செவ்வாய், டிசம்பர் 27, 2011

manitha manam

மனித மனம்
மனித மனம் குழப்பமாக இருக்கிறது.காரணம் சமுதாயச் சூழல்.பள்ளிக்கு  செல்லும் போதுபடிக்க வேண்டும் ,கல்லூரிக்கு செல்லும் போது பெற்றோர் விரும்பும் படிப்பு படிக்கவேண்டும்.ஆலயங்களுக்குச்சென்றால் ,ஆன்மீகச் சொற்பொழிவுகள் கேட்டால்   குழப்பம். நானே கல்கி,நானே சிவன்,நானே அம்மன்,நானே சித்தர்,நானே ஆஞ்சநேய  உபாசகர்.ஷீரடி சாய்பாபா ,புட்டபர்த்தி சாய்பாபா,ராகவேந்திரர்,அனைவரும் ப்ரத்யக்ஷ மாக இறைவனின் ஸ்வரூபம்.
இவர்களின்  பக்தர்கள் ,தேவி உபாசகர் ,அம்மன் உபாசகர்,இவைகளெல்லாம் கடந்த ஆனந்த சாமியார்கள்.முதல் நாள் ஆசிபெற்று மறுநாள் அவரகளைபற்றிய அவதூறு செய்திகள்.அப்பாடா  தெளிவுபெற என்று ஒருமார்க்கம்  தோன்றும்.
அப்பாடா  என்று  அரசியலுக்கு வந்தால் அங்கு  அனைவரும் ஒரே தலைவர்  பெயரைச் சொல்லி பல தலைவர்கள் .தனிதனி கொடிகள்.
நம் நாட்டில்  பொது சொத்துக்களை எரித்தல்,சாலைகள் உடைத்தல், பள்ளி கல்லூரி  சொத்துக்களை சேதப்படுத்துதல்,மரங்களை வெட்டுதல்,அதிலும் ஆட்சிகள் மாறினால் வண்ணங்கள் மாறுதல்,அனைத்திலும் மாற்றங்கள்.

மனித மனம்  மனிதத் தன்மையாக  மாறுமா? காட்சிகள் மாறுமா?கட்சிகள் பெருகுமா?









கருத்துகள் இல்லை: