சனி, அக்டோபர் 29, 2016

ஏக்கம்

Kalyaணம்  செய்யாதோருக்கு ஏக்கம் ஒன்றே.
செய்தவர்களின்
பெருமூச்சு  பட்டால் தான் .
எது செய்தாலும்
ஏக்கப் பெருமூச்சு இருக்கத்தான் செய்யும்.
ஏப்பத்திலும்
பசி ஏப்பமாம் புளி ஏப்பமாம் .
மூச்சினிலும் ஏக்கப் பெருமூச்சு.
பணக்கார ஏக்கம்
ஏழை ஏக்கம்
பாருங்கள்
இரண்டு பட்ட வையகம்
இனிப்பும் உண்டு கசப்பும் உண்டு.
அன்பும் உண்டு வெறுப்பும் உண்டு.
வெறுக்கபப்பட்டவர்களை விரும்புவோரும் உண்டு.
கை நாட்டுஆட்சியை
விரும்வோரும் எதி்ப்போரும் உண்டு.
கை நாட்டு சுய நினைவா ?
கட்டாயமா ?
பார்த்த பொது மனிதன்
வார்டு கண்ணாடி ஓட்டையில் கூட இல்லை
என்ன மர்மமோ ?
புரியாத புதிர்.
பொது்தேர்தல் பொதுநோக்கர்கள் வேண்டாமா !
சிந்திப்பீர்கள்

புரியவில்லை

நான் பேசுவது புரயவல்லையா !
பேசத்தெரியவில்லையா ?
உலக நடை முறை புரியவில்லையே !
பாரதத்தை கொள்ளை அடிக்க வந்தவர் பலர்.
செல்வச் செழிப்பான பாரதம்
ஏன் தன் தொழில் வளம் மறந்து
மொழிவளம் மறந்து
கலை வளம் மறந்து
உயர் பண்பாட்டினை மறந்து
ஆங்கிலம உயர்ந்து என்ற நிலை
வரக் காரணம்
ஜாதிக் கொடுமைகளா ?
சாதனைகள்  அறியா
புரியா
தெளியா
மன்னர்களா ?
பச்சோந்திகளா ?
சுயநலமுள்ளோர்களா ?
பங்காளிப்பகையா!
இன தேச துரோகிகளா ?
ஆன்மீக ஏமாற்றுக்காரர்களா !
புரியவில்லையே!
இறைவழிபாடு ஆடம்பரம்
அந்த இறைவனருளாலா ?
புரியாத பேச்சா ?
அறியாத வாக்காளரகளா .?

செவ்வாய், அக்டோபர் 25, 2016

வித விதமான மாண்புகள்.

தலாக்  இஸ்லாமிய  தர்மம்  அதாவது  அறம்.

கிளி போல  ஒரு  மனைவி இருந்தாலும்  குரங்குபோல் ஒரு  வைப்பாட்டி---பெரிய  மனிதர்கள்  கௌரவம்.
மாற்றான்  மனைவிக்கு  வாழ்வளிப்பது  ஒரு புரட்சி.
மாற்றான்  கணவனை வைத்து  சிலை  வைப்பதி புரட்சி  மார்க்கம்.
மனைவி  துணைவியாகி துணைவியின்  மனைவி  என்பது  ஒரு  ரகம்.

ஆண்மை இல்லாதவனுக்கு  திருமண செய்வித்து அவளிடம்  இன்பம்  காண்பது  ஒருவகை.

அறுபது  வயதுக்குமேல்   ௨௯ஐ  திருமணம் செய்வது  சீர்திருத்த  பகுத்தறிவு.

இப்படி  பார்த்தால் இராமாயண காலத்தில்  இன்று வரை  ஆட்சி செய்வோர் அனைவருமே

தனிப்பட்ட  வாழ்க்கையில்  தரமானவர்களா ?  என்பது கடினம்.மனசாட்சி  இல்லா விஷயங்கள்,

சனி, அக்டோபர் 22, 2016

மனிதன் நிறம்

நிறங்கள் மாறுகின்றன.
பச்சோந்திகள் மாறுவது
இறைவனளித்த வரம்.
மனிதனின் வண்ண மாற்றம், 
கட்சி மாற்றம், கொள்கை மாற்றம்
கொள்ளை அடிக்கும் மாற்றம்.
பச்சோந்தி நிறமாற்றம் அறிய முடியும்.
மனிதனின் சந்தர்ப சூழ் நிலை மாற்றம்
அது ஒரு நிறமாற்றம்.
அதை அறிந்தும்புரிந்தும்தெளிந்தும்,
குற்றம் புரியும் மனிதனுக்கு
இயற்கை வண்ணங்களின் சாபபே
இன்னல்-இனிமை.

