சனாதன தர்மம்
இவ்வுலகில் பாவ மன்னிப்பு உண்டு என்பதற்கு அனைத்து மதங்களிலும்
மனம் வருந்தி இறைவனிடம் சரணடைதல் என்ற தத்துவம்
மேற்கோளாக கூறப்பட்டுள்ளது.
சனாதன தர்மத்தில் எண்ணங்களுக்கேற்ற பலன் என்றே கூறப்பட்டுள்ளது.
நல்ல எண்ணங்கள் நன்மையைத் தரும்.
தீய எண்ணங்கள் தீமையைத்தரும்.
கர்ம பலன் என்று மனிதனுக்கு செயலுக்கேற்ற பலன் என்று கூறுகிறது.
எப்பொழுதும் தீய சக்திகள் அதிக வலிமை உடையவை.
அதை எதிர்த்துப்போராடும் வலிமை தெய்வீக சக்தி கொண்டவர்களால் தான் முடியும்.சனாதன தர்ம கதைகளில் வரம் கொடுத்த ஆண்டவனே பயந்து
ஓடிய கதைதான் ஐயப்பன் கதை.
பாத்திரம் அறிந்து பிச்சை போடு ,கோத்திரம் அறிந்து பெண்ணைக்கொடு என்பது பழமொழி.
அதே சமையத்தில் ஆண்டவனே காதல் திருமணம் செய்ய
மாமனாருடன் போரிட்ட கதைகளும் உண்டு.
ராமாவதாரம் ஒன்றே ஏக பத்னி வ்ரதத்தை வலியுறுத்துகிறது.
மகாபாரதத்தில் கிருஷ்ணனுக்கு இரு மனைவிகள்.
குந்தி தேவிக்கு திருமணத்திற்கு முன் குழந்தை.
பாண்டுவிற்கு பஞ்ச புத்திரர்கள்.அனைவரும் மந்திரத்தால் .
ராமாயணத்தில் மூன்று மனைவிகள்.ஆனால் அமிருத கலசத்தை
அருந்தியதால் பிறந்த குழந்தைகள்.
திரௌபதிக்கு ஐந்து கணவர்கள்.
இவ்வுலகில் இந்த கலி யுகத்தில் அனைத்துமே நடக்கின்றன.
ஜாதிமத பேதம் ஒழிய விதுரன்.
ராமாயணத்தில் குஹன்,சபரி.
மிருகங்கள் பழக்கினால் மனிதர்களுக்கு உதவும்
குரங்கு,கரடி,அணில்,அனைத்தும் உதவுகின்றன.
புலி,சிங்கம்,மயில்,மூஞ்சூறு,காளை ,குதிரை ,கிளி,கருடன் வாகனங்கள்.அனைத்துமே இறைவனின்.
நாகதேவதை என்றும் சிவனுக்கு நாகாபரணம் என்றால் விஷ்ணுவிற்கு
சயனம் .காமதேனு ,கல்பக விருக்ஷம்.
வாழ்க்கைக்கு என்றும் தேவையான
மாற்ற மில்லா அறிவியல் தத்துவமே சனாதன தர்மம்.
ஆனால் அதில் சில ஆசுரி சக்திகள் லௌகீகத்தை புகுத்தி
அதை அசிங்கப்படுத்துகின்றன.
மதத்தின் சக்திக்கு ஆண்டவன் அழகுச்சிலை ஊர்வலம் .
சிலை அவமதிப்பு என்பதை மாற்றி இந்து அமைப்புகள் எளிய
இந்துமத நூல்கள்,குறுந்தகடுகள்,பிரசாரம் என்று
அழியும் சிலைகளுக்கான சிலவுகளை விநாயக சதுர்த்தி கொண்டாடும் நேரத்தில்
ஆக்கரீதியில் பயன் படுத்தலாம்.
இந்து மதச் சிறப்பைக் கூறும் மேலை நாட்டு அறிஞர்கள் கூற்றைத் தொகுத்து
எளிய மக்கள் புரியும் வண்ணம் கோடிக்கணக்கான துண்டு
பிரசுரங்கள் வெளியிடலாம்.
"உருவச்சிதைவு என்பது உருவ வழிபாடு "
உயர்ந்ததாகக் கருதும் இந்துக்களுக்கு
ஏற்றதா என்பது இந்து முன்னணி சிந்தனைக்கு .