின் ஆதாரம் ஆடிப்போனாலும்
என்ன ஆனாலும் சரி இன்று ஆதார் அட்டைக்கு
அஸ்திவாரம் போடவேண்டும் என்றே சென்றேன்.
ஆனால்  இங்கு அளிப்பது நிறுத்தப்பட்டதாக
பள்ளித்  தலைமை ஆசிரியை கூறினார்.
பலர் விசாரித்து என்ன செய்வது என்றனர்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு "ஆதார் அட்டைத் தேவையில்லை
உறுதி செய்யப்பட்டது என்ற செய்தி.
ஆதாரம் தேடி அலையவேண்டியதில்லை .
வெளிநாட்டினருக்கு சுலபமாகக் கிடைக்கிறதாம்.
குடும்ப அட்டை,தேர்தல் ஆள் அறிவட்டை
இதெல்லாம் அவமதிக்க ஆதார் அட்டை;
அதற்கு பல கோடி செலவாம்
அதனால் போலி அட்டைகள் கண்டுபிடிப்பாம்'
ரேசன் கார்டு,எலக்சன் ஐ.டி. கார்டு
இதைவிட ஒரு கார்டு தேவையா/புரியவில்லை.
இது மாநில ,மத்திய தெர்தல்வாரிய
அவமதிப்பன்றோ!அது வழங்குவதில் ஒழுங்கில்லை.
ஒருமுறை சென்ட்ரல் வங்கி; ஒருமுறை சில விலாசம் '
ஏன் ?இந்த மாற்றங்கள்;அஞ்சல் அலுவலகம்
இன்று எங்கு என்ற நிச்சயமில்லை;

உள் நாட்டினருக்கு தாஸ்மார்க்.


தங்கம் வாங்கக்கூடாது
அதிலும் குறிப்பாக ஏழைகள் .
சிதம்பரம் பேச்சு.
தரம் தாழ்ந்து விட்டது.

திங்கள், அக்டோபர் 07, 2013

மொழிகளின் கலப்பும் விந்தையும்.

கடவுள் ,இறைவன்,பகவான்,குதா ,GOD இறைவனுக்கு பல  மொழிகளில் பல சொற்கள்.
அல்லா,ஏசு,சங்கரர்,ராமானுஜர்,ராகவேந்திரா,சத்யசாய்,சீரடி சாய் போன்ற தெய்வீக அருள் பெற்ற வழிகாட்டிகள்./மார்கதரிசிகள்./பைகம்பர்.
இதில் வழக்கு மொழியில் சொன்னால் அந்த வழிகாட்டிகள் என்ற சொல்  மார்கதர்சி/பைகம்பர் என்பதற்குள்ள  காம்பீர்யம் சற்றே குறைந்து இருப்பதாக
உணரப்படுகிறது.

இவ்வாறே நன்றி ஐயா/thank you, சார்,எனது வருத்தம் /மன்னிப்பு என்ற சொற்களைவிட ஸாரி/பர்டன் /excuse என்ற சொற்களில் விரைவாக பயன் படுத்துவதும் சற்றே மரியாதை தருவதும் ஆங்கிலச் சொற்கள்.

பெயர் வைக்கும்போது பெயரைக்கொண்டே ஒரு மரியாதை.தமிழ் பெயர்களைவிட வடமொழி பெயர்களுக்கு உண்டு.இது ஒரு தெய்வீகமான  ஒரு மன நிறைவு.இதில் பெயரில் என்ன?என்ற கேள்வியில் அது நிச்சயம் ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்துவது போல் ஒரு தோற்றமா?அல்லது  இறைவனின்  திருவிளையாடலா?அந்த சமஸ்கிருதப் பெயரை தவிர்க்காத நிலை.பல இயக்கங்கள் முயற்சித்தும் தமிழ் பெயர்களை வைப்பது அவ்வளவு முன்னேற்றமில்லை.

தூய தமிழ் பேசுபவர்கள் ஒரு அதிசயப்பிறவி.ஒரு நடத்துனர் தூய தமிழ் நடையில் பேசுவதை வியந்து செய்திகள்.சொற்பொழிவுகள்.

பிரார்த்தனை/வழிபாடு/பூஜை /அர்ச்சனை/போற்றி /என்பதை மாற்ற முடியாத நிலை.

இன்று திராவிடக்கழகம்  அகில இந்திய அரசியலில் ஈடுபடும் பொது ஹிந்தியை ஒதுக்கமுடியவில்லை.அதைப்பற்றி பேசும் பொது இந்தியை எதிர்க்கவில்லை ,அதன் ஆதிக்கத்தை எதிர்க்கிறோம் என்று கூறும் நிலை.

இந்த மொழியின் ஆதிக்கம்/கலப்பு / தனி மொழி இயக்கத்தை வீழ்த்திக்கொண்டுதான் இருக்கின்றன..அதில் வெற்றிகாணும் முயற்சியில்
தமிழகம் தான் முன்னோடியாக இருக்கிறது.ஆனால்  இது உலக அளவில் எப்படி தொடர்புக்குப் பயன் படும் என்பதும் விந்தைதான்.

பேச்சுவழக்கில் மணி எத்தனை?சாலை,மிதிவண்டி,பேருந்து,,திருகாணி,சலவையகம்,முடி திருத்தும் நிலையம்,தையலகம்,பு கைவண்டி, போன்றவை பெரும்பாலானவர்களால் பயன்படுத்தும் நிலை வரும் வரை  தனித்தமிழ் இயக்கம் எப்படி?
வேகம்/சந்தேகம்,விவேகம் புத்தி ,மூர்க்கன் ,நகரம்,கிராமம்,பாகப்  ,பரிவர்த்தனை  பத்திரம்,சூனியம்,போன்ற ஆயிரக்கணக்கான சொற்கள்
படித்தவர்களும் பாமரர்களும்  பயன்படுத்தாமல் /உபயோகிக்காமல் வழக்கு மாறுமா?
ஆலயம்   தேவாலயம்.கோவில்  கோயில் மசூதி.சர்ச் ,மந்திர்,விஹார் மடம் ,சத்திரம்.
இந்த மொழி விந்தைகள் ஆச்சரியம்/வியப்பு.