வியாழன், செப்டம்பர் 01, 2016

வன் முறை

இன்றைய தமிழை பற்றி அறிய இரண்டுநிமிடம் ஒதுக்கி படி தமிழா!!!                    தஞ்சாவூரிலிருந்து சென்னைக்குப் புதியவராக வந்தார் ஒருவர். ஒரு கடைக்கு போனார். ஒரு பொருளைக் காட்டி, “இது என்ன விலை அய்யா?” என்றார். கடைக்காரனுக்குக் கோபம் வந்தது. “என்ன அப்பா, பெரிய சீமான் என்று நினைத்துக்கொண்டு பேசுகிறாயோ?” என்றான். தஞ்சாவூராக்கு ஒன்றுமே விளங்கவில்லை. பேசாமல் நின்றார். அவருக்கும் கோபம் வந்தது. சிறிது அமைதிக்குப் பிறகு கடைக்காரன் அவரைப் பார்த்து, “மனிதனுக்கு மனிதன் சமமாக எண்ணிப் பேசு அப்பா. அய்யா கிய்யா என்று இப்படிப் பேசுகிறாயே?” என்றான். பக்கத்திலிருந்த ஒருவர் அப்போது குறுக்கே வந்து தஞ்சாவூர்க்காரரைப் பார்த்து, “நீங்கள் வெளியூர்க்காரர்போல் தெரிகிறது. இங்கே அய்யா என்று கூப்பிட்டால் கோபம் வரும். அப்படிப் பேசாதீர்கள்” என்றார். உடனே தஞ்சாவூர்க்காரர் இவரைப் பார்த்து, “கடைக்காரர்மட்டும் என்னை அப்பா கிப்பா என்று ஒருவகையாகப் பேசுகிறாரே அதுமட்டும் தகுமா?” என்றார். அப்போதுதான் ஒருவர்கொருவர் கொண்ட கோபத்தின் காரனம் விளங்கியாது.
தஞ்சாவூர் தமிழ்நாட்டில் உள்ள நகரம். சென்னை தமிழ்நாட்டின் தலைநகரம்.அப்படி இருந்தும், 'அய்யா' என்றால் சென்னைத் தமிழர்க்குக் கோபம் வருகிறது. 'அப்பா' என்றால் தஞ்சாவூர்த் தமிழர்க்குக் கோபம் வருகிறது. இருவரும் பேசுவது ஒரே மொழியாக இருந்தபோதிலும், இப்படி இடத்துக்கு இடம் பேச்சில் வேறுபாடு இருப்பதைக் காணலாம்.
திருநெல்வேலியில்,"ஒரு குவளையில் குடிக்கத் தண்ணீர் கொண்டுவா" என்பார்கள்;"வாளியால் தண்ணீர் கொண்டுவா'"என்பார்கள். வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு,செஙகல்பட்டு ஆகிய ஜில்லாக்களில் வாழும் தமிழர்களுக்குக் 'குவளை' என்றாலும் தெரியாது; 'வாளி' என்றாலும் தெரியாது. 'டம்ளர்', 'பக்கெட்' என்று ஆங்கிலச்சொற்களைச் சொன்னால்தான் தெரியும். தமிழ் நாட்டின் தெற்குப் பகுதியில் குடிநீர்க்குப் பயன்படும் நீர் நிலையை 'ஊருணி' என்று சொல்வார்கள், வயல்களில் பயிருக்குப் பயன்படுமாறு நீர் தருவதைக் குளம் என்று சொல்வார்கள். மற்றப் பகுதிகளில் குடிதண்ணீர் தருவதைக் குளம் என்றும், பயிருக்குப் பயன்படுவதை ஏரி என்றும் சொல்வார்கள். இப்படி இடத்துக்கு இடம் சில சில சொற்கள் வேறு வேறு பொருளில் பேசப்படுவதைக காணலாம். நூற்றுக்கு 90,95 சொற்கள் எல்லா இடங்களுக்கும் பொதுவாக ஒத்திருக்கும். ஆனால், நூற்றுக்கு 10 அல்லது 5 சொற்கள் வெவ்வேறாக இருக்கும். இப்படி வெவ்வேறாக உள்ள சொற்களை என்ன என்று சொல்வது? அவைகளையே இடப்பேச்சுக்கள்(dialects) என்று சொல்வார்கள்.
ஒரு மலைக்கு இந்தப் பக்கம் ஓர் ஊரும் அந்தப் பக்கம் ஓர் ஊரும் இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். இரண்டு ஊரிலும் உள்ளவர்கள் ஒரே மொழி பேசுகின்றவர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். நாளடைவில் இவர்களுடைய பேச்சில் ஒற்றுமை இருந்த போதிலும் சில வேறுபாடுகள் அமைந்து விடும். இதற்குக் காரணம் அந்த ஊர்களுக்கு இடையில் மலை நின்று போக்குவரவுக்குத் தடையாய்ப்பிரித்த பிரிவே ஆகும். ஆறு முதலியவைகளாலும் இப்படிப் பிரிவு ஏற்பட்டு, இடப்பேச்சு வேறு வேறாக அமைவது உண்டு. ஒரு ஜில்லாவுக்கும் மற்றொரு ஜில்லாவுக்கும் உள்ள பேச்சிலும் இப்படியே இடம் காரணமாக வேறுபாடு ஏற்படும்.
மலையாள மொழி ஒரு காலத்தில் தமிழாகவே இருந்ததுதான். ஆனால், மேற்குத் தொடர்ச்சிமலை பிரித்தபடியாலும், அரசாங்கம் வேறாக இருந்ததாலும், அந்த நாட்டு மக்கள் பேசும் பேச்சு மெல்ல மெல்ல மாறிவிட்டது. நூற்றுக்கு ஐந்து பங்காக இருந்த வேறுபாடு நூற்றுக்கு ஐம்பதாக ஆகிவிட்டது. அதனால் அங்கே தமிழ் மறைந்து வேறு தனிமொழியாக ஏற்பட்டுவிட்டது. இடப் பேச்சாக உள்ள ஒரு மொழியின் பிரிவு, நாளைடைவில் இப்படி வேறொரு மொழியாகவே மாறுவது உண்டு. தெலுங்கும் கன்னடமும் ஒரு காலத்தில் இப்படி இடப்பேச்சுக்களாக இருந்து மாறி ஏற்பட்டவைதான். நாம் இப்போது தமிழ்நாட்டில் பேசும் பேச்சும் ஒருவகையாக இல்லை. ஆனால், புத்தகங்கள், பத்திரிகைகள், வானொலி முதலிய காரணங்களால், எல்லாப் பகுதிகளுக்கும் பொதுவான தமிழ் ஒன்று இருந்துவருகிறது. அதனால் தமிழர் ஒர் இனமாய்ப் பழகமுடிகிறது.
இவ்வாறு, இடப்பேச்சு ஏற்படுவதற்கு இடம் காரணமாக இருப்பது தவிர, வேறு சில காரணங்களும் உண்டு. வியாபாரிகள் பேசுகின்ற பேச்சில் சில தனிப்பண்புகள் உண்டு. வழக்கறிஞர்கள் சட்டத்தில் பழகிப் பேசும் பேச்சில் சில வேறுபாடுகள் உண்டு. சமயத்துறையிலும் இப்படிப்பட்ட இடப்பேச்சுக்களைக் காணலாம். சைவர், வைணவர், கிறிஸ்தவர், முகமதியர் எல்லோரும் தமிழரே ஆனபோதிலும், இவர்களின் சமயத்துறையில் வெவ்வேறு சொற்கள் பேசப்படுகின்றன. பதி, பசு என்றால் சைவர்களுக்குப் பொருள் வேறு. அமுது, திருவடி என்பவற்றை வைணவர்கள் குறிப்பிட்ட பொருளீல் வழங்குகிறார்கள். இவைகளும் இடப் பேச்சுக்களே. அரசியல் வைத்தியம் முதலிய மற்றத்துறையிலும் இடப்பேச்சுக்களைக் காணலாம். உதாரணம் பாருங்கள்: பொதுவான தமிழில் 'வரவு' என்றால் வருதல் என்று பொருள். 'செலவு' என்றால் என்றால் செல்லுதல் என்று பொருள். ஆனால் வியாபாரிகள் பேச்சில் 'வரவு', 'செலவு' என்றால் வந்த பணம், செலவான பணம் என்று பொருள். உங்களுக்கு நன்றாகத் தெரிந்த வேறு உதாரணங்கள் கேளுங்கள்: பொதுவான தமிழில் 'பெயர்' என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியும். ஆனால், இலக்கணத்தில் 'பெயர்' என்றால், நால்வகைச் சொல்லில் ஒருவகை என்று அறிவீர்கள். 'வினை' என்றால், பொதுவான தமிழில், தொழில்,செயல், வேலை என்று பொருள்படும். ஆனால் சமயத்துறையில் 'வினை' என்றால், ஊழ்வினை என்று பொருளாகிறது. இலக்கணத்தில் 'வினை' என்றால், ஒரு வகைச்சொல்லைக் குறிக்கிறது. இப்படியே ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு துறையிலும், சில சொற்கள் வெவ்வேறாகப் பொருள் உணர்த்தக் காண்கிறோம். இவைகளே இடப்பேச்சுக்கள்.இலங்கையில் உள்ள தமிழர்கள் பேசுவதும் தமிழே. ஆனால் இடப்பேச்சாக அவர்களின் தமிழிலும் சில வேறுபாடுகள் உண்டு. ஓய்வாக என்று நாம் சொல்வதை அவர்கள் 'ஆறுதலாக' என்பார்கள். ஆறுதலாக என்றால் நமக்குப் பொருள் வேறு. 