வியாழன், நவம்பர் 15, 2012

என் அம்மாவின் நினைவு அலைகள் --பகுதி 6


என் அம்மாவின் நினைவு அலைகள் --பகுதி 6
என்  அம்மாவிற்கு  இரண்டு அண்ணன்கள். பெரியவர்  தன்  அம்மா  தன்  தம்பிக்கு  அதிக சலுகைகள் தருவதையும் ,  தன்  உழைப்பிற்கேற்ற  அன்பும் மரியாதையும் கொடுக்கவில்லை  என ஊரைவிட்டு சென்றுவிட்டார். என் தாத்தாவின் வருமானத்தில் குடும்பம் நன்றாகவே நடந்துள்ளது.  என் அம்மாவிற்கு ஒரு தம்பி. ஒரு தங்கை.தம்பி வேலைக்கு வந்ததுமே ,குடும்பப்பொறுப்பு 
முழுவதையும் அவரே ஏற்றுக்கொண்டார். தன்  தங்கைக்கு  திருமணம் செய்வது,என் அம்மாவின் பிரச்சனைகளைத் தீர்ப்பது,அம்மாவிற்காக சிலவு செய்வது ,உதவுவது எல்லாமே அவர் தான்.
அப்பொழுதுதான் என் தங்கை பிறந்தாள் .எனக்குப்பின் பிறந்த குழந்தைகள் இறந்ததால் ,என் தங்கைக்கு  வேம்பு என்று பெயர்வைத்தனர்.அப்பொழுது மாமா மதுரையில் பனி ஆற்றினார். ஒருநாள் தங்கை அழுததால் அவளை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றார் அம்மா. அப்பொழுது அங்கு சுப்ரமனியபுரத்தில்  பாலா குருகுலம் என்ற மழலையர் பள்ளி நடந்து கொண்டிருந்தது.
அவர்கள் மூலம் விவரம் அறிந்து பழனியில் ஒரு பள்ளி துவங்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. 1968இல் பழனியில் shree பாலமுருகன் மழலையர் பள்ளி துவக்கப்பட்டது.
பழனி ஆர் .எம்.கே. சித்த வைத்தியசாலை சிவ  சுப்ரமணியம் ஓம்,தலைமையில்  பள்ளி துவக்கப்பட்டது. ஒரு ஆங்கிலோ இந்தியன் ஆசிரியை நியமிக்கப்பட்டார்.ரூபாய் நுழைவுக் கட்டணம் இரண்டு. மாதக்கட்டணம் ரூபாய் 5/- மூன்றாண்டுகள் வரை வருமானம் கிடையாது. அந்த வறுமையான நிலையிலும் அம்மாவின் கடின உழைப்பு  பள்ளி  வளர காரணமாக இருந்தது. ஊர்ப் பெரியவர்களின் ஆதரவும் இருந்தது.  
தொடரும்.

அம்மாவின் நினைவலைகள்--பகுதி--5.


அம்மாவைத் தனிக்குடித்தனம் அல்லது வீட்டிற்கு செல்லவிடாமல் செய்த தாத்தா ,ஒரு தெய்வீக மனிதர்.அவர் தான் மரணம் அடையும் நாளை அறிந்து வைத்திருந்தார்.மரணத்திற்கு இரண்டு நாள் முன்பு அம்மாவை அழைத்து தாத்தா ,கோமதி,! சென்றதைக் கருதாதே, நான் நாளை மறுநாள்  இறந்துவிடுவேன்.எனக்கு சாப்பிட பழங்கள் வாங்கிவா.பள்ளிக்கு லீவு போடு. நான் இறந்த பின் இந்த வீடு துண்டுதுண்டாகி விடும். பல கஷ்டங்கள் வந்தாலும் நீ வீட்டை விற்கமுடியாது. நான் உனக்கு  பக்க பலமாக இருப்பேன்.தெய்வம் துணை இருக்கும்.இந்த ஆசிர்வாதம் செய்ததும்,அவர் சொன்ன படி அவர் இறந்துவிட்டார். அந்த ஆசிகளின் பலன் அந்த வீடு  பல துண்டுகளானாலும்   அம்மா வீட்டைக் காப்பாற்றிவிட்டார்.

           இது தான் ஒரு தெய்வீக சம்பவம்.
1965-67இரண்டு  ஆண்டுகள் அம்மா படுத்த  படுக்கையானார்.அப்பொழுது தலைவர் கே.சின்னப்பன்,அவர்கள் பரிந்துரைப்படி,அம்மா வேலைபார்த்த சொக்கலிங்கக் கவுண்டர்  நினைவு  உயர் நிலைப்பள்ளி,கொரிக்கடவு ,எனக்கு ஹிந்தி ஆசிரியர் பணி கிடைத்தது.ஆனால்,இருமொழிக்கொள்கை ப காரணமாக,பயிற்சி பெறாத ஹிந்தி ஆசிரியர்கள்  பணி இழக்க நேர்ந்தது. அந்நிலையில், எனக்கு அம்மா மிகவும் தைரியமாக இருந்தார். அப்பாவும் கடுமையாக உழைத்து குடும்பத்தைக் காப்பாற்றினார்.அம்மாவின் உடல் நிலை. தேர்ச்சி அடைந்தது.  அச்சமயம்,தக்ஷின் பாரத ஹிந்தி பிரசார் சபா  புதிய ஹிந்தி வகுப்புகள் ஆரம்பிக்கும் திட்டம் கொண்டுவந்தது. அம்மாவும்  ஹிந்தி வகுப்புகள்  ஆரம்பிக்க ஊக்குவித்தார்.
தொடரும்.