- 66வது சுதந்திர தினம்
- நாடு விடுதலை அடைந்து
- 66 ஆண்டுகள் கடந்து விட்டன.
- நாட்டில் வளர்ச்சிகள் ,
- பலமறுமலர்ச்சிகள் .
- உள்ளத்தில் கிளர்ச்சிகள் .
- தொழில் நுட்ப வளர்ச்சிகள் .
- தேசீய நெடுஞ்சாலைகள் ,
- போக்குவரத்துத் துறை ,
- அனைத்துத் துறையிலும்
- முன்னேற்றம் தான் .
- சோம்பேறிகள் தவிர,
- அனைவருக்கும் வேலைவாய்ப்பு .
- நகரங்களில்
- வேலைசெய்யஆளில்லை .
- சிற்றூர்களில் விவசாய நிலங்கள்
- கட்டடங்களாக முன்னேற்றம்.
- பொறியியல் கல்லூரிகள் ஈசல்
- புற்றுபோல்.
- கோடிக்கணக்கில் கல்வியில் .
- விடுதலை அடைந்த முன்னேற்றம்
- மகிழ்ச்சி அளித்தாலும்
- சுதந்திரத்திற்காக போராடிய,
- தியாகிகள் ஆத்மா அமைதி யாக
- மகிழ்ந்தாலும்
- முன்னேற்றத் தடைக்கற்கள்
- அவர்களை veவேதனை
- அடயச்செய்யும்.
- சுவிஸ் வங்கியில் கருப்புப்பணம்.
- ஆன்மீக வழிகாட்டிகள் ஆஸ்ரமங்களில் கருப்புப்பணம்.
- கல்வி என்ற பெயரால் பகற்கொள்ளை .
- மடாலயங்களில் ஆலயங்களில் மன்மத லீலைகள்.
- வருமானத்திற்காக மது ,மாது சாலைகள்.
- அரசாங்க அலுவலகம் என்றாலே கை ஊட்டு ஊழல்கள் .
- ஊழலை எதிர்த்துப் போராடுபவர்கள் செய்யும் ஊழல்கள்.
- சிசுக்கள்,கள்ளக்காதல்,விளைவு படுகொலைகள் ,விவாகரத்து வழக்குகள் அமைதியற்ற இல்லறம்
- தாய் மொழி வெறுப்பு ஆங்கில விருப்பு .
- தாய் மொழி படிப்பு விளைவு வறுமையால் துடிப்பு.
- பெருகிவரும் முதியோர் இல்லங்கள் .
- மேலை நாட்டு கலாச்சாரங்கள் .
- அரவணைப்பு ஆதரவற்ற குழந்தைகள் .
- குழந்தைகளை தவிக்கவிட்டு ,புது
- கணவனைத்தேடும் பெண்கள் .
- கள்ளக்காதலுக்காக கட்டியகணவனை கட்டிய மனைவியை பெற்ற குழந்தையை கருணையின்றி கொலை செய்யும் நவீன திருமண உறவுகள் .
விடுதலை தியாகிகள் ஆத்மா சாந்திஅடையுமா ?!!
இவை முன்னேற தடைக்கற்களே .
பண்பாட்டின் ,தாய்மொழியின்
வீழ்ச்சி
ஒற்றுமைக்கு மன அமைதிக்கு
வளர்ச்சிக்கு வேகத்தடைகளே .