'நாங்கள்' என்பது தன்மைப் பன்மையான சொல். அதில் எதிரில் உள்ளவர்களைச் சேர்த்துப் பேசும் கருத்து இல்லை. 'நாம்' என்பது அப்படி அல்லாமல், எதிரில் உள்ளவர்களையும் சேர்த்துப் பேசும் கருத்து உடையது. ஆனால் இலங்கைத் தமிழில், 'நாங்கள்' என்பதே வழங்குகிறது. அதற்கு நாம் என்பதே பொருளாக உள்ளது.இடப்பேச்சுக்களில், சொற்கள் வேறுபொருள் உணர்த்துவது மட்டும் அன்று. வேறு வேறு வகையாகவே ஒலிக்கப்படுவதும் உண்டு. 'வாழைப்பழம்' என்பதைச் சில இடங்களில் 'வாயப்பழம்' என்று ஒலிக்கிறார்கள். வேறு சில இடங்களில் 'வாளப்பளம்' என்கிறார்கள். இப்படி ஒலி வேறுபடுவதும் இடப் பேச்சாகவே கொள்ள வேண்டும். நிரம்ப நல்லவர் என்பதைச் சில இடங்களில் 'ரொம்ப நல்லவர்' என்பார்கள். சில இடங்களில் 'ரம்ப நல்லவர்' என்பார்கள்.தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர் பேசும் சொற்கள் ஒருவகையாக ஒலிக்கப்படும். சாதியை ஒட்டித் தொழில் அமையும் இடங்களில், ஒவ்வொரு சாதியும் வெவ்வேறு வகையாக ஒலிப்பது உண்டு. 'இருக்குது' என்று சிலர் பேசுவார்கள். 'இருக்கு' என்று சிலர் சொல்வார்கள். 'கீது' என்று சிலர் ஒலிப்பார்கள். இவைகளும் இடப்பேச்சுக்களில் சேர்க்கப்பட வேண்டியவைகளே. இவைகளில் எவ்வளவோ தவறுகள் உண்டு. ஒவ்வொரு வகையார் ஒவ்வொரு வகையான தவறு செய்வார்கள்.புத்தகங்களில் உள்ளபடி சொற்களை ஒலிக்காமல், வெவ்வேறு வகையாகக் குறைத்தும் மாற்றியும் ஒலித்தால் அவைகள் கொச்சை ஒலிகள் என்று கூறப்படும். 'ஏன் அடா', 'மூன்று' முதலியவைகளை 'ஏண்டா', 'மூணு' என்றெல்லாம் ஒலிப்பது கொச்சையே ஆகும். 'வந்தது', 'போனது', இழுத்துக்கொண்டு' முதலான சொற்களை 'வந்துச்சி', 'போச்சி', 'இசுத்துக்கினு' என்று கொச்சையாக ஒலிப்பார்கள். இந்தக் கொச்சை ஒலிகளில் சில படிப்படியாகச் செல்வாக்குப் பெற்று நல்ல மொழியாக மாறிவிடுவதும் உண்டு.பாய்கிறது என்பதைப் பாயுது என்றும், பிறக்கிறது என்பதைப் பிறக்குது என்றும் பாரதியார் பாட்டில் கேட்கிறோம் அல்லவா? இவைகளை இலக்கணத்தில் மரூஉ என்று குறிப்பிடுவார்கள். ஆனால் நாகரிகம் குறைந்த தாழ்வான மக்கள் பேசும் பேச்சின் ஒலிகள் இவ்வாறு மரூஉ என்று கொள்ளப்படுவதில்லை. உயர்ந்தவர்கள் - பெரும்பான்மையோர் - கொச்சையாக ஒலிக்கும் ஒலிகளே நாளடைவில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.இந்தக் கொச்சைத் தன்மை சொற்களின் ஒலியில் ஏற்படாமல், சொற்களின் பொருளில் ஏற்பட்டால், அவைகள் கொச்சைமொழிகள் (slang) எனப்படும். "பணம் இருந்தால் நடக்கும்" என்று ஒருவன் சொல்ல விரும்புகிறான். ஆனால் அப்படிச்சொல்வதில் புதுமை இல்லை, சுவை இல்லை; ஆகையால் கேட்போரின் கருத்தைக் கவர்வதற்காக அவன் என்ன சொல்கிறான் தெரியுமா? எல்லோரும் நெடுங்காலமாகச் சொல்லி வந்த 'பணம்' என்னும் சொல்லைச் சொல்வதில்லை. அந்தச் சொல்லால் பயன் குறைவு என்று உணர்ந்து, அதற்குப் பதில் 'வெள்ளையப்பன்' என்கிறான். "வெள்ளையப்பன் இருந்தால் நடக்கும்" என்று அவன் மாற்றிச் சொல்லும்போது கவர்ச்சியாக இருக்கிறது. "அடி கொடுப்பேன்", "உதை கொடுப்பேன்" என்று சொல்லாமல், "பூசை கொடுப்பேன்" என்று சொல்லும்போது புதுமையின் கவர்ச்சி இருக்கிறது. வியாபாரத்தில் நஷ்டமாகிவிட்டது என்னும்போது, "மொட்டையாய் விட்டது" என்று சொல்வதும் அப்படியே. பரீட்சையில் தவறிவிட்டான் என்று சொல்லாமல் "பரீட்சையில் கோட் அடித்தான்", "பல்டி போட்டான்" என்று சொல்வதும் அப்படியே. உணவு விடுதியை ஓட்டல் என்று சொல்லாமல் "மாமியார் வீடு" என்று கூறுவதும் அந்த வகையே ஆகும்.