திங்கள், நவம்பர் 03, 2014

பாரதியின் பாடல் நினைவுக்கு வருகிறது.

    இடுகைகள்   இடாமல் பல மாதங்கள் ஓடிவிட்டன.

       அரசியல்  எழுதினாலும் .ஆன்மிகம்  எழுதினாலும்


இங்கொன்றும் அங்கொன்றும் எதிர் கருத்தே வெளிவரும்.

ஆலயங்கள்   பெருகிவரும் இந்நாளில் ,

ஊழலும் பெருகி உண்மையும் மறைந்து

அனைத்திலும் சுயநலமே என்பது உறுதியாச்சு.

ஆலயங்கள்  வணிக  வளாகங் களுக்கு நடுவில்

புராதானக் கோயில்கள் பாழடைந்த நிலையில்,

அந்த   அரிய  அற்புதகட்டிடங்கள் சிற்பங்கள்

கவனிப்பார்  இன்றி. இருக்கும் நிலையில்

புதுப் புது ஆலயங்கள்.

அதன்  உள்நோக்கம் பக்தியா?முக்தியா?வாணிகமா?

ஆண்டவன் காட்சி அரசமர அடி நிழல் என்று மாறி

ஆஸ்திகள் குவியும் ஆஷ்ரமம் ஆலயங்கள்

என்ற நிலை பக்தியா ?

அங்கு அரசியல்வாதிகள் பங்குகள் அதிகம்.

பணக்காரர்களின் பங்கு அதிகம்.
ஏழைகளுக்கு  அன்னதானம்.
ஏற்றமுடையோருக்கு சந்நிதானம்.
சிந்தித்தால் சிரிப்பு வருது,
இந்த நிலைகெட்ட மானிடர்களை
நினைத்துவிட்டால் நெஞ்சு பொறுக்கவில்லை .
என்ற பாரதியின் பாடல் நினைவுக்கு வருகிறது.

இன்றைய அறிவு வளர்ச்சி.

 நவீனகால அறிவு




 வளர்ச்சி பல சிந்தனைகளை சமுதாயத்தில் 


உருவாக்குகிறது.இன்றைய தலைமுறை 



கண்ணகியை பாராட்டவில்லை.நானிருக்க 



மாதவியின் பின்



 சென்றவனுக்காக மதுரை எரித்த கண்ணகி நானா 




இருந்தால் மாதவி வீட்டுக்குச் சென்று








கோவலனைஎரித்திருப்பேன் .என்று பேசும் காலம். 



தேவகி கம்சன் இருவரையும் தனித்தனியாக பூட்டி








வைத்தால் குழந்தை பிறந்த்ததும் 





கொள்ளவேண்டாம். எட்டாவது குழந்தை 




பிறக்கவாய்ப்பில்லை






என்று   வில்லத்தனம் ஓடுகிறது.





மனைவியைப்   பணயம்    வைத்தது   




 பெண்ணடிமை  அல்லவா??




குஷ்புவும் சுருதியும் பேசியது தவறு என்றால் 



கர்ணனைபெற்ற குந்தி செய்த தவறு,




விசித்திரவீரியன்  ,பாண்டு புத்திரர்கள் 




. நாம் குழந்தைக்கு தசரதனுக்கு மூன்று 



மனைவிகள் என்று சொல்லும்போதே


 கருணா செய்தது சரி என்றல்லவா



 இளையதலை முறை நினைக்கிறது.


 இப்படி எதிர்ப்பவர்கள் கல்யாணம் தான் 



கட்டிக்கிட்டு ஓடலாமா?என்ற பாடல் ரசிக்கிறது.



 மம்மி டாடி  வீட்டில் இல்லை உய்யாலா   


 பாடலை ரசிக்கிறது.


மன்மதராசா பாடலை ரசிக்கிறது



.சிந்தியுங்கள். இன்றைய திரைப்படங்கள்



 நாயகன் பொறுக்கியாக இருந்தால் தான் 




நியாயத்தை நிலைநாட்ட முடியும் என்று 


சமுதாயத்திற்கு செய்தி தருகிறான்.


 கத்தியிலும் அப்படித்தானே. காவல் துறை 





பிடிக்கமுடியாததை அதிகாரவர்க்கம் பணம் 





செல்வாக்கு 




என்று குற்றம் புரிந்தோருக்கு ஆதரவாக 



மொட்டைகள்




 பிரார்த்தனைகள். எங்கே போகிறது சமுதாயம்.?


விவாகரத்து வழக்குகள் பெருகிவருகிறது. 


பலாத்காரம் ராமாயண மகாபாரதத்தில் 



இல்லையா?



அகலிகை மோட்சம். சிந்தியுங்கள்.