திங்கள், ஜூலை 10, 2017

மனம் தூங்குவதில்லை.

மனிதன்  வாழ  அழிந்தன அனைத்தும்.
இயற்கை மலைகள் தூள் தூளாயின.
வனங்கள் வெட்டவெளி மைதானங்கள் ஆயின.
விலங்குகள் அழிந்தன.
கரப்பான்பூச்சிகள் ,கொசுக்கள், ஈக்கள்
என   லக்ஷக் கணக்கில் கோடிக்  கணக்கில் அழிகின்றன.
ஆறுகள்   அகலம்   குறைந்தோ /அடியோடு அழிகின்றன.

ஆலயங்கள்  ஆலய தெப்பக்குளங்கள் ஆக்கிரமிப்புக் கு.
பெரிய பெரிய ஏரிகள்  காணவில்லை.
விவசாய நிலங்கள்   விளை  நிலங்கள்
வீட்டு  மனைகளாகவோ,கல்லூரி , பொறியியல் கல்லூரி களாகவோ , தொழிற்சாலை களாகவோ  மாறுகின்றன.
ஒரு இடத்தை  ஆக்கிரமிக்க ஒரு  எளிய வழி  அங்கே
ஒரு ஆலயம்   அமைத்தல். ஆஷ்ரமங்கள் அமைத்தல்.
ஆண்டவன்   பெயரால்  அங்கே வணிக வளாகங்கள்.

ஆலய கோபுரங்களை மறைத்து வணிக வளாகங்கள்.
நகரங்கள் விரிந்து கிராமங்கள் மறைத்து
 வளர்ச்சி  என்ற  பெயரில் பாலங்கள் , சாலை அகல  விஸ்தரிப்புகள்  பல நூறாண்டு மரங்கள்  பயனுள்ள மரங்கள்
அழிப்பு, கனிமவளம் பூமி தோண்டப்படுகின்றன.
அடுக்கங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன.
விலங்குகளின் செயற்கை கருத்தரிப்பு
அதன் ஆண் இனங்களை அரிதாக்குகின்றன.
விளைவு பூமித்தாய்  வேதனை , இயற்கை  சீற்றங்கள்.
புராதனக்  கோயில்களை பராமரிக்க ஆளில்லை.
அரசு ,அரசியல்   ஆண்டவனுக்கும் பயப்படவில்லை.
இயற்கையை செயற்கையால் ஆக்கும் அறிவு.
இது  செல்வத்தைக்  கொடுக்கும்.
முடிவு  அழிவுதான்.
அது  இயற்கையின்   சட்டம். 

செவ்வாய், ஜூலை 04, 2017

திரை அரங்கு

ரசிகர்களுக்கு நஷ்டமில்லை. அரசியளுக்காக  மூடி நாடகம். GST க்குப்பின்
ரசிகர்கள் வரவில்லை என்றால் தானே ஓடவேண்டும்.
தங்கம் விலை ஏறினால் தங்கக்கடை மூடுவதில்லை.
எல் கே ஜி  க்கு ஒருலக்ஷம் பள்ளி  மூடவில்லை.
பெட்ரோல் பங்கு விலை மூடவில்லை.
ஹிந்திப் ப்ரசாரசபைத் தேர்வுக்கட்டணம் உயர்வு  சபை தமிழ்நாட்டில் மூடவில்லை.
இந்த திரைப்பட அரங்கு மட்டும் அரசியலா? ரஜினி படம் ரூபாய் ௨௦௦/- நான் உண்ணாவிரதம் இருந்து எங்கள்வீட்டில் யாரையும் அனுப்பவில்லை. யு துபே  வந்த பின்தான்  பார்த்தேன். படுபாவிகள் கவாலர்களை கையில் போட்டு கருப்பில் டிக்கட் , கட் அவுட் பாலாபிஷேகம்  இதற்கு எதிர்ப்பு இல்லை. நூறு லிட்டர் திருடி அபிஷேகம்  வீரமணி சாமி சிலைக்கு கத்துவாரு. இதற்கு மௌனம் . ஏமாற்றும் திரையரங்கம் . பிஸ்கட் எல்லாமே விலை அதிகம் . நியாயமாக மக்கள் போகக்கூடாது. ஈசி யார் ப்ரார்த்தன மழை படம் பார்க்காமல் வந்துவிட்டோம். அவர்கள் திருப்பியா கொடுத்தார்கள்.
பிஸ்கட்  விலை இரண்டுமடங்கு பகல் கொள்ளை.