ஆனால், இப்போது சொன்ன இந்தப் புதுச்சொற்களைப் பாருங்கள். இவைகளை இடப்பேச்சுக்கள் என்று சொல்ல முடியாது. இடப் பேச்சாக இருந்தால், ஒரு ஜில்லாவில், அல்லது ஓர் ஊரில், அல்லது ஒரு துறையில், அல்லது ஒரு கூட்டத்தாரிடத்தில் வழங்க வேண்டும். ஆனால் 'வெள்ளையப்பன்', 'பூசை', 'மொட்டை', 'மாமியார் வீடு' முதலானவை ஒரு குறிப்பிட்ட இடத்தில் அல்லது துறையில் பேசப்படுகின்றவை அல்ல. பழக்கப்பட்டுப்போன பழஞ் சொற்களுக்குப் புதிய உயிர், புதிய கவர்ச்சி தரவேண்டும் என்று நினைக்கிறவர்கள் எல்லாரும் இந்தச் சொற்களைப் பேசுகிறார்கள். ஆகையால் இவைகள் இடப்பேச்சில் அடங்காமல், கொச்சைமொழிகள் என்று குறிக்கப்படும். இடப்பேச்சுக்களைப் பேசுகின்றவர்கள், வேறு பாடுகளை அறியாமலே பேசுகின்றார்கள். அவர்களை அறியாமலே ஊருக்கு ஊர், துறைக்குத் துறை, கூட்டத்துக் கூட்டம் சொற்கள் மாறியிருக்கின்றன. ஆனால், மேலே குறிக்கப்பட்ட கொச்சைமொழிகள் அப்படிப்பட்டவை அல்ல. பேசுவோர் தாங்களாகவே புதுமையாகப் படைத்துப் பேசுகின்ற சொற்களாகும். இடப்பேச்சுக்கள், இயல்பாக மக்களிடையே ஏற்படுகின்றவை. கொச்சைமொழிகள், மக்கள் வேண்டும் என்றே கவர்ச்சிக்காக ஏற்படுத்துகின்றவை. ஆகையால் அவைகள் வேறு, இவைகள் வேறு.கொச்சைமொழிகளை முதலில் பேசுகின்றவர்கள் யார்? ஒரு கூட்டத்தார் அல்லது ஓர் இடத்தார் அல்ல. கவர்ச்சியிலும் புதுமையிலும் ஈடுபட்டவர்கள் யாரோ, அவர்களே இப்படிக் கொச்சை மொழிகளைப் பேசத்தொடங்குகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் இளைஞர்களே. வாழ்க்கையில் விளையாட்டு உணர்ச்சி உடைய இளைஞர்களே இப்படிப் புதிய கவர்ச்சியான சொற்களைப் படைத்துப் பேசுகின்றார்கள். இவற்றைப் படைப்பதில் ஒருவகை இன்பம் இருக்கின்றது. கேட்பதில் ஒரு வகையான ஊக்கம் இருக்கின்றது. அதனால் இந்தச்சொற்கள் வேகமாக மக்களிடையே பரவுகின்றன. சில சொற்கள் மிகவும் இழிவான, மட்டமான போக்கில் அமைந்துவிடும். அப்படி அமையாமல் காத்துக்கொண்டால், இவற்றை யாரும் வெறுக்க மாட்டார்கள்.ஆனால் ஒன்று, இடப்பேச்சுக்கு நீண்ட வாழ்வு உண்டு. கொச்சைமொழிகள் நெடுங்காலம் வாழ்வதில்லை.காரணம் தெரியுமா? இன்று, கவர்ச்சியான புதுமை வேண்டும் என்று "அவனுக்குப் பூசை விழுந்தது" என்கிறார்கள். இதையே பலமுறை பல ஆண்டுகள் சொல்லிப் பழகிவிட்டால் கவர்ச்சியும் புதுமையும் இல்லாமற் போகின்றன. பழக்கம் எதையும் எப்படிப்பட்டதையும் பழையதாக்கிவிடும் அல்லவா? நேற்றுப் புதிதாக இருந்த சொல், இன்று பழைய சொல் ஆகிவிட்டால், நாளைக்கு வேறொரு புதுச்சொல் வேண்டியதாக ஏற்படுகிறது. இந்த நிலையில், அந்தப் பழைய சொல் மறந்து கைவிடப்படுகிறது. அதனால்தான், கொச்சைமொழிகள் நீண்ட காலம் வாழமுடியாமல் அவ்வப்போது மறைந்து போகின்றன.எண்ணம் எழத்து பல்லடம் சிவகுருநாதன்....

புதன், ஆகஸ்ட் 31, 2016

சமுதாய சிந்தனை

காதல் கொலைகள் அதிகரிக்கின்றன.
காரணம் திரைப்படமா? இன்றைய கல்விமுறையா? ஆன்மீக ஆஷ்ராமங்களா? அரசியல் தலைவர்களா?
நான்குமே தான். அரசன் எவ்வழிஅவ்வழி குடிகள்.
இன்றைய சமுதாயம் ஒழுக்கமின்றி கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்றுஉள்ளது.
இதில் அதிக பாதிப்பு இளைஞர்கள்.
காதல் திருமணம் என்பது கதையிலும் புராணங்களிலும் அரசபரம்பரையிலும் வன்முறை கௌரவமாக வரலாற்றில் உள்ளன.
அந்தப்புரங்களில் அழகிகளின் சிறைக்கூடமாக இருந்துள்ளன.
ஆஷ்ராமங்களில்ஆண்டவனே சாக்ஷி.
புலன் அடக்கம்,தியானம், யோகா, இறைபயம் . மரண நிச்சயம், கட்டுப்பாடு என்பதே கூடாதுஎன்ற கல்விமுறை.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற அவ்வைவாக்கியம் எடுத்த தமிழ் பாடநூல் வெளியீட்டிலிருந்து தான் இந்த வன் முறை.
மனித நேயம், தேசீயம் ,இல்லை.
ஒழுக்கம்விழுப்பம் தரலான்ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் .
ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றில் எழுமையும் ஏமாப்புடைத்து .
ஐம்புலன் அடக்கல் இல்லா வலை தளம், திரைப்படம். அரசியல், ஆன்மிகம்,கல்வி முறை மாற வேண்டும்.











































சமுதாய சிந்தனை

காதல் கொலைகள் அதிகரிக்கின்றன.
காரணம் திரைப்படமா? இன்றைய கல்விமுறையா? ஆன்மீக ஆஷ்ராமங்களா? அரசியல் தலைவர்களா?
நான்குமே தான். அரசன் எவ்வழிஅவ்வழி குடிகள்.
இன்றைய சமுதாயம் ஒழுக்கமின்றி கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்றுஉள்ளது.
இதில் அதிக பாதிப்பு இளைஞர்கள்.
காதல் திருமணம் என்பது கதையிலும் புராணங்களிலும் அரசபரம்பரையிலும் வன்முறை கௌரவமாக வரலாற்றில் உள்ளன.
அந்தப்புரங்களில் அழகிகளின் சிறைக்கூடமாக இருந்துள்ளன.
ஆஷ்ராமங்களில்ஆண்டவனே சாக்ஷி.
புலன் அடக்கம்,தியானம், யோகா, இறைபயம் . மரண நிச்சயம், கட்டுப்பாடு என்பதே கூடாதுஎன்ற கல்விமுறை.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற அவ்வைவாக்கியம் எடுத்த தமிழ் பாடநூல் வெளியீட்டிலிருந்து தான் இந்த வன் முறை.
மனித நேயம், தேசீயம் ,இல்லை.
ஒழுக்கம்விழுப்பம் தரலான்ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் .
ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றில் எழுமையும் ஏமாப்புடைத்து .
ஐம்புலன் அடக்கல் இல்லா வலை தளம், திரைப்படம். அரசியல், ஆன்மிகம்,கல்வி முறை மாற வேண்டும்.











































சனி, ஆகஸ்ட் 20, 2016

இளைஞர்களே சிந்திப்பீர் !युवकों ! सोचिये !

