ஞாயிறு, ஜூலை 21, 2013

மக்களிடையே வருமா விழிப்புணர்ச்சி!!!

பெற்ற அறிவை பங்கிடுதல்,
பெற்ற அனுபவத்தை பங்கிடுதல்,
பெற்ற ஆனந்தத்தைபங்கிடுதல்
பெற்ற மகிழ்ச்சியைப் பங்கிடுதல்
பெற்ற ஆஸ்தியைப் பங்கிடுதல் -என
பெற்றவற்றை மற்றவர்களுக்கு
பங்கிடுவதில் மட்டற்ற மகிச்சியே  காண்.
அறிவைப்பங்கிடுவதால் அறிவு பெருகும்.
சிந்தனைகள் சிறகடிக்கும்.-நற்
சிந்தனை கருத்துரைகள் விவாதங்கள்,
நானிலத்தை சிறக்கவைக்கும்.-இன்றைய
அறிவு வளர்ச்சிகள்,அன்பைப் பெருக்குகிறதா?
பண்பைப் பெருக்குகிறதா  என்ற சர்ச்சை.
அனைத்திற்கும் முதலீடு.
குழந்தை பிறக்க இலக்ஷங்கள் .
வளர்க்க  இலக்ஷங்கள்.
மூன்று வயதிலி ருந்தே
ஆண்டுக்கு இலக்ஷங்கள்.
மேற்படிப்புக்கு பல இலக்ஷங்கள்.
திருமணத்திற்கு இலக்ஷங்கள்.
இப்படி ஒவ்வொரு படியிலும் இலக்ஷங்கள் .எனவே
இலட்சியங்கள்  கோடி ரூபாய் சேர்ப்பதிலே.
அறிவு வளர்க்கிறது.அறிவியல் வளர்கிறது. ஆஷ்திகள் வளர்கிறது.
அன்பும் பண்பும் பரோபகாரமும்  இரக்கமும் ஒழுக்கமும்
ஊழல் கை ஊட்டு இல்ல தன்னலமற்ற சேவை மனப்பான்மை
வளருகிறதா ? அதுதான் குறைந்து கொண்டே வருகிறது.
விளைவு?செய்த்திதாள்களில்  அன்றாடம்
கொலை,கொள்ளை,தற்கொலை,குடி ,கூத்து கும்மாளம்.
பட்டங்கள் பெற்று என்னபலன்.?!!
சட்டங்கள் பயின்று என்ன பலன்!!!?
குறுக்குவழியில் பணம் சேர்ப்பதே குறிக்கோள் என்றால்
மனிதப் பிறவி எடுத்ததால் என்ன பயன்?
ஆட்சி பீடம் ஆஸ்தி சேர்க்க என்றால்
ஆவி பிரிந்த பின் !!!
வன் முறை அரசியல்;ஜாதி அரசியல்;கள்ளப் பண அரசியல்.
இதை ஒழிக்க எழுமா ஒரு புரட்சி.
கருத்துக் கணிப்புகள் ஊழலுக்கே வெற்றி என பறை சாற்றுகின்றன.
மக்களிடையே வருமா விழிப்புணர்ச்சி!!!