ஒரே குரல்
கபீர் தாசரின் ஞானமார்க்கம் , ராமநாமத்தைக்கூறினாலும் ,
அது அருவ வழி பாட்டில் உறுதியாக இருந்தது..
கல்லின் உருவத்தை வழிபட்டால்அது அருவ வழி பாட்டில் உறுதியாக இருந்தது..
இறைவன் கிடைப்பான் எனில்
நான் மலையை வைத்து வழி படுவேன்.
.திருகைக்கல் (மாவு இறைக்கும் இயந்திரம்))
வழிபட்டால்
மாவு கிடைக்கும்
.கல்லின் உருவ வழிபாட்டால்
என்ன கிடைக்கும் ? என்பார்..
நான்கு புஜம் கொண்ட இறைவனை அனைவரும் வழிபடு கின்றனர்.
.சாதுக்களும் சன்யாசிகளும் அந்த நான்கு
புஜ இறைவனில்
மெய் மறந்து இருக்கும் போது
கபீராகிய நான் வழிபடும்
இறைவனின் கரங்கள் எண்ணிக்கையிலடங்கா..என்பார்..
இந்த ஞானமார்க்கம் பக்தி மார்கமாக வழிகாட்டும் நேரத்தில்,
சூபி சாதுக்களால் இறைவனை அடைய அன்பு மார்க்கம் தோன்றியது..
அதில் இந்துகளின் காதல் வீர தீரங்களின் கதைகள் ,போராட்டங்கள்
வர்ணிக்கப்பட்டு அவ்வாறே இறைவனின் மீது காதல் கொண்டு
இறைவனை வழிபட வேண்டும்
என்றும்
அன்பே /காதல் வயப்படுவதே இறைவனை அடையும்
மார்கமாக வலியுறுத்தப்பட்டது..
அருவ வழிபாட்டில் மனிதநேயம் ,மத ஒற்றுமை வலிவுறுத்தப்பட்டது .
கபீர்தாசர் இந்து முஸ்லிம் இரு தர்மங்களின்
மூட வழக்கங்களை கண்டனம் செய்தார்..
மசூதியில் குரான் அதிக ஓசையுடன் ஓதினால் இறைவன்
செவிடாகிவிடுவான்..
அமைதியாக தொழ வேண்டும் என்கிறார்.
தலையை மொட்டை அடிப்பதால் இறைவன் அருள் கிட்டும் என்றால்
முதலில் செம்மறி ஆடுகளுக்கே கிட்டும்;;
அவை தான் தன ரோமங்களை ஆடை
அளிப்பதற்காக அடிக்கடி மழி த்துக்கொள்கிறது .
இந்த பக்தி மார்க்கம் வழி காட்டும் நேரத்தில்
இந்துக்களின் உருவவழி பாடு
முக்கியத்துவம் அடைந்தது.
.அதில் கருத்து வேறுபாடு தோன்றியது..
மரியாதை புருஷோத்தமன் ராமனை வழிபடும் ராம மார்க்கம்..
உலக ரக்ஷகன் என்ற முறையில் பிரபல மடைந்தது..
துளசிதாசரின் ராமசரிதமானஸ் மக்கள் புரியும் அவதி மொழியில்
எழுதப்பட்டதால்
மூல நூலான வால்மீகி ராமாயணத்தை விட புகழ் பெற்றது.
.ஒவ்வொரு இல்லத்திலும் துளசிராமாயணம் பக்தி சிரத்தையுடன்
படிக்கப்பட்டது.
.அவர் எழுதிய ஹனுமான் சாலீசா ப்ரத்யக்ஷ பலன் தரும்
உடனடி இன்னல் போக்கும் ஜப நூலானது.
.
அந்த பக்திகாலத்தின் மற்றொரு மார்க்கம் கிருஷ்ண பக்தி மார்க்கம்
.
.அதன் கவிஞர் சூர்தாஸ் கிருஷ்ணனின் பால லீலைகளின் வர்ணனையால்
கிருஷ்ண பக்தியை பிரபலப் படுத்தினார்..அவர் வ்ரஜ மொழியில் எழுதிய
சூரசாகர் மிகவும் பிரபலம் அடைந்தது..இதில் பகவான் கிருஷ்ணர்
லோகரஞ்சகராகவும்,லோகரக்ஷகராகவும் வர்ணிக்கப்பட்டார்.
இருமனைவிகள் கொண்ட கிருஷ்ணனை கோபிகள் அதிகம்
விரும்பினர்.
.இப்பொழுதும் பெண் பார்க்கும் பொழுது அதிகமான பெண்கள்
பாடுவது அலைபாயுதே கண்ணா என்ற பாடலே.
.கோபிகளுடன் கிருஷ்ணன் செய்யும் லீலைகளால்
ராம பக்தியை விட கிருஷ்ணனை அனைவரும் விரும்பினர்.
.
ராமர் தன் மனைவி சீதையை அக்னி பரீக்ஷை செய்தும்
காட்டிற்கு அனுப்பியதும் , இல்லற வாழ்க்கையில்
திருமண நிகழ்ச்சியில் " சீதா கல்யாண
வைபோ கமே" என்று பாடினாலும்,
ஆஷிர்வாதம் செய்யும் பொழுது
ராமர் போன்று குழந்தை பிறக்கவேண்டும் என்று கூறப்படுவதில்லை..
கிருஷ்ணா விக்ரகம் போன்று அழகான குழந்தை என்றே கூறுகின்றனர்..
சக கிழத்தி இருப்பது ஆண்மையின் லக்ஷணமோ?
ராமநாவமியைவிட கிருஷ்ணா ஜெயந்தி பிரபலம்..
(தொடரும்))