அன்பு நண்பர்களே ! இனிய காலை வணக்கம்.
ஒருநேயர் ஆலயத்தில் அன்னாபிஷேகம் பற்றியும் பக்கத்தில் ஒருவர் குப்பைத்தொட்டியில்
இருந்து உணவு எடுத்து சாப்பிடுவதுபோல் படம்
போட்டிருந்தார். நின்று படம் எடுத்தவர் அவரைத்தடுத்து உணவளிக்கலாம்.
அதே பக்கத்தில் விபத்து நடந்த இடத்தில் ஒரு அரசியல் பிரமுகர் அங்கு துடித்து உயிர் இழந்தவரின்
நகை திருடும் காணொளி . அது ஒரு ஆண்ட முக்கிய எதிர்க்கட்சி பிரமுகர்.
அறிவியல் முன்னேற்றம் , கைபேசி புகைப்பட வசதி
அனைத்தும் உண்மை வெளிப்படுத்தி மானம் வாங்கும் என்றாலும் இந்த இரக்கமற்ற மான அவமானம் பற்றி சிந்திக்காத அதிகாரிகள் , அரிசியல்வாதிகள் , அவர்களை கண்ணைமூடி
ஆதரவளிக்கும் கூட்டம், வாக்களிக்கும் கூட்டம்,
எதையும் பொருட்படுத்தாமல் மேடையில்
வந்து பேசும் தலைவர்கள்,
ஆவணக்கொலை , ஜாதி மத பேதம் நாடு எங்கே செல்கிறது ?
சுயநலம் .
ஆலய அன்னாபிஷேகம் எதிர்ப்பு ,ஆனால் அதே நேரம் அரைகுறை ஆடை நடிகைகளுக்கு கட்சி பதவிகள், கட்டவுட் பால் அபிஷேகம் எதிர்ப்பு தெரிவிக்காமை , பகுத்தறிவாம் .
இந்த அன்னாபிஷேகம் என்பது அக்காலத்தில்
ஏழைகளுக்கு பிரசாதமாக விநியோகிப்பது.
ஆகையால் அன்னப்ரசாதம் முற்றிலும்
தா னமளிக்கவே. இன்று ஆலயத்திற்குள் பிரசாத விநியோகம். பிச்சைக்காரர்களுக்கு பணம் .பல பேரை சோம்பேறியாக்கி பிச்சைத் தொழில் , அதில்
மிகப்பெரிய பணக்கார பிச்சைக்காரர்கள் பட்டியல் வேறு.
தானம் செய்பவர்கள் அன்ன தான் செய்யவேண்டும். பணதானம் பலவித குற்றங்கள்
அதிகரிக்க அஸ்திவாரம் ஆகிறது. அதுமட்டுமல்ல
குழந்தை கடத்தல், நம் வீட்டிலும் குழந்தைகள் உண்டு. அந்தபிச்சை எடுக்கும் குழந்தை தூங்கிக்கொண்டிருக்கும் . எப்படி? இதிலும் புரோக்கர்கள் / கையூட்டு . பிச்சை எடுக்க அனுமதிக்க
அனைத்துக்கும் ஒரு சங்கம். போக்கிரிகள்.
இளைஞர்களே சிந்திப்பீர். பண தானம் அளிப்பது   கூடாது. அதுவே  குற்றங்களுக்கு  மூல  காரணம்.
பணம்   வாங்கி  ஓட்டளிப்பதும்  ஓட்டுக்கு  பணம்  அளிப்பதும்   தேசதுரோகம்.
காந்திஜியின்   தொண்டு  தன்  கை  முதலீடில்லா  தொண்டு .
ஆஷ்ராமங்கள், அரசியல் கட்சி  கட்டிடங்கள்  , அனைத்துக்கும்  முதலீடு செய்வதால்  ஒப்பந்தம் , தொழில் துவக்குதல்,

கல்லூரி  சேர்க்கை , நியமனம்  , அனைத்திலும்   ஊழல்.  இந்த  நிலை  மாறவேண்டும்.
ஊழல்  
குற்றங்களை , போலிசாமியார்களை , கடத்தல் அனைத்துக்கும் காரணம்.
******************************************************
प्रिय  दोस्तों ,
प्रातः काल  प्रणाम .
 
  एक  दोस्त  ने  लिखा  है   कि  मंदिर  में  अन्नाभिषेक  करते  हैं .
पास  ही   कूड़े  दान  से  भिखारी  खाना  लेकर   खाता   है.
यह  चित्र भी  उन्होंने  दर्ज  किया  है.
उसके  पास  मोबाइल  है , पैसे  हैं , वह  उस  भिखारी  को  रोक , खाना  खिला  सकता  हैं . पर  सस्ता  नाम  पाने की  चाह में  है.
   उसी  पृष्ठ  पर  दूसरी  खबर  हैं , बड़ी  दुर्घटना  हो  गयी हैं .
लाशें  पडी  हैं . वहाँ   आये  पूर्व शासक  दल , आज  के  प्रमुख  विपक्षी  दल   के  एक  राजनैतिक व्यक्ति  गहनों  की  चोर्री कर  रहा  हैं .
इसका  भी मोबाइल   में  चित्र  पकड़ा  गया है. पर रोका  नहीं. किसीने .इस  वीडिओ  के  बाद  भी उस  पर  किसी  ने  कार्रवाई ली  है  या  नहीं  , इसका  समाचार  नहीं है.
  आज  कल  मान -अभिमान   की  चिंता  किसी  को  नहीं  हैं .
धन  की  माया -ममता  सब  को  अँधा बना रहा हैं . लाल -पन्ने  भी  लाकर  के  जेल  खाने से  बचकर   बाज़ार  सजाने  लगते  हैं.
मंच  पर भ्रश्ताचारे  नेता के  भाषण , उसके लिए  अनुयायी , ताली बजानेवाले   ,देश  की  तरक्की  के  बाधक हैं . देश द्रोही  हैं .
चुनाव  के  समय  ओट  पाने -देने  पैसे बांटना  देश द्रोही  है.
     जातीय   गौरव  के  लिए   हत्याएं , जाति  भेद  ,मजहब  भेद  ,आरक्षण सुविधाएं   मनुष्यता  से  बढ़कर  प्राथमिकता  पा  रहे  हैं.

       आन्नाभिषेक  के  विरोधी  नेता   अभिनेता , अभिनेत्रियों  के  कट अवुट  पर  दूध  अभिषेक  को  रोकता भी  नहीं , उसको  अज्ञान  भी  नहीं  कहता.

  मंदिर  में  अन्नाभिषेक , दूध  का  अभिषेक  सब   गरीबों  को  वितरण
करने  के लिए.  पर  बाहर  बैठे  भिखारियों  को  नहीं  बांटते हैं .
भिखारी को  पैसे  देते हैं. यह  भिखारी पैसे  दान  ही  कई अपराधियों  की प्रेरणा  है.  भिखारियों  को  भीख  लेने  की अनुमति , बिठाना,इन  सब  में बदमाश , पुलिस , राजनैतिक का  हाथ  है.
 अमीर  भिखारियों  की सूची , संपत्ति  आदि  विवरण  you tube  में  हैं . पैसे  नहीं  डालना चाहिए. पैसे  के  कारण ही भिखारियों  की संख्या  बढ़  रही  हैं . एना दान  , वस्त्र दान  ठीक है, इनमें  भिखारी दलालों  के  हाथ का  बेगार  बन  जाता  है. दलालों  के  समर्थन  में राजनीती , राजनीति के अधीन प्रशासन . पैसे -पैसे -पैसे. न्याय ?नदारद.
  आश्रम  की  इमारतें किसी  राजमहल  से  कम नहीं  हैं .
राजनैतिक दलों  के  कार्यालय  भी. इन  इमारतों  से  ही पता  लगता हैं  कि  ये भ्रष्टाचार बढाने  के  अंग  हैं . जहाँ  पैसे , वहाँ  अनाचार.

 करोड़ों  के  खर्च  करके वैधानिक , सांसद , मंत्री  ये चुनाव  के  काले धन  जोड़नेवाले. खिलाड़ी , अभिनेता , अभिनेत्री सांसद , विधायक जिनको  सांसद  या  विधान  सभा  जाने को फुरसत  नहीं , पर  वेतन पाने  जाते हैं .
 इन आश्रम और  राजनैतिक  बेनामी  के  कालेज , स्कूल , चिकित्सालय  में  मनमाना  शुल्क.  परदे  के  पीछे  ये  सरकारी स्कूल -कालेज  को  नालायक स्थापित कर  रहे  हैं.

युवकों  ! सोचिये ! देश बचाइये.  

வியாழன், ஆகஸ்ட் 11, 2016

भारतीय व्यवहार

पहले नागरिकों में न समानता।
वोट कै लिए सब के सब स्वार्थ।
हज यात्रा   की सरकारी मदद।
बलात्कारियों को छुडाने वकील।
खूनियों को छुडाने  पैसै।
आरक्षण| की नचावत ति अलग।
सत्तर साल की आजादी।
अपने को  पिछडे जातियों की सूची में
मिलाने  हडताल - बंद।
मजहब ,जाति-संप्रदाय की लडाइयाँ।
    कच्ची सडकें , किसानों की गरीबी।
शिक्षा की महँगाई।
भारतीय भाषाएँ ,
जीविकेपार्जन की येगायता नहीं।
अंग्रेजियत और अंद्रेजी का गुलाम
सत्तर साल में गो हत्या रोकने न कदम।
भ्रष्टाचारी अपराधी खूनी बनते
सांसद विधायक और मंत्री।
कालै धन की नदियाँ बहती
चुनाव के अवसर पर ।
न कोई विरोध।

ஞாயிறு, ஆகஸ்ட் 07, 2016

எனது குரல் /குறள்



௧. தொலைக்கா நட்பே நட்பென்க-

நட்பல்ல

 தொல்லைக்காக வரும் நட்புணர்க.

௨  .சொல் என்பது சொல்லும் விதத்தில் சொல்க, அதுவல்லது

       வகை யற்ற சொல் பகை வளர்ப்பதாகிவிடும்.

௩. சொல்லல   மனப் பிணி  தரும் சொல், நாட 
    
     வலம்  வரும்  சொல்லே வளம்.
௪.எல்லோரும் இன் சொல்லால் இன்புற்றிருப்போம்,

   வன்சொல்லால் வளருமே பகை.

5.  சொல்லுக   செயலாக்கச்  சொற்களை --நிற்க 
     செயற்றத்திற்கே. 

௬.அன்பற்ற  சுடுசொல்   நிலைப்பகையே ,அது 
     பண்பற்ற   செயலே  தரும் .

௭. அவையறிந்து  சொல்க சொற்களை ,  இல்லையென்றால் 
     தன் மானம்   தானே  கெடும். 

௮. சொல்லில்  உயர்சொல்   சொல்லுக , அதுவன்றி 
        தாழ்  சொல்  தாழ்வே  தரும். 

௯.  வாழ்த்தும்  சொற்களே  வாழ்வுதரும் , பிறரைத் 
       
       தாழ்த்தும்  சொற்கள்  தாழ்வு  தரும்   காண்.

௧௦.    போற்றும்  சொற்களே  புகழ்  தரும் , தூற்றும் 

         சொற்கள்  உன்னை  தூளாக்கும் .

      
    















எல்லோரும் இன் சொல்லால் இன்புற்றிருப்போம், வன்சொல்லால் வளருமே